< அப்போஸ்தலர் 14 >

1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
తౌ ద్వౌ జనౌ యుగపద్ ఇకనియనగరస్థయిహూదీయానాం భజనభవనం గత్వా యథా బహవో యిహూదీయా అన్యదేశీయలోకాశ్చ వ్యశ్వసన్ తాదృశీం కథాం కథితవన్తౌ|
2 விசுவாசிக்காத யூதர்கள் சகோதரர்களுக்கு விரோதமாக யூதரல்லாதவர்களுடைய மனதைத் தூண்டிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.
కిన్తు విశ్వాసహీనా యిహూదీయా అన్యదేశీయలోకాన్ కుప్రవృత్తిం గ్రాహయిత్వా భ్రాతృగణం ప్రతి తేషాం వైరం జనితవన్తః|
3 அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார்.
అతః స్వానుగ్రహకథాయాః ప్రమాణం దత్వా తయో ర్హస్తై ర్బహులక్షణమ్ అద్భుతకర్మ్మ చ ప్రాకాశయద్ యః ప్రభుస్తస్య కథా అక్షోభేన ప్రచార్య్య తౌ తత్ర బహుదినాని సమవాతిష్ఠేతాం|
4 பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதர்களையும் சிலர் அப்போஸ்தலர்களையும் சேர்ந்துகொண்டார்கள்.
కిన్తు కియన్తో లోకా యిహూదీయానాం సపక్షాః కియన్తో లోకాః ప్రేరితానాం సపక్షా జాతాః, అతో నాగరికజననివహమధ్యే భిన్నవాక్యత్వమ్ అభవత్|
5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது,
అన్యదేశీయా యిహూదీయాస్తేషామ్ అధిపతయశ్చ దౌరాత్మ్యం కుత్వా తౌ ప్రస్తరైరాహన్తుమ్ ఉద్యతాః|
6 இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்;
తౌ తద్వార్త్తాం ప్రాప్య పలాయిత్వా లుకాయనియాదేశస్యాన్తర్వ్వర్త్తిలుస్త్రాదర్బ్బో
7 அங்கே நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
తత్సమీపస్థదేశఞ్చ గత్వా తత్ర సుసంవాదం ప్రచారయతాం|
8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து,
తత్రోభయపాదయోశ్చలనశక్తిహీనో జన్మారభ్య ఖఞ్జః కదాపి గమనం నాకరోత్ ఏతాదృశ ఏకో మానుషో లుస్త్రానగర ఉపవిశ్య పౌలస్య కథాం శ్రుతవాన్|
9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு,
ఏతస్మిన్ సమయే పౌలస్తమ్ప్రతి దృష్టిం కృత్వా తస్య స్వాస్థ్యే విశ్వాసం విదిత్వా ప్రోచ్చైః కథితవాన్
10 ௧0 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
పద్భ్యాముత్తిష్ఠన్ ఋజు ర్భవ| తతః స ఉల్లమ్ఫం కృత్వా గమనాగమనే కుతవాన్|
11 ௧௧ பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி,
తదా లోకాః పౌలస్య తత్ కార్య్యం విలోక్య లుకాయనీయభాషయా ప్రోచ్చైః కథామేతాం కథితవన్తః, దేవా మనుష్యరూపం ధృత్వాస్మాకం సమీపమ్ అవారోహన్|
12 ௧௨ பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள்.
తే బర్ణబ్బాం యూపితరమ్ అవదన్ పౌలశ్చ ముఖ్యో వక్తా తస్మాత్ తం మర్కురియమ్ అవదన్|
13 ௧௩ அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
తస్య నగరస్య సమ్ముఖే స్థాపితస్య యూపితరవిగ్రహస్య యాజకో వృషాన్ పుష్పమాలాశ్చ ద్వారసమీపమ్ ఆనీయ లోకైః సర్ద్ధం తావుద్దిశ్య సముత్సృజ్య దాతుమ్ ఉద్యతః|
14 ௧௪ அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக:
తద్వార్త్తాం శ్రుత్వా బర్ణబ్బాపౌలౌ స్వీయవస్త్రాణి ఛిత్వా లోకానాం మధ్యం వేగేన ప్రవిశ్య ప్రోచ్చైః కథితవన్తౌ,
15 ௧௫ மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
హే మహేచ్ఛాః కుత ఏతాదృశం కర్మ్మ కురుథ? ఆవామపి యుష్మాదృశౌ సుఖదుఃఖభోగినౌ మనుష్యౌ, యుయమ్ ఏతాః సర్వ్వా వృథాకల్పనాః పరిత్యజ్య యథా గగణవసున్ధరాజలనిధీనాం తన్మధ్యస్థానాం సర్వ్వేషాఞ్చ స్రష్టారమమరమ్ ఈశ్వరం ప్రతి పరావర్త్తధ్వే తదర్థమ్ ఆవాం యుష్మాకం సన్నిధౌ సుసంవాదం ప్రచారయావః|
16 ௧௬ கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,
స ఈశ్వరః పూర్వ్వకాలే సర్వ్వదేశీయలోకాన్ స్వస్వమార్గే చలితుమనుమతిం దత్తవాన్,
17 ௧௭ அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள்.
