< 2 சாமுவேல் 6 >

1 பின்பு தாவீது இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட 30,000 பேரைக் கூட்டி,
Na Dawid boaboaa akodɔm sononko ɔpeduasa ano.
2 கேருபீன்களின் நடுவே அமர்ந்திருக்கிற சேனைகளுடைய யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியை யூதாவிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடு இருந்த அந்த இடத்தைச்சேர்ந்தவர்களும் எழுந்து போய்,
Ɔdii wɔn anim firi Baala a ɛwɔ Yuda, sɛ wɔrekɔfa Onyankopɔn Adaka a ɛkura Awurade Otumfoɔ no a wɔde no asi Kerubim ntam no din.
3 தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
Wɔde Onyankopɔn Adaka no sii teaseɛnam foforɔ so, de firii Abinadab fie a na ɛwɔ bepɔ so no baeɛ. Usa ne Ahio a na wɔyɛ Abinadab mmammarima no na na wɔkyerɛ teaseɛnam foforɔ no
4 அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
a na Onyankopɔn Adaka no si mu no kwan. Na Ahio na ɔdi animu.
5 தாவீதும் இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட எல்லாவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள்.
Dawid ne Israel manfoɔ gyee wɔn ani wɔ Awurade anim wɔ ahoɔden so a wɔreto nnwom, na wɔde nsankuo, bɛnta, akasaeɛ, mfirikyiwa ne kyankyan nenam mu.
6 அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
Na wɔduruu Nakon ayuporobea no, nantwie no nan totoeɛ, maa Usa tenee ne nsa sɔɔ Onyankopɔn Adaka no mu sɛ ɔretene no.
7 அப்பொழுது யெகோவாவுக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான்.
Na Awurade bo fuu Usa sɛ ɔyɛɛ saa, na Onyankopɔn bɔɔ no, maa ɔwu daa adaka no ho.
8 அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததினால் தாவீது துயரமடைந்து, அந்த இடத்திற்கு இந்தநாள்வரை அழைக்கப்படுகிற பேரேஸ்ஊசா என்னும் பெயரிட்டான்.
Dawid nso bo fuiɛ, ɛfiri sɛ, Awurade abufuo atia Usa. Ɔtoo saa beaeɛ hɔ edin Peres-Usa a aseɛ ne abufuhyeɛ a ɛtia Usa. Wɔfrɛ hɔ saa ara de bɛsi ɛnnɛ.
9 தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவுடைய பெட்டி என்னிடம் வருவது எப்படியென்று சொல்லி,
Afei, na Dawid suro Awurade enti ɔbisaa sɛ, “Ɛbɛyɛ dɛn na mɛtumi de Awurade adaka no aba me nkyɛn, na mahwɛ so?”
10 ௧0 அதைத் தன்னுடைய தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.
Na Dawid yɛɛ nʼadwene sɛ, ɔremma Awurade Adaka no so nkɔ Dawid Kuropɔn no mu. Na mmom, ɔmaa so de kɔɔ Obed-Edom a ɔyɛ Gatni fie.
11 ௧௧ யெகோவாவுடைய பெட்டி கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் இருக்கும்போது யெகோவா ஓபேத்ஏதோமையும் அவனுடைய வீட்டார்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
Na Awurade adaka no sii Gatni Obed-Edom fiefoɔ nkyɛn abosome mmiɛnsa, na Awurade hyiraa no ne ne fidua mu nnipa nyinaa.
12 ௧௨ தேவனுடைய பெட்டியினாலே யெகோவா ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்திற்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.
Afei, wɔka kyerɛɛ ɔhene Dawid sɛ, “Esiane Awurade Adaka no enti, Awurade ahyira Obed-Edom fie ne biribiara a ɔwɔ so.” Enti, Dawid kɔɔ hɔ kɔfaa Adaka no, de osebɔ kɛseɛ baa Dawid Kuropɔn no mu.
13 ௧௩ யெகோவாவுடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு காலடி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
Nnipa a Awurade Adaka no so wɔn no tuu anammɔn nsia pɛ, wɔgyinaa hɔ twɛneeɛ, sɛdeɛ Dawid bɛtumi de nantwie ne nantwie ba a wadɔre sradeɛ abɔ afɔdeɛ.
