< 2 சாமுவேல் 24 >

1 யெகோவாவுடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் வந்தது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை எண்ணிக்கை பார் என்று அவர்களுக்கு எதிராகச் சொல்லுகிறதற்கு தாவீது தூண்டப்பட்டான்.
Một lần nữa Chúa Hằng Hữu nổi giận người Ít-ra-ên, nên Ngài khiến Đa-vít kiểm kê dân số để hại họ. Chúa Hằng Hữu phán: “Hãy đi và kiểm kê dân số Ít-ra-ên và Giu-đa.”
2 அப்படியே ராஜா தன்னோடு இருக்கிற தளபதியான யோவாபைப் பார்த்து: மக்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி நீ தாண்முதல் பெயெர்செபா வரையுள்ள இஸ்ரவேலர்களின் கோத்திரங்கள் எங்கும் சுற்றித்திரிந்து மக்களைக் கணக்கெடுங்கள் என்றான்.
Vua bảo Giô-áp, tướng chỉ huy quân đội đang ở với ông: “Hãy đi kiểm kê dân số các đại tộc Ít-ra-ên, từ Đan cho đến Bê-e-sê-ba và cho ta biết tổng số.”
3 அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனான யெகோவா மக்களை இப்பொழுது இருக்கிறதைவிட, நூறுமடங்கு அதிகமாகப் பெருகச்செய்வாராக; ஆனாலும் என் ஆண்டவனான ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.
Nhưng Giô-áp đáp: “Cầu xin Chúa Hằng Hữu, Đức Chúa Trời của vua cho vua thấy gia tăng dân số gấp trăm lần dân số hiện hữu. Nhưng tại sao vua muốn làm việc này?”
4 ஆனாலும் யோவாபும் இராணுவத்தலைவர்களும் சொன்ன வார்த்தை செல்லாமற்போகும்படி, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் மக்களைக் கணக்கெடுக்க, யோவாபும் இராணுவத்தலைவர்களும் ராஜாவைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
Tuy nhiên lệnh vua mạnh hơn ý kiến của Giô-áp và các quan chỉ huy, nên họ đành từ giã vua đi kiểm kê dân số.
5 யோர்தான் நதியைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் முகாமிட்டு,
Họ qua sông Giô-đan, cắm trại phía nam A-rô-e, một thành giữa thung lũng Gát, rồi từ đó đi Gia-ê-xe.
6 அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,
Kế đó, họ đi Ga-la-át, miền Ta-tim Hốt-si, Đan, vòng đến Si-đôn,
7 பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர்கள், கானானியர்களுடைய எல்லா பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,
đồn Ty-rơ, các thành của người Hê-vi và người Ca-na-an. Xuống miền nam đến Giu-đa, tận Bê-e-sê-ba.
8 இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதங்களும் இருபது நாட்களும் ஆனபிறகு எருசலேமிற்கு வந்தார்கள்.
Sau chín tháng hai mươi ngày, họ hoàn tất công tác và trở về Giê-ru-sa-lem.
9 யோவாப் மக்களைக் கணக்கெடுத்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்தவீரர்கள் 8,00,000 பேர் இருந்தார்கள்; யூதா மனிதர்கள் 5,00,000 பேர் இருந்தார்கள்.
Giô-áp dâng bản phúc trình lên vua, theo đó Ít-ra-ên có 800.000 người lính chiến có tài cầm gươm, còn Giu-đa có 500.000.
10 ௧0 இவ்விதமாக மக்களை எண்ணிப்பார்த்த பின்பு, ராஜாவின் இருதயம் அவனை நோகடித்தது; அப்பொழுது தாவீது யெகோவாவை நோக்கி: நான் இப்படிச் செய்ததால் பெரிய பாவம் செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் பெரிய முட்டாள்தனமான காரியம் செய்தேன் என்றான்.
Kiểm kê dân số xong, Đa-vít bị lương tâm cắn rứt, và thưa với Chúa Hằng Hữu: “Lạy Chúa Hằng Hữu! Con đã phạm trọng tội vì kiểm kê dân số. Xin Chúa Hằng Hữu tha tội cho con, vì con thật điên rồ!”
11 ௧௧ தாவீது காலையில் எழுந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனான காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
Sáng hôm sau, Chúa Hằng Hữu phán bảo Tiên tri Gát là người phục vụ trong triều Đa-vít, rằng:
12 ௧௨ நீ தாவீதிடம் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்.
“Hãy đi nói với Đa-vít rằng Chúa Hằng Hữu phán thế này: ‘Ta đưa cho ngươi ba điều. Hãy chọn một trong ba, rồi ta sẽ theo đó mà sửa trị ngươi.’”
13 ௧௩ அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருடங்கள் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதங்கள் உம்முடைய எதிரிகள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் உண்டாக வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப் பாரும் என்று சொன்னான்.
Vậy, Gát đến gặp Đa-vít và hỏi: “Vua chọn ba năm đói kém trong nước, hoặc ba tháng bị quân thù rượt đuổi, hoặc ba ngày bệnh dịch hoành hành trong lãnh thổ. Vua cân nhắc và quyết định để tôi thưa lại với Chúa, Đấng đã sai tôi.”
