< 2 தீமோத்தேயு 2 >

1 ஆதலால், என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
所以,我的儿子,你应当在基督耶稣的恩典中强大起来,
2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனிதர்களிடத்தில் ஒப்புவி.
对于我在很多见证人面前所说的一切,你也应该听进去,分享给那些忠心又能够教导他人的人。
3 நீயும் இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல போர்வீரனாக தீங்கு அனுபவி.
你应当和我一起遭受磨难,就像基督耶稣的优秀士兵。
4 படையில் சேர்ந்துகொண்ட எவனும், தன்னை அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்குப் பிரியமாக இருக்கும்படி, பிழைப்புக்கடுத்த வேலைகளில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
士兵因其职责而不能被每天的琐事缠身,他想要让那招兵之人欢喜。
5 மேலும் ஒரு விளையாட்டு வீரன் சட்டத்தின்படி விளையாடாவிட்டால் முடிசூட்டப்படமாட்டான்.
同样,运动员如果不遵守规则,就不能获得奖励。
6 பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முதலாவதாக பங்கடையவேண்டும்.
辛苦工作的农夫理当先尝农作物的成果。
7 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
想想我和你说的话,主将帮助你理解这一切。
8 தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என்னுடைய நற்செய்தியின்படியே, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவர் என்று நினைத்துக்கொள்.
你的思想要关注大卫的后裔、从死人中复活的耶稣基督,这就是我所传的福音。
9 இந்த நற்செய்தியினிமித்தம் நான் பெரும் பாவம் செய்தவனைப்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
因为这福音,我被像犯人一样投入监牢,但上帝之道不会被困于牢狱。
10 ௧0 ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios g166)
尽管如此,我原意为上帝子民而继续这样做,让他们也可以获得基督耶稣的救赎和永恒荣耀 (aiōnios g166)
11 ௧௧ இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவென்றால், நாம் அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்துமிருப்போம்;
下面这句话是可信的:“如果我们与基督同死,就必与他同活;
12 ௧௨ அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
如果我们继续忍耐,就会与他一同为王;我们若不认他,他必不认我们。
13 ௧௩ நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
即使我们不值得信赖,他仍然值得信赖,因为他不能不真实地对待自己。”
14 ௧௪ இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் தோல்வியடையச் செய்வதற்கு ஏதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
你要提醒众人,在上帝面前告诉他们,不要作毫无意义的争辩,这只能伤害那些听众。
15 ௧௫ நீ வெட்கப்படாத ஊழியக்காரனாகவும் சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துப் போதிக்கிறவனாகவும் உன்னை தேவனுக்குமுன்பாக உத்தமனாக நிறுத்தும்படி விழிப்பாக இரு.
务必要努力工作,这样你就可以在上帝面前展示自己,获得他的称许。要做一名无愧的工人,正确地讲解真理之道。
16 ௧௬ சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தி உள்ளவர்கள் ஆவார்கள்;
远离毫无意义的闲聊,因为这样做会让人们远离上帝。
17 ௧௭ அவர்களுடைய வார்த்தை அழுகல் நோயைப்போல பரவும்; இமெனேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
他们的讲述好像坏疽一样具有破坏力,会摧毁健康的身体;许米乃和腓理徒就是这样的人。
18 ௧௮ அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்துவிட்டதென்று சொல்லி, சிலருடைய நம்பிக்கையை அழித்துப்போடுகிறார்கள்.
他们偏离了真理,说复活之事是过去发生的事情,这破坏了一些人对上帝的信心。
19 ௧௯ ஆனாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது.
但上帝值得信赖的坚固基石非常稳固,上面刻着这样的字:“主认识属于他之人”和“凡称呼主名之人都应远离不义”。
20 ௨0 ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்கள் மட்டுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களும் உண்டு; அவைகளில் சில மதிப்புமிக்கவைகளும், சில மதிப்பற்றவைகளும் ஆகும்.
在庄严堂皇房子中,不能只有金子和银子做的杯碗,还应有木器、瓦器;有的是特殊用途,有的则是经常使用。
21 ௨௧ ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான்.
因此,如果你远离邪恶,就会成为圣洁而特别的杯子或碗,供主使用,准备好做各种善事。
22 ௨௨ அன்றியும், பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடி, சுத்த இருதயத்தோடு கர்த்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
应远离那些点燃年轻人欲望的事情,去追随正直良善、值得信赖的事情,与那些真正纯洁的基督徒一起追随爱与和平。
23 ௨௩ புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு.
拒绝愚蠢而幼稚的辩论;你知道它们只会引发争斗。
24 ௨௪ கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.
但主的仆人决不能争斗,而是要温和对待所有人,能够教导,保持耐心,
25 ௨௫ எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும்,
温和地规劝对手。或许上帝可以帮助他们悔改,可以认识真理。
26 ௨௬ பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
这种方式,他们可能会恢复理智,逃离魔鬼的陷阱。魔鬼曾抓住他们,让他们去做魔鬼想做的事情。

< 2 தீமோத்தேயு 2 >