< 2 சாமுவேல் 3 >
1 ௧ சவுலின் குடும்பத்திற்கும் தாவீதின் குடும்பத்திற்கும் பல நாட்கள் யுத்தம் நடந்தது; தாவீது மென்மேலும் வலிமை பெற்றுக்கொண்டே வந்தான்; சவுலின் குடும்பத்தார்களோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள்.
И бысть брань на много между домом Саулим и между домом Давидовым, и дом Давидов возвышашеся и укрепляшеся, дом же Сауль идяше и изнемогаше.
2 ௨ எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த மகன்கள்: யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
И родишася Давиду в Хевроне сынов шесть: и бе первородный ему Амнон от Ахинаамы Иезраилитыни,
3 ௩ நாபாலின் மனைவியாக இருந்த கர்மேல் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் மகன்; மூன்றாம் மகன் கெசூரின் ராஜாவான தல்மாய் மகளான மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.
и вторый ему сын Далуиа от Авигеи Кармилския, и третий Авессалом сын Маахи дщере Фолми царя Гессирска,
4 ௪ நான்காம் மகன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் மகன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
четвертый Адониа сын Аггифы, и пятый Сафатиа от Авиталы,
5 ௫ ஆறாம் மகன் தாவீதின் மனைவியான எக்லாளிடம் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.
и шестый Иефераам от Еглы жены Давидовы: сии родишася Давиду в Хевроне.
6 ௬ சவுலின் குடும்பத்திற்கும் தாவீதின் குடும்பத்திற்கும் யுத்தம் நடந்து வருகிறபோது, அப்னேர் சவுலின் குடும்பத்திலே வலிமை அடைந்தவனான்.
И бысть внегда быти брани между домом Саулим и между домом Давидовым, и бяше Авенир держа дом Саулов.
7 ௭ சவுலுக்கு ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியோடு உறவுகொண்டது என்ன என்றான்.
И Саулова подложница бе, ейже бе имя Ресфа, дщерь Иоля. И вниде к ней Авенир, и рече Иевосфей сын Сауль ко Авениру: что яко вшел еси к подложнице отца моего?
8 ௮ அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மை தாவீதின் கையில் ஒப்புக்கொடுக்காமல், இந்த நாள்வரை உம்முடைய தகப்பனான சவுலின் குடும்பத்திற்கும், அவருடைய சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், தயவு செய்கிறவனான என்னை நீர் இன்று ஒரு பெண்ணிற்காக குற்றம் கண்டுபிடிப்பதற்கு, நான் யூதாவைச் சேர்ந்த ஒரு நாயின் தலையா?
И разгневася зело Авенир о словеси сем на Иевосфеа и рече ему Авенир: еда песия глава есмь аз? Сотворих днесь милость дому Саула отца твоего и братии и знаемым, и не отступих в дом Давидов, и ищеши на мне ты о неправде жены днесь?
9 ௯ நான் அரசாட்சியை சவுலின் குடும்பத்தைவிட்டு மாற்றி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவங்கிப் பெயெர்செபாவரையுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி,
Сия да сотворит Бог Авениру и сия да приложит ему, зане якоже клятся Господь Давиду, тако сотворю ему в сей день,
10 ௧0 யெகோவா தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும் என்றான்.
еже отяти царство от дому Сауля и воздвигнути престол Давидов во Израили и во Иуде от Дана даже до Вирсавии.
11 ௧௧ அப்பொழுது அவன் அப்னேருக்குப் பயப்பட்டதால், அதன்பின்பு ஒரு பதிலும் அவனுக்குச் சொல்லாமலிருந்தான்.
И не возможе ктому Иевосфей отвещати Авениру словесе от боязни, яже к нему.
12 ௧௨ அப்னேர் தன்னுடைய பெயராலே தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்யும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என்னுடைய கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான்.
И посла Авенир к Давиду послы в Фелам, идеже бе, абие, глаголя: положи завет твой со мною, и се, рука моя с тобою, еже возвратити ми к тебе весь дом Израилев.
13 ௧௩ அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடு நான் உடன்படிக்கை செய்வேன்; ஆனாலும், ஒரு காரியம் உன்னிடம் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், நீ என்னுடைய முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் மகளான மீகாளை அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என்னுடைய முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,
И рече Давид: добре, аз положу с тобою завет, токмо словесе единаго прошу у тебе, глаголя: не имаши видети лица моего, аще не приведеши Мелхолы дщере Саули, приходящу ти видети лице мое.