14 ௧௪ தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, தன்னுடைய முழு பெலத்தோடும் யெகோவாவுக்கு முன்பாக நடனம்செய்தான்.
Na Dawid firii nʼahoɔden nyinaa mu saa wɔ Awurade anim a na ɔhyɛ asɔfotadeɛ yuu.
15 ௧௫ அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் யெகோவாவுடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
Enti, Dawid ne Israel nyinaa de nteateam ne ntotorobɛntohyɛn maa Awurade Adaka no so kɔɔeɛ.
16 ௧௬ யெகோவாவுடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் நுழைகிறபோது, சவுலின் மகளான மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து, தாவீது ராஜா யெகோவாவுக்கு முன்பாகக் குதித்து நடனம் செய்கிறதைக் கண்டு, தன்னுடைய இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
Ɛberɛ a wɔde Awurade Adaka no rewura Dawid Kuropɔn no mu no, Saulo babaa a ne din de Mikal no kɔtɛɛ mpomma mu hwɛeɛ. Ɔhunuu sɛ ɔhene Dawid rehurihuri, resa anigyeɛ so wɔ Awurade anim no, nʼani annye.
17 ௧௭ அவர்கள் யெகோவாவுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் இடத்திலே அதை வைத்தபோது, தாவீது யெகோவாவுக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்.
Wɔde Awurade Adaka no kɔsii nʼafa wɔ ntomadan a ɛno enti, Dawid asi no mu, na Dawid bɔɔ ɔhyeɛ afɔdeɛ ne asomdwoeɛ afɔdeɛ wɔ Awurade anim.
18 ௧௮ தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தியபின்பு, சேனைகளின் யெகோவாவுடைய நாமத்தினாலே மக்களை ஆசீர்வதித்து,
Ɔwieeɛ no, ɔhyiraa nnipa no wɔ Awurade Otumfoɔ din mu.
19 ௧௯ இஸ்ரவேலின் திரள்கூட்டமான பெண்கள் ஆண்களான அனைத்து மக்களுக்கும், அவரவர்களுக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்; பிறகு மக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.
Afei, ɔmaa Israel dɔm no mu nnipa biara burodo mua, nankum ne bobe aba ɔfam. Na wɔn mu biara kɔɔ ne fie.
20 ௨0 தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
Ɛberɛ a Dawid sane kɔɔ ne fie sɛ ɔrekɔhyira ne fiefoɔ no, Mikal firii adi ba bɛhyiaa no ka kyerɛɛ no abufuo so sɛ, “Ɛnnɛ deɛ, na Israelhene nsɛ ha! Ɔpaa ne ho kyerɛɛ ne mfenaa te sɛ deɛ obiara a ɔmmu ne ho bɛyɛ no ara pɛ.”
21 ௨௧ அதற்கு தாவீது மீகாளைப் பார்த்து: உன்னுடைய தகப்பனைவிட, அவருடைய எல்லா வீட்டார்களையும்விட, என்னை இஸ்ரவேலான யெகோவாவுடைய மக்களின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படித் தெரிந்துகொண்ட யெகோவாவுடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
Dawid buaa Mikal sɛ, “Na meresa wɔ Awurade a ɔyii me, na ɔtwaa wʼagya ne nʼabusuafoɔ gyaeɛ no anim. Ɔyii me sɛ menyɛ Israel a wɔyɛ Awurade nkurɔfoɔ ɔkannifoɔ. Ɛno enti, ɛyɛ me pɛ sɛ meyɛ me ho sɛ ɔkwasea, sɛdeɛ ɛbɛma makyerɛ mʼahokeka a mewɔ wɔ Awurade mu.
22 ௨௨ இதைவிட இன்னும் நான் இழிவானவனும் என்னுடைய பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்கும்கூட மகிமையாக விளங்குவேன் என்றான்.
Aane, na mepɛ sɛ meyɛ ɔkwasea koraa sene yei, na mmaayewa korɔ yi ara a woreka wɔn ho asɛm yi bɛhyɛ me animuonyam.”
23 ௨௩ அதினால் சவுலின் மகளான மீகாளுக்கு மரணமடையும் நாள்வரைக்கும் பிள்ளை இல்லாமலிருந்தது.
Na Saulo babaa Mikal anwo ba da wɔ ne nkwa nna nyinaa.

< 2 சாமுவேல் 6 >