< 2 சாமுவேல் 7 >

1 யெகோவா ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லா எதிரிகளுக்கும் அவனை விலக்கி, இளைப்பாறச் செய்தபோது, அவன் தன்னுடைய வீட்டிலே குடியிருக்கும்போது,
Aconteció que cuando el rey ya vivía en su casa, después que Yavé le dio reposo de todos sus enemigos alrededor,
2 ராஜா தீர்க்கதரிசியான நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் குடியிருக்கும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருக்கிறதே என்றான்.
el rey dijo al profeta Natán: Mira, yo vivo en casa de cedro, pero el Arca de ʼElohim está entre cortinas.
3 அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; யெகோவா உம்மோடு இருக்கிறாரே என்றான்.
Natán respondió al rey: ¡Vé, haz todo lo que está en tu corazón, porque Yavé está contigo!
4 அன்று இரவிலே யெகோவாவுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
Pero aconteció que esa misma noche Palabra de Yavé llegó a Natán:
5 நீ போய் என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் வாழும்படி ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
Vé y dí a mi esclavo David: Así dice Yavé: ¿Tú me edificarás Casa en la cual Yo more?
6 நான் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், கூடாரத்திலும் வீட்டிலும் உலாவினேன்.
Porque desde el día cuando saqué a los hijos de Israel de Egipto hasta hoy, no moré en alguna casa, sino estuve en tienda y en tabernáculo.
7 நான் இஸ்ரவேலான என்னுடைய மக்களை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் யாரையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாமலிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் மக்களுக்குள் உலாவி வந்த எந்த இடத்திலாவது ஏதாவது ஒரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
En todo lo que anduve con todos los hijos de Israel, ¿hablé Yo Palabra a alguna de las tribus de Israel, a la cual mandé a apacentar a mi pueblo Israel? ¿Le pregunté por qué no me edificó casa de cedro?
8 இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
Ahora pues, dirás esto a mi esclavo David: Yavé de las huestes dice: Yo te tomé del redil, de seguir tras las ovejas, para que seas jefe de mi pueblo Israel.
9 நீ போன எந்த இடத்திலும் உன்னோடு இருந்து, உன்னுடைய எதிரிகளையெல்லாம் உனக்கு முன்பாக அழித்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயர்களுக்கு இணையான பெரிய பெயரை உனக்கு உண்டாக்கினேன்.
Estuve contigo en todo lo que has andado y destruí a todos tus enemigos delante de ti. Te di un gran nombre, como el nombre de los grandes de la tierra.
10 ௧0 நான் என்னுடைய மக்களான இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய இடத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்புபோலவும், நான் என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலவும், துன்மார்க்கமான மக்களால் இனி சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நியமித்தேன்.
También dispuse un lugar para mi pueblo Israel. Lo planté para que viva en él, para que nunca más sea removido, ni los perversos los sigan afligiendo como antes,
11 ௧௧ உன்னுடைய எல்லா எதிரிகளுக்கும் உன்னை விலக்கி, இளைப்பாறவும் செய்தேன்; இப்போதும் யெகோவா உனக்கு வீட்டை உண்டாக்குவார் என்பதைக் யெகோவா உனக்கு அறிவிக்கிறார்.
desde el día cuando designé jueces para mi pueblo Israel. Y te daré descanso de todos tus enemigos. Además, Yavé te dice que Él te hará una casa.
12 ௧௨ உன்னுடைய நாட்கள் நிறைவேறி, நீ உன்னுடைய பிதாக்களோடு படுத்திருக்கும்போது, நான் உனக்குப்பின்பு உனக்கு பிறக்கும் உன்னுடைய சந்ததியை எழும்பச்செய்து, அவன் ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன்.
Cuando tus días sean cumplidos y duermas con tus antepasados, después de ti levantaré a tu descendiente, el cual vendrá de ti, y afirmaré su reino.
13 ௧௩ அவன் என்னுடைய நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவனுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன்.
Él edificará casa a mi Nombre y Yo afirmaré el trono de su reino para siempre.
14 ௧௪ நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனிதர்கள் பயன்படுத்தும் பிரம்பினாலும் மனிதர்களுடைய கசையடிகளினாலும் தண்டிப்பேன்.
Yo le seré padre y él me será hijo. Cuando haga mal lo corregiré con vara de hombres y con azotes de los hijos de hombres.
15 ௧௫ உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடமிருந்து என்னுடைய கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
Pero mi misericordia no se apartará de él como la aparté de Saúl, a quien quité de delante de ti.
16 ௧௬ உன்னுடைய வீடும், உன்னுடைய ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக உறுதிப்பட்டிருக்கும்; உன்னுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.
Tu casa y tu reino permanecerán para siempre ante ti, y tu trono será estable eternamente.
