< 2 தீமோத்தேயு 1 >

1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய விருப்பத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல்,
ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନା ଯା ଜୀୱନସ୍ୟ ପ୍ରତିଜ୍ଞା ତାମଧୀଶ୍ୱରସ୍ୟେଚ୍ଛଯା ଯୀଶୋଃ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟୈକଃ ପ୍ରେରିତଃ ପୌଲୋଽହଂ ସ୍ୱକୀଯଂ ପ୍ରିଯଂ ଧର୍ମ୍ମପୁତ୍ରଂ ତୀମଥିଯଂ ପ୍ରତି ପତ୍ରଂ ଲିଖାମି|
2 பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
ତାତ ଈଶ୍ୱରୋଽସ୍ମାକଂ ପ୍ରଭୁ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟଶ୍ଚ ତ୍ୱଯି ପ୍ରସାଦଂ ଦଯାଂ ଶାନ୍ତିଞ୍ଚ କ୍ରିଯାସ୍ତାଂ|
3 நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரையும் நினைவுகூர்ந்து, மகிழ்ச்சியால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாக இருந்து,
ଅହମ୍ ଆ ପୂର୍ୱ୍ୱପୁରୁଷାତ୍ ଯମ୍ ଈଶ୍ୱରଂ ପୱିତ୍ରମନସା ସେୱେ ତଂ ଧନ୍ୟଂ ୱଦନଂ କଥଯାମି, ଅହମ୍ ଅହୋରାତ୍ରଂ ପ୍ରାର୍ଥନାସମଯେ ତ୍ୱାଂ ନିରନ୍ତରଂ ସ୍ମରାମି|
4 உன்னிலுள்ள மாயமில்லாத விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடு ஆராதித்துவரும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
ଯଶ୍ଚ ୱିଶ୍ୱାସଃ ପ୍ରଥମେ ଲୋଯୀନାମିକାଯାଂ ତୱ ମାତାମହ୍ୟାମ୍ ଉନୀକୀନାମିକାଯାଂ ମାତରି ଚାତିଷ୍ଠତ୍ ତୱାନ୍ତରେଽପି ତିଷ୍ଠତୀତି ମନ୍ୟେ
5 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
ତୱ ତଂ ନିଷ୍କପଟଂ ୱିଶ୍ୱାସଂ ମନସି କୁର୍ୱ୍ୱନ୍ ତୱାଶ୍ରୁପାତଂ ସ୍ମରନ୍ ଯଥାନନ୍ଦେନ ପ୍ରଫଲ୍ଲୋ ଭୱେଯଂ ତଦର୍ଥଂ ତୱ ଦର୍ଶନମ୍ ଆକାଙ୍କ୍ଷେ|
6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கரங்களை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
ଅତୋ ହେତୋ ର୍ମମ ହସ୍ତାର୍ପଣେନ ଲବ୍ଧୋ ଯ ଈଶ୍ୱରସ୍ୟ ୱରସ୍ତ୍ୱଯି ୱିଦ୍ୟତେ ତମ୍ ଉଜ୍ଜ୍ୱାଲଯିତୁଂ ତ୍ୱାଂ ସ୍ମାରଯାମି|
7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
ଯତ ଈଶ୍ୱରୋଽସ୍ମଭ୍ୟଂ ଭଯଜନକମ୍ ଆତ୍ମାନମ୍ ଅଦତ୍ତ୍ୱା ଶକ୍ତିପ୍ରେମସତର୍କତାନାମ୍ ଆକରମ୍ ଆତ୍ମାନଂ ଦତ୍ତୱାନ୍|
8 ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி.
ଅତଏୱାସ୍ମାକଂ ପ୍ରଭୁମଧି ତସ୍ୟ ୱନ୍ଦିଦାସଂ ମାମଧି ଚ ପ୍ରମାଣଂ ଦାତୁଂ ନ ତ୍ରପସ୍ୱ କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରୀଯଶକ୍ତ୍ୟା ସୁସଂୱାଦସ୍ୟ କୃତେ ଦୁଃଖସ୍ୟ ସହଭାଗୀ ଭୱ|
9 அவர் நம்முடைய செயல்களின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆரம்பகாலமுதல் கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
ସୋଽସ୍ମାନ୍ ପରିତ୍ରାଣପାତ୍ରାଣି କୃତୱାନ୍ ପୱିତ୍ରେଣାହ୍ୱାନେନାହୂତୱାଂଶ୍ଚ; ଅସ୍ମତ୍କର୍ମ୍ମହେତୁନେତି ନହି ସ୍ୱୀଯନିରୂପାଣସ୍ୟ ପ୍ରସାଦସ୍ୟ ଚ କୃତେ ତତ୍ କୃତୱାନ୍| ସ ପ୍ରସାଦଃ ସୃଷ୍ଟେଃ ପୂର୍ୱ୍ୱକାଲେ ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନାସ୍ମଭ୍ୟମ୍ ଅଦାଯି, (aiōnios g166)
10 ௧0 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios g166)
କିନ୍ତ୍ୱଧୁନାସ୍ମାକଂ ପରିତ୍ରାତୁ ର୍ୟୀଶୋଃ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାଗମନେନ ପ୍ରାକାଶତ| ଖ୍ରୀଷ୍ଟୋ ମୃତ୍ୟୁଂ ପରାଜିତୱାନ୍ ସୁସଂୱାଦେନ ଚ ଜୀୱନମ୍ ଅମରତାଞ୍ଚ ପ୍ରକାଶିତୱାନ୍|
11 ௧௧ அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதவர்களுக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.
