< 2 தீமோத்தேயு 3 >
1 ௧ மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
Ali ovo znaj da æe u pošljednje dane nastati vremena teška.
2 ௨ எப்படியென்றால், மனிதர்கள் தற்பிரியர்களாகவும், பணப்பிரியர்களாகவும், வீம்புக்காரர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், நிந்திக்கிறவர்களாகவும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி இல்லாதவர்களாகவும், பரிசுத்தமில்லாதவர்களாகவும்,
Jer æe ljudi postati samoživi, srebroljupci, hvališe, ponositi, hulnici, nepokorni roditeljima, neblagodarni, nepravedni, neljubavni,
3 ௩ மெய்யான அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்காதவர்களாகவும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கம் இல்லாதவர்களாகவும், கொடுமை செய்கிறவர்களாகவும், நல்லவைகளை வெறுக்கிறவர்களாகவும்,
Neprimirljivi, opadaèi, neuzdržnici, bijesni, nedobroljubivi,
4 ௪ துரோகிகளாகவும், துணிகரம் உள்ளவர்களாகவும், இறுமாப்பு உள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாக இல்லாமல் சுகபோகப்பிரியர்களாகவும்,
Izdajnici, nagli, naduveni, koji više mare za slasti nego za Boga,
5 ௫ தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு.
Koji imaju oblièje pobožnosti, a sile su se njezine odrekli. I ovijeh se kloni.
6 ௬ பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு,
Jer su od ovijeh oni koji se zavlaèe po kuæama, i robe ženice koje su natovarene grijesima i vode ih razliène želje,
7 ௭ எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாக இருக்கிற பெண்களுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
Koje se svagda uèe, i nikad ne mogu da doðu k poznanju istine.
8 ௮ யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்துநின்றதுபோல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்துநிற்கிறார்கள்; இவர்கள் தீய சிந்தையுள்ள மனிதர்கள், விசுவாச காரியத்தில் பரீட்சைக்கு நிற்காதவர்கள்.
Kao što se Janije i Jamvrije protiviše Mojsiju, tako se i ovi protive istini, ljudi izopaèenoga uma, nevješti u vjeri.
9 ௯ ஆனாலும், இவர்கள் அதிகமாகப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லோருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும்.
Ali neæe dugo napredovati; jer æe njihovo bezumlje postati javno pred svima, kao i onijeh što posta.
10 ௧0 நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,
A ti si se ugledao na moju nauku, življenje, namjeru, vjeru, snošenje, ljubav, trpljenje,
11 ௧௧ அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாக அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவைகள் எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
Protjerivanja, stradanja, kakova mi se dogodiše u Antiohiji, i u Ikoniji, i u Listri, kakova protjerivanja podnesoh, i od sviju me izbavi Gospod.
12 ௧௨ அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள்.
A i svi koji pobožno hoæe da žive u Hristu Isusu, biæe gonjeni.
13 ௧௩ பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.
A zli ljudi i varalice napredovaæe na gore, varajuæi i varajuæi se.
14 ௧௪ நீ கற்று உறுதிசெய்துகொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை யாரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,
Ali ti stoj u tome što si nauèio i što ti je povjereno, znajuæi od koga si se nauèio,
15 ௧௫ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
I buduæi da iz malena umiješ sveta pisma, koja te mogu umudriti na spasenije u Hrista Isusa.
16 ௧௬ வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
Sve je pismo od Boga dano, i korisno za uèenje, za karanje, za popravljanje, za pouèavanje u pravdi,
17 ௧௭ அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.
Da bude savršen èovjek Božij, za svako dobro djelo pripravljen.