< 2 தெசலோனிக்கேயர் 2 >

1 அன்றியும், சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
בנוגע לבואו של ישוע המשיח אדוננו ופגישתנו איתו, אני מבקש מכם, אחים יקרים, אנא,
2 கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
אל תאבדו את עשתונותיכם ואל תפחדו משמועות כזב, חזיונות שווא, נבואות שקר ומסמכים מזויפים, שנכתבו כביכול על־ידי, שמספרים כי הגיע יום ה׳.
3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், விசுவாச துரோகம் முன்னதாக நடந்து, பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
אל תניחו לאף אחד לרמות ולבלבל אתכם, כי לפניכן יפרוץ המרד ואיש הרשע יתגלה, זה שנידון לאבדון.
4 அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனென்னப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ, அவையெல்லாவற்றிற்கும்மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாகவும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான்.
הוא ירומם את עצמו מעל כל מה שמאלוהים וכל מה שקדוש, עד שיעז אפילו לשבת בהיכל אלוהים ויכריז שהוא עצמו אלוהים!
5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
האם אינכם זוכרים שסיפרתי לכם כל זאת כשהייתי אצלכם?
6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
עכשיו אתם יודעים מה מונע בעדו מלהופיע לפני הזמן המתאים.
7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது.
מעלליו הרעים כבר משתוללים בעולם, אך הוא עצמו יוכל להופיע רק כשיוסר המעצור מדרכו.
8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார்.
ואז יתגלה בן־האבדון הרשע, אשר האדון ישוע ישתק בהבל־פיו וישמיד אותו כליל בזוהר כבודו.
9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும்,
הרשע הזה יבוא בשליחות השטן ובכוחו, וידהים את כולם באותות־שקר ואחיזת־עיניים.
10 ௧0 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும்.
הוא יצליח להטעות את האנשים שנועדו לגיהינום, בגלל סירובם לאהוב את האמת שבכוחה להושיעם.
11 ௧௧ ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
על כן יניח להם אלוהים להאמין בכל השקרים האלה,
12 ௧௨ அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
כדי שיוכל לשפטם על אשר האמינו בשקרים, עשו בכוונה את הרע וסרבו להאמין באמת.
13 ௧௩ கர்த்தருக்குப் பிரியமான சகோதரர்களே, நீங்கள் ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, தொடக்கம் முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனுக்கு நன்றிசொல்ல கடனாளிகளாக இருக்கிறோம்.
אך אנו חייבים להודות תמיד לאלוהים בעדכם, אחי יקירי האדון, כי עוד מבראשית הוא בחר להושיע ולטהר אתכם באמצעות רוח הקודש ואמונתכם באמת.
14 ௧௪ நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்கு எங்களுடைய நற்செய்தியினாலே அந்த இரட்சிப்பிற்கு அவர் உங்களை அழைத்தார்.
הוא אף הזמינכם לקחת חלק בכבודו של אדוננו ישוע המשיח, באמצעות הבשורה שבישרנו לכם.
15 ௧௫ ஆகவே, சகோதரர்களே, நீங்கள் உறுதிகொண்டு, வார்த்தையினாலாவது கடிதத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.
על כן, אחים יקרים, התמידו באמונתכם, ואל תרפו מכל מה שלימדנו אתכם בכתב ובעל־פה.
16 ௧௬ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
מי ייתן שאדוננו ישוע המשיח ואלוהים אבינו, אשר אהב אותנו והעניק לנו נחמת־עולם ותקווה שאיננו ראויים לה, (aiōnios g166)
17 ௧௭ உங்களுடைய இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் செயல்களிலும் உங்களை உறுதிப்படுத்துவாராக.
ינחם את לבכם ויעזור לכם בכל דבר טוב שתאמרו או תעשו.

< 2 தெசலோனிக்கேயர் 2 >