< 2 தெசலோனிக்கேயர் 1 >
1 ௧ பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
Павло, і Силуа́н, і Тимофій до Солунської Церкви в нашім Бозі Отці й Господі Ісусі Христі:
2 ௨ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
благода́ть вам і мир від Бога Отця й Господа Ісуса Христа!
3 ௩ சகோதரர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம்; உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும், நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது.
Ми за́вжди повинні подяку складати за вас Богові, бра́ття, як і годи́ться, бо сильно росте віра ваша, і примно́жується любов кожного з усіх вас один до о́дного.
4 ௪ நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
Так що ми самі хва́лимось вами по Божих Церквах за ваші стражда́ння та віру в усіх переслі́дуваннях ваших та в у́тисках, що їх переносите ви.
5 ௫ நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது.
А це доказ праведного Божого су́ду, щоб стали ви гідні Божого Царства, що за нього й страждаєте ви!
6 ௬ உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே.
Бо то справедливе в Бога — віддати утиском тим, хто вас утискає,
7 ௭ தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு,
а вам, хто утиски терпить, відпочи́нок із нами, коли з'я́виться з неба Господь Ісус з а́нголами сили Своєї, —
8 ௮ கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
„в огні полум'я́ному, що даватиме помсту на тих, хто Бога не знає, і не слухає“Єва́нгелії Господа нашого Ісуса.
9 ௯ அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும்,
Вони кару при́ймуть, — вічну поги́біль від лиця Господнього та від слави поту́ги Його, (aiōnios )
10 ௧0 அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios )
як Він при́йде того дня просла́витися в Своїх святих, і стати дивним у всіх віруючих, бо сві́дчення наше знайшло віру між вами.
11 ௧௧ ஆகவே, நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு;
За це ми й молимось за́вжди за вас, щоб наш Бог учинив вас гідними покли́кання, і міццю напо́внив усю добру волю до́брости й ді́ло віри,
12 ௧௨ நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கவும், தமது தயவுள்ள விருப்பம் முழுவதையும் விசுவாசத்தின் செயல்களையும் பலமாக உங்களிடம் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
щоб просла́вилося Ім'я́ Господа нашого Ісуса в вас, а ви в Ньому, за благода́ттю Бога нашого й Господа Ісуса Христа.