ତସ୍ୟ ଘୋଷଯିତା ଦୂତଶ୍ଚାନ୍ୟଜାତୀଯାନାଂ ଶିକ୍ଷକଶ୍ଚାହଂ ନିଯୁକ୍ତୋଽସ୍ମି|
12 ௧௨ அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.
ତସ୍ମାତ୍ କାରଣାତ୍ ମମାଯଂ କ୍ଲେଶୋ ଭୱତି ତେନ ମମ ଲଜ୍ଜା ନ ଜାଯତେ ଯତୋଽହଂ ଯସ୍ମିନ୍ ୱିଶ୍ୱସିତୱାନ୍ ତମୱଗତୋଽସ୍ମି ମହାଦିନଂ ଯାୱତ୍ ମମୋପନିଧେ ର୍ଗୋପନସ୍ୟ ଶକ୍ତିସ୍ତସ୍ୟ ୱିଦ୍ୟତ ଇତି ନିଶ୍ଚିତଂ ଜାନାମି|
13 ௧௩ நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று.
ହିତଦାଯକାନାଂ ୱାକ୍ୟାନାମ୍ ଆଦର୍ଶରୂପେଣ ମତ୍ତଃ ଶ୍ରୁତାଃ ଖ୍ରୀଷ୍ଟେ ଯୀଶୌ ୱିଶ୍ୱାସପ୍ରେମ୍ନୋଃ କଥା ଧାରଯ|
14 ௧௪ உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்காரியங்களை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவராலே காத்துக்கொள்.
ଅପରମ୍ ଅସ୍ମଦନ୍ତର୍ୱାସିନା ପୱିତ୍ରେଣାତ୍ମନା ତାମୁତ୍ତମାମ୍ ଉପନିଧିଂ ଗୋପଯ|
15 ௧௫ ஆசியா நாட்டிலிருக்கிற அனைவரும், அவர்களில் பிகெல்லு, எர்மொகெனே என்பவர்கள் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
ଆଶିଯାଦେଶୀଯାଃ ସର୍ୱ୍ୱେ ମାଂ ତ୍ୟକ୍ତୱନ୍ତ ଇତି ତ୍ୱଂ ଜାନାସି ତେଷାଂ ମଧ୍ୟେ ଫୂଗିଲ୍ଲୋ ହର୍ମ୍ମଗିନିଶ୍ଚ ୱିଦ୍ୟେତେ|
16 ௧௬ ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
ପ୍ରଭୁରନୀଷିଫରସ୍ୟ ପରିୱାରାନ୍ ପ୍ରତି କୃପାଂ ୱିଦଧାତୁ ଯତଃ ସ ପୁନଃ ପୁନ ର୍ମାମ୍ ଆପ୍ୟାଯିତୱାନ୍
17 ௧௭ அவன் ரோமாவில் வந்திருந்தபோது மிகுந்த பிரயாசப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
ମମ ଶୃଙ୍ଖଲେନ ନ ତ୍ରପିତ୍ୱା ରୋମାନଗରେ ଉପସ୍ଥିତିସମଯେ ଯତ୍ନେନ ମାଂ ମୃଗଯିତ୍ୱା ମମୋଦ୍ଦେଶଂ ପ୍ରାପ୍ତୱାନ୍|
18 ௧௮ அந்த நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு இரக்கம்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பலவிதமான உதவிகளையும் நீ நன்றாக அறிந்திருக்கிறாயே.
ଅତୋ ୱିଚାରଦିନେ ସ ଯଥା ପ୍ରଭୋଃ କୃପାଭାଜନଂ ଭୱେତ୍ ତାଦୃଶଂ ୱରଂ ପ୍ରଭୁସ୍ତସ୍ମୈ ଦେଯାତ୍| ଇଫିଷନଗରେଽପି ସ କତି ପ୍ରକାରୈ ର୍ମାମ୍ ଉପକୃତୱାନ୍ ତତ୍ ତ୍ୱଂ ସମ୍ୟଗ୍ ୱେତ୍ସି|

< 2 தீமோத்தேயு 1 >