తథాపి ఆకాశాత్ తోయవర్షణేన నానాప్రకారశస్యోత్పత్యా చ యుష్మాకం హితైషీ సన్ భక్ష్యైరాననదేన చ యుష్మాకమ్ అన్తఃకరణాని తర్పయన్ తాని దానాని నిజసాక్షిస్వరూపాణి స్థపితవాన్|
18 ௧௮ இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது.
కిన్తు తాదృశాయాం కథాయాం కథితాయామపి తయోః సమీప ఉత్సర్జనాత్ లోకనివహం ప్రాయేణ నివర్త్తయితుం నాశక్నుతామ్|
19 ௧௯ பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.
ఆన్తియఖియా-ఇకనియనగరాభ్యాం కతిపయయిహూదీయలోకా ఆగత్య లోకాన్ ప్రావర్త్తయన్త తస్మాత్ తై పౌలం ప్రస్తరైరాఘ్నన్ తేన స మృత ఇతి విజ్ఞాయ నగరస్య బహిస్తమ్ ఆకృష్య నీతవన్తః|
20 ௨0 சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
కిన్తు శిష్యగణే తస్య చతుర్దిశి తిష్ఠతి సతి స స్వయమ్ ఉత్థాయ పునరపి నగరమధ్యం ప్రావిశత్ తత్పరేఽహని బర్ణబ్బాసహితో దర్బ్బీనగరం గతవాన్|
21 ௨௧ தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து,
తత్ర సుసంవాదం ప్రచార్య్య బహులోకాన్ శిష్యాన్ కృత్వా తౌ లుస్త్రామ్ ఇకనియమ్ ఆన్తియఖియాఞ్చ పరావృత్య గతౌ|
22 ௨௨ சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
బహుదుఃఖాని భుక్త్వాపీశ్వరరాజ్యం ప్రవేష్టవ్యమ్ ఇతి కారణాద్ ధర్మ్మమార్గే స్థాతుం వినయం కృత్వా శిష్యగణస్య మనఃస్థైర్య్యమ్ అకురుతాం|
23 ௨௩ அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
మణ్డలీనాం ప్రాచీనవర్గాన్ నియుజ్య ప్రార్థనోపవాసౌ కృత్వా యత్ప్రభౌ తే వ్యశ్వసన్ తస్య హస్తే తాన్ సమర్ప్య
24 ௨௪ பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
పిసిదియామధ్యేన పామ్ఫులియాదేశం గతవన్తౌ|
25 ௨௫ பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
పశ్చాత్ పర్గానగరం గత్వా సుసంవాదం ప్రచార్య్య అత్తాలియానగరం ప్రస్థితవన్తౌ|
26 ௨௬ அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.
తస్మాత్ సముద్రపథేన గత్వా తాభ్యాం యత్ కర్మ్మ సమ్పన్నం తత్కర్మ్మ సాధయితుం యన్నగరే దయాలోరీశ్వరస్య హస్తే సమర్పితౌ జాతౌ తద్ ఆన్తియఖియానగరం గతవన్తా|
27 ௨௭ அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,
తత్రోపస్థాయ తన్నగరస్థమణ్డలీం సంగృహ్య స్వాభ్యామ ఈశ్వరో యద్యత్ కర్మ్మకరోత్ తథా యేన ప్రకారేణ భిన్నదేశీయలోకాన్ ప్రతి విశ్వాసరూపద్వారమ్ అమోచయద్ ఏతాన్ సర్వ్వవృత్తాన్తాన్ తాన్ జ్ఞాపితవన్తౌ|
28 ௨௮ அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.
తతస్తౌ శిర్య్యైః సార్ద్ధం తత్ర బహుదినాని న్యవసతామ్|

< அப்போஸ்தலர் 14 >