< அப்போஸ்தலர் 12 >
1 ௧ அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;
Đang thuở đó, vua Hê-rốt hà hiếp một vài người trong Hội thánh.
2 ௨ யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
Vua dùng gươm giết Gia-cơ là anh của Giăng;
3 ௩ அது யூதர்களுக்குப் பிரியமாக இருக்கிறதென்று அவன் அறிந்து, பேதுருவையும் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாக இருந்தது.
thấy điều đó vừa ý người Giu-đa, nên cũng sai bắt Phi-e-rơ nữa.
4 ௪ அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப்பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல்காக்கும்படி நான்கு போர்வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான்.
Bấy giờ nhằm ngày ăn bánh không men. Vậy, vua bắt người và hạ ngục, phó cho bốn ngũ binh canh giữ, mỗi ngũ có bốn tên lính. Vua toan đợi lúc xong lễ Vượt Qua, thì bắt người ra hầu trước mặt dân chúng.
5 ௫ அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காவலில் இருக்கும்போது, சபை மக்கள் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள்.
Vậy, Phi-e-rơ bị cầm trong khám, còn Hội thánh cứ cầu nguyện Đức Chúa Trời cho người luôn.
6 ௬ ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
Vả, đêm rạng ngày mà Hê-rốt định bắt Phi-e-rơ ra hầu, người đang mang hai xiềng, ngủ giữa hai tên lính, và trước cửa có quân canh giữ ngục.
7 ௭ அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாக எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது.
Thình lình, một thiên sứ của Chúa đến, và có ánh sáng soi trong ngục tối. Thiên sứ đập vào sường Phi-e-rơ, đánh thức người, mà rằng: Hãy mau chờ dậy. Xiềng bèn rớt ra khỏi tay người.
8 ௮ தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
Kế đó, thiên sứ nói rằng: Hãy nịt lưng và mang dép vào đi. Phi-e-rơ làm theo. Thiên sứ lại tiếp: Hãy mặc áo ngoài và theo ta.
9 ௯ அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான்.
Phi-e-rơ ra theo; chẳng biết điều thiên sứ làm đó là thật, song tưởng mình thấy sự hiện thấy.
10 ௧0 அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக் கதவின் அருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன்வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதிவழியாக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டுப் போய்விட்டான்.
Khi qua khỏi vọng canh thứ nhất, rồi vọng thứ nhì, thì đến nơi cửa sắt, là cửa thông vào thành; cửa đó tự mở ra trước mặt hai người, rồi hai người vượt ra khỏi, đi lên đàng cái, tức thì thiên sứ lìa Phi-e-rơ.
11 ௧௧ பேதுருவிற்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதமக்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது உண்மையாக புரிந்துகொண்டேன் என்றான்.
Phi-e-rơ bèn tỉnh lại và nói rằng: Bây giờ ta nhận biết thật Đức Chúa Trời đã sai thiên sứ Ngài giải cứu ta ra khỏi tay Hê-rốt cùng khỏi điều dân Giu-đa đang mong đợi.
12 ௧௨ அவன் இப்படி புரிந்துகொண்டபின்பு, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டிற்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
Người suy nghĩ lại điều đó, rồi đến nhà Ma-ri, mẹ của Giăng, cũng gọi là Mác, là nơi có nhiều người đang nhóm lại cầu nguyện.
13 ௧௩ பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பெயர்கொண்ட ஒரு பெண் யாரென்று கேட்க வந்தாள்.
Người gõ cửa nhà ngoài, một con đòi tên là Rô-đơ đến nghe,
14 ௧௪ அவள் பேதுருவின் குரலை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறக்காமல், திரும்ப உள்ளே ஓடிப்போய், பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று சொன்னாள்.
nhận biết tiếng Phi-e-rơ nên mừng rỡ lắm, đến nỗi chẳng mở cửa, nhưng trở chạy vào báo tin rằng Phi-e-rơ đang đứng trước cửa.
15 ௧௫ அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள்.
Người ta nói rằng: Mầy sảng. Song nàng quyết là quả thật. Họ bèn nói: Aáy là thiên sứ của người.
16 ௧௬ பேதுரு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் கதவைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
Nhưng Phi-e-rơ cứ gõ cửa hoài. Khi mở cửa, thấy Phi-e-rơ, hết thảy đều kinh hãi.
17 ௧௭ அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் அவர்களைப் பார்த்து கையசைத்து, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விளக்கி, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரர்களுக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
Nhưng người lấy tay ra dấu biểu chúng làm thinh, rồi thuật lại cho biết Chúa đã dùng cách nào cứu mình khỏi ngục; đoạn, người lại dặn rằng: Hãy cho Gia-cơ và anh em biết điều nầy. Rồi đó, người bước ra sang nơi khác.
18 ௧௮ பொழுதுவிடிந்தபின்பு பேதுருவைக்குறித்துக் காவலர்களுக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
Đến sáng, trong bọn lính có sự xôn xao rất lớn: vì chúng nó chẳng hay Phi-e-rơ đi đâu.
19 ௧௯ ஏரோது அவனைத் தேடி, அவன் அங்கு இல்லை என்றபோது, காவல்காரர்களை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயா நாட்டைவிட்டு செசரியா பட்டணத்திற்குப்போய், அங்கே தங்கியிருந்தான்.
Vua Hê-rốt sai tìm người, nhưng tìm chẳng được, bèn tra hỏi bọn lính, rồi truyền lịnh dẫn chúng nó đi giết. Đoạn, người từ xứ Giu-đê xuống thành Sê-sa-rê, ở lại tại đó.
20 ௨0 அக்காலத்திலே ஏரோது தீரியர்மேலும் சீதோனியர்மேலும் மிகவும் கோபமாக இருந்தான். தங்களுடைய தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியால், அவர்கள் ஒன்றுசேர்ந்து, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கி, அவன் மூலமாக சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
Vả, vua Hê-rốt căm giận dân thành Ty-rơ và dân thành Si-đôn. Chúng đã được lòng quan hầu của vua là Ba-la-tút rồi, bèn đồng lòng đến cùng vua mà xin hòa, vì xứ họ ăn nhờ lương thực trong xứ vua.
21 ௨௧ குறிக்கப்பட்டநாளிலே: ஏரோது ராஜ உடை அணிந்துகொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
Đến kỳ, vua Hê-rốt mặc áo chầu, ngồi trên ngai, truyền phán giữa công chúng.
22 ௨௨ அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம்! என்று ஆர்ப்பரித்தார்கள்.
Dân chúng kêu lên rằng: Aáy là tiếng của một thần, chẳng phải tiếng người ta đâu!
23 ௨௩ அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.
Liền lúc đó, có thiên sứ của Chúa đánh vua Hê-rốt, bởi cớ chẳng nhường sự vinh hiển cho Đức Chúa Trời; và vua bị trùng đục mà chết.
24 ௨௪ தேவவசனம் வளர்ந்து பெருகியது.
Bấy giờ, đạo Đức Chúa Trời tấn tới rất nhiều, càng ngày càng tràn thêm ra.
25 ௨௫ பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை முடித்தபின்பு மாற்கு என்னும் மறுபெயர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
Ba-na-ba và Sau-lơ làm chức vụ mình xong rồi, bèn từ thành Giê-ru-sa-lem trở về thành An-ti-ốt, dẫn theo Giăng, cũng gọi là Mác.