17 ௧௭ நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.
Así Natán habló a David, conforme a todas estas Palabras, y según toda esta visión.
18 ௧௮ அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, யெகோவாவுக்கு முன்பாக அமர்ந்து: யெகோவாவாகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது?
Entonces el rey David entró y se sentó delante de Yavé y dijo: ¡Oh ʼAdonay Yavé! ¿Quién soy yo y qué es mi casa para que me trajeras hasta aquí?
19 ௧௯ யெகோவாவாகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குச் சின்னதாக இருக்கிறது என்று யெகோவாவாகிய ஆண்டவராக இருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய குடும்பத்தைக்குறித்து, வெகுகாலத்திற்குமுன்பு சொன்ன செய்தியை மனிதர்கள் வழக்கத்தின்படி சொன்னீரே.
Aún te pareció insignificante esto, oh ʼAdonay Yavé. Hablaste también acerca de la casa de tu esclavo en un lejano futuro. ¡Oh ʼAdonay Yavé, cuán grande designio para un hombre!
20 ௨0 இனி தாவீது உம்மிடம் சொல்லவேண்டியது என்ன? யெகோவாவாகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.
¿Qué más puede decirte David? ¡Oh ʼAdonay Yavé, Tú conoces a tu esclavo!
21 ௨௧ உம்முடைய வாக்குத்தத்தத்தினாலும், உம்முடைய சித்தத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படித் தயவு செய்தீர்.
Según tu Palabra y conforme a tu corazón hiciste toda esta grandeza para declararla a tu esclavo.
22 ௨௨ ஆகையால் தேவனாகிய யெகோவாவே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்களுடைய காதுகளாலே கேட்ட எல்லா காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறு தேவனும் இல்லை.
Por tanto Tú eres grande, oh ʼAdonay Yavé. ¡Nadie hay como Tú, ni hay otro ʼElohim además de Ti, según todo lo que escuchamos con nuestros oídos!
23 ௨௩ உம்முடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கு நிகரான மக்களும் உண்டோ? பூலோகத்து மக்களில் இந்த ஒரே மக்களை தேவன் தமக்கு மக்களாக மீட்பதற்கும், தமக்குப் புகழ்ச்சி விளங்கச்செய்வதற்கும் ஏற்படுத்தினாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு முன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த மக்களுக்கும், அவர்கள் தெய்வங்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,
¿Cuál otra nación hay en la tierra como tu pueblo Israel, a la cual ʼElohim vino a redimir como pueblo para Él, y para hacer cosas asombrosas a favor de tu tierra delante de tu pueblo, al cual sacaste de Egipto para Ti mismo, de entre las naciones y sus ʼelohim?
24 ௨௪ உம்முடைய மக்களான இஸ்ரவேலர்கள் என்றென்றைக்கும் உம்முடைய மக்களாக இருப்பதற்கு, அவர்களை நிலைப்படுத்தி, யெகோவாவாகிய நீரே அவர்களுக்குத் தேவனானீர்.
¡Estableciste a tu pueblo Israel como pueblo tuyo para siempre, y Tú, oh Yavé, eres su ʼElohim!
25 ௨௫ இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் உமது அடியானையும் அவனுடைய வீட்டையும்குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
Ahora pues, Yavé ʼElohim, confirma para siempre la Palabra que hablaste con respecto a tu esclavo y su casa, y haz como Tú dijiste.
26 ௨௬ அப்படியே சேனைகளின் யெகோவா இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானான தாவீதினுடைய வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.
Que tu Nombre sea engrandecido para siempre, y que digan: ¡Yavé de las huestes es el ʼElohim de Israel! Y que la casa de tu esclavo David sea firme delante de ti.
27 ௨௭ உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவாவாக இருக்கிற நீர் உமது அடியானுக்கு வெளிப்படுத்தினீர்: ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மன தைரியம் கிடைத்தது.
Porque Tú, oh Yavé de las huestes, ʼElohim de Israel, diste una revelación a tu esclavo, al decir: Yo te edificaré casa. Por tanto tu esclavo halló en su corazón valor para hacer esta súplica delante de Ti.
28 ௨௮ இப்போதும் யெகோவாவாகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நற்செய்தியை வாக்குத்தத்தம்செய்தீர்.
Ahora pues, ʼAdonay Yavé, Tú mismo eres ʼElohim. Tus Palabras son verdad, y prometiste a tu esclavo este bien.
29 ௨௯ இப்போதும் உமது அடியானின் வீடு என்றென்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; யெகோவாவான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
Así pues, que te plazca bendecir la casa de tu esclavo para que esté siempre delante de Ti, porque Tú, oh ʼAdonay Yavé, hablaste, y con tu bendición, la casa de tu esclavo será bendita para siempre.

< 2 சாமுவேல் 7 >