14 ௧௪ அவன் சவுலின் மகனான இஸ்போசேத்திடமும் தூதுவர்களை அனுப்பி: நான் பெலிஸ்தர்களுடைய 100 நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்செய்த என்னுடைய மனைவியான மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
И посла Давид ко Иевосфею сыну Саулю вестники, глаголя: отдаждь мне жену мою Мелхолу, юже взях за сто необрезаний иноплеменничих.
15 ௧௫ அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயிசின் மகனான பல்த்தியேல் என்னும் அவளுடைய கணவனிடமிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான்.
И посла Иевосфей, и взят ю от мужа ея от Фалтиила сына Селлимова.
16 ௧௬ அவள் கணவன் பகூரிம்வரை அவளுக்கு பின்னே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
И идяше муж ея с нею плачася даже до Варакима. И рече к нему Авенир: иди, возвратися. И возвратися.
17 ௧௭ அப்னேர் இஸ்ரவேலின் மூப்பர்களோடு பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படி நீங்கள் அநேகநாட்களாகத் தேடினீர்களே.
И рече Авенир к старейшинам Израилевым, глаголя: вчера и третияго дне искасте Давида, да царствует над вами:
18 ௧௮ இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என்னுடைய தாசனான தாவீதின் கைகளினால், என்னுடைய மக்களான இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கும், அவர்களுடைய எல்லா எதிரிகளின் கைகளுக்கும் மீட்டு இரட்சிப்பேன் என்று யெகோவா தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
и ныне сотворите, якоже Господь глагола о Давиде, глаголя: рукою раба Моего Давида спасу люди Моя Израиля от руки иноплеменничи и от руки всех врагов их.
19 ௧௯ இப்படியே அப்னேர் பென்யமீன் மக்களின் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர்களின் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தார்களின் பார்வைக்கும், விரும்பினதையெல்லாம் எப்ரோனிலே தாவீதினுடைய காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
И глагола Авенир во ушы Вениамину: и иде Авенир глаголати во ушы Давидовы в Хеврон вся, елика угодна беша пред очима Израилевыма и пред очима всего дому Вениаминя.
20 ௨0 அப்னேரும், அவனோடு 20 பேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடு வந்த மனிதர்களுக்கும் விருந்துசெய்தான்.
И прииде Авенир к Давиду в Хеврон, и с ним двадесять мужей. И сотвори Давид пир Авениру и мужем его иже с ним.
21 ௨௧ பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலர்களை எல்லாம் உம்மோடு உடன்படிக்கைசெய்யும்படி, ராஜாவான என்னுடைய ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடு போனான்.
И рече Авенир к Давиду: востану ныне и пойду и соберу к господину моему царю всего Израиля, и положу с ним завет, и царствовати имаши всеми, ихже желает душа твоя. И посла Давид Авенира, и иде с миром.
22 ௨௨ தாவீதின் வீரர்களும் யோவாபும் அநேக பொருட்களைக் கொள்ளையிட்டு, படையிலிருந்து கொண்டு வந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதிடம் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடு போய்விட்டான்.
И се, отроцы Давидовы и Иоав идяху от исхода и корысть многу несяху с собою, и Авенир уже не бе с Давидом в Хевроне, яко отслан бяше, и отиде с миром.
23 ௨௩ யோவாபும் அவனோடு இருந்த எல்லா இராணுவமும் வந்தபோது, நேரின் மகனான அப்னேர் ராஜாவிடம் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாகப் போகவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.
Иоав же и все воинство его прииде: и возвестиша Иоаву, глаголюще: прихождаше Авенир сын Ниров к Давиду, и отсла его, и отиде с миром.
24 ௨௪ அப்பொழுது யோவாப் ராஜாவின் அருகில் வந்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?
И вниде Иоав к царю и рече: что сие сотворил еси? Се, прихождаше Авенир к тебе, и почто отпустил еси его, и отиде с миром?
25 ௨௫ நேரின் மகனான அப்னேரை அறிவீரே; அவன் உம்மை மோசம் போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான்.
Или не веси злобы Авенира сына Нирова, яко слукавствовати к тебе прииде, и уразумети исход твой и вход твой, и уведати вся елика твориши ты?
26 ௨௬ யோவாப் தாவீதைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் கிணறுவரை போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.
И возвратися Иоав от Давида, и посла послы вслед Авенира, и возвратиша его от кладязя Сеирамска: Давид же не ведяше.
27 ௨௭ அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடு இரகசியமாகப் பேசப்போகிறவன்போல, அவனை வாசலின் நடுவே ஒரு பக்கமாக அழைத்துப்போய், தன்னுடைய தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.
И возврати Авенира в Хеврон, и соврати его Иоав на страну от врат глаголати к нему лукавно: и удари его в лядвия, и умре в крови Асаила брата Иоавля.