14 ௧௪ அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் யெகோவாவுடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்.
Đa-vít đáp: “Ta buồn khổ quá! Nhưng, thà rơi vào tay Chúa Hằng Hữu còn hơn vào tay người ta, bởi Ngài rộng lòng thương xót.”
15 ௧௫ அப்பொழுது யெகோவா இஸ்ரவேலிலே அன்று காலைதுவங்கி குறித்தகாலம்வரை கொள்ளைநோயை வரச்செய்தார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாவரையுள்ள மக்களில் 70,000 பேர் இறந்துபோனார்கள்.
Vậy, Chúa Hằng Hữu cho bệnh dịch hoành hành trong khắp nước Ít-ra-ên, từ Đan cho đến Bê-e-sê-ba. Bắt đầu từ sáng hôm ấy cho đến hết thời gian ấn định, có đến 70.000 người chết.
16 ௧௬ தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன்னுடைய கையை அதின்மேல் நீட்டினபோது, யெகோவா அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, மக்களை அழிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன்னுடைய கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் யெகோவாவுடைய தூதன் எபூசியனான அர்வனாவினுடைய போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான்.
Khi thiên sứ ra tay hủy diệt Giê-ru-sa-lem, Chúa Hằng Hữu đổi ý về tai họa này, nên ra lệnh cho thiên sứ chấm dứt cuộc hủy diệt. Lúc ấy thiên sứ đang ở ngang sân đạp lúa của A-rau-na, người Giê-bu.
17 ௧௭ மக்களை வேதனைப்படுத்துகிற தூதனை தாவீது கண்டபோது, அவன் யெகோவாவை நோக்கி: இதோ, நான்தான் பாவம் செய்தேன்; நான்தான் அக்கிரமம் செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டுக்கும் விரோதமாக இருப்பதாக என்று விண்ணப்பம்செய்தான்.
Khi Đa-vít thấy thiên sứ giết hại dân, ông kêu xin Chúa Hằng Hữu: “Con mới chính là người có tội, còn đàn chiên này có làm gì nên tội đâu? Xin Chúa ra tay hành hạ con và gia đình con.”
18 ௧௮ அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
Ngay hôm ấy, Tiên tri Gát đến và nói với Đa-vít: “Vua xây ngay cho Chúa Hằng Hữu một bàn thờ tại sân đạp lúa A-rau-na, người Giê-bu.”
19 ௧௯ காத்துடைய வார்த்தையின்படியே தாவீது யெகோவா கற்பித்தபடி போனான்.
Theo lời Gát, Đa-vít thi hành lệnh Chúa Hằng Hữu.
20 ௨0 அர்வனா பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரர்களும் தன்னிடம் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைவரைக்கும் குனிந்து ராஜாவை வணங்கி,
Khi A-rau-na thấy vua và các thuộc hạ vua đi tới, vội ra đón, phủ phục sát đất,
21 ௨௧ ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை மக்களைவிட்டு நிறுத்தக் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி இந்தக் களத்தை உன்னுடைய கையிலே வாங்க வந்தேன் என்றான்.
hỏi: “Vua đến có việc gì?” Đa-vít đáp: “Để mua sân đạp lúa của ông và xây trên ấy một bàn thờ cho Chúa Hằng Hữu; mong rằng tai họa sẽ chấm dứt, không hành hại dân nữa.”
22 ௨௨ அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகங்களும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,
A-rau-na thưa: “Xin vua cứ tự nhiên sử dụng vật gì để tế, tùy ý. Đây sẵn có bò để dâng lễ thiêu, cũng có xe chở lúa và ách bò dùng làm củi.
23 ௨௩ அர்வனா அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தபின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனான யெகோவா உம்மிடம் கிருபையாக இருப்பாராக என்றான்.
Tôi xin dâng cho vua tất cả. Chỉ cầu xin Chúa Hằng Hữu, Đức Chúa Trời của vua nhậm lời vua.”
24 ௨௪ ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாக வாங்கி, என்னுடைய தேவனான யெகோவாவுக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன்னுடைய கையிலே விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்கு வாங்கிக்கொண்டான்.
Đa-vít đáp lời A-rau-na: “Không. Ta muốn mua của ông, chứ không muốn dùng vật không mất tiền dâng lên Chúa Hằng Hữu, Đức Chúa Trời của ta làm lễ thiêu như thế.” Vậy Đa-vít trả năm mươi miếng bạc, để mua sân đạp lúa và mấy con bò,
25 ௨௫ அங்கே தாவீது யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது யெகோவா தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.
Đa-vít xây tại đó một bàn thờ cho Chúa Hằng Hữu, dâng lễ thiêu và lễ cảm tạ cho Ngài. Chúa Hằng Hữu nhậm lời cầu nguyện và bệnh dịch không hoành hành nữa.

< 2 சாமுவேல் 24 >