28 ௨௮ தாவீது அதைக் கேட்டபோது: நேரின் மகனான அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என்னுடைய ராஜ்ஜியத்தின் மேலும் யெகோவாவுக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
И услыша Давид по сих и рече: чист есмь аз и царство мое от Господа и отныне и до века от крове Авенира сына Нирова:
29 ௨௯ அது யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய தகப்பனுடைய குடும்பத்தின்மேலும் சுமந்திருப்பதாக; யோவாபினுடைய வீட்டார்களிலே புண் உள்ளவனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் சாகிறவனும், அப்பம் இல்லாதவனும், ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை என்றான்.
да снидет на главу Иоавлю и на весь дом отца его, и да не оскудеет от дому Иоавля изливаяй семя, и прокаженный, и держайся жезла, и падаяй оружием, и умаленный хлебами.
30 ௩0 அப்னேர் கிபியோனிலே நடந்த யுத்தத்திலே தங்களுடைய தம்பியான ஆசகேலைக் கொன்றதினால் யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் அவனைப் படுகொலைசெய்தார்கள்.
Иоав же и Авесса брат его наблюдаху Авенира, понеже уби Асаила брата их в Гаваоне на брани.
31 ௩௧ தாவீது யோவாபையும், அவனோடு இருந்த எல்லா மக்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடை அணிந்து, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீது ராஜாவும் பாடைக்குப் பின்னே சென்றான்.
И рече Давид ко Иоаву и ко всем людем его: раздерите ризы вашя и препояшитеся вретищы, и рыдайте о Авенире. Сам же царь Давид идяше вслед одра.
32 ௩௨ அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்செய்யும்போது, ராஜா அப்னேரின் கல்லறையின் அருகில் சத்தமிட்டு அழுதான்; எல்லா மக்களும் அழுதார்கள்.
И погребоша Авенира в Хевроне. И воздвиже царь глас свой и плакася над гробом его, и вси людие плакаша о Авенире.
33 ௩௩ ராஜா அப்னேருக்காகப் புலம்பி: “மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
И плакася царь над Авениром и рече: еда смертию Навала умре Авенир?
34 ௩௪ உன்னுடைய கைகள் கட்டப்படவும் இல்லை; உன்னுடைய கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; அக்கிரமக்காரர்களுடைய கையில் இறக்கிறதுபோல இறந்தாயே” என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் பின்னும் அதிகமாக அவனுக்காக அழுதார்கள்.
Руце твои не связаны, нозе твои не во оковах: не приступил еси якоже Навал, пред сынми неправды пал еси. И собрашася вси людие плакатися его,
35 ௩௫ பகலாக இருக்கும்போது, மக்கள் எல்லோரும் வந்து: “அப்பம் சாப்பிடும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் மறைவதற்கு முன்பு நான் அப்பமாவது வேறு எதையாவது ருசி பார்த்தால், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்” என்று ஆணையிட்டுச் சொன்னான்.
и приидоша вси людие предложити Давиду ясти хлебы еще сущу дни. И клятся Давид, глаголя: сия да сотворит ми Бог и сия да приложит, яко аще не зайдет солнце, не имам вкусити хлеба ни иного чего.
36 ௩௬ மக்கள் எல்லோரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்தது அனைத்தும் எல்லா மக்களுக்கும் நலமாகத் தோன்றினது.
И познаша вси людие, и угодна быша пред ними вся, елика сотвори царь пред людьми.
37 ௩௭ நேரின் மகனான அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவால் உண்டாகவில்லை என்று அந்த நாளிலே எல்லா மக்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.
И разумеша вси людие и весь Израиль в той день, яко не бысть от царя убийства Авениру сыну Нирову.
38 ௩௮ ராஜா தன்னுடைய ஊழியக்காரர்களை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனிதனுமான ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?
И рече царь отроком своим: не весте ли, яко властелин велик паде в сей день во Израили?
39 ௩௯ நான் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டவனாக இருந்தபோதும், நான் இன்னும் பெலவீனன்; செருயாவின் மகன்களான இந்த மனிதர்கள் என்னுடைய பெலத்திற்கு மிஞ்சினவர்களாக இருக்கிறார்கள், அந்தத் தீங்கைச் செய்தவனுக்குக் யெகோவா அவனுடைய தீங்கிற்கு ஏற்றபடிச் சரிக்கட்டுவாராக என்றான்.
И яко аз есмь ближний днесь и возставлен в царя? Мужие же сии сынове Саруины жесточайшии мене суть: да воздаст Господь творящему лукавная по злобе его.