< 2 சாமுவேல் 23 >

1 தாவீதின் கடைசி வார்த்தைகள்: “மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்;
Yei ne Dawid nsɛm a ɛtwaa toɔ: “Dawid, Yisai ba barima a Onyankopɔn maa no nkɔsoɔ a ɛyɛ nwanwa, na Yakob Onyankopɔn sraa no ngo no, ne nnwomsiaani papa bi nie:
2 யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
“Awurade honhom kasa fa me mu; ne nsɛm wɔ me tɛkrɛma so.
3 இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார்.
Israel Onyankopɔn kasaeɛ, Israel botan ka kyerɛɛ me sɛ: ‘Onipa a ɔdi ɔhene tenenee mu, na ɔde Nyamesuro di ɔhene no,
4 அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
ɔte sɛ anɔpa hann, ɔte sɛ owiapue a ɛhyerɛn ɛberɛ a omununkum nni hɔ; ɔte sɛ osutɔ a ɛma ahodwoɔ, na ɛma ɛserɛ foforɔ pue firi asase mu.’
5 என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ?
“Ɛyɛ me fie na Onyankopɔn ayi. Aane, ɔne me ayɛ apam a ɛwɔ hɔ daa. Ne nhyehyɛeɛ yɛ afebɔɔ, ebi nni hɔ bio, na wɔasɔ ano. Ɔbɛhwɛ me yiedie ne me nkɔsoɔ daa.
6 தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.
Na wɔn a wɔnnim Onyame no te sɛ nkasɛɛ a wɔbɛto aguo, ɛfiri sɛ, wɔwowɔ nsa a ɛsɔ mu.
7 அவைகளை ஒருவன் தொடப்போனால், இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான்.
Ɛsɛ sɛ obi kɔ amia mu ansa na watwa wɔn agu; wɔde ogya bɛhye wɔn dworobɛɛ.”
8 தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன்.
Edin a ɛdidi soɔ yi yɛ Dawid nnɔmmarima: Deɛ ɔdi ɛkan ne Yoseb-Basebet a ɔfiri Tahkemon, na ɔyɛ ɔsahene wɔ akofoɔ akɛseɛ Baasa bi so wɔ Dawid mmarima no mu. Ɔno na ɔde ne pea kumm atamfoɔ akofoɔ aha nwɔtwe wɔ ɔsa baako pɛ mu.
9 இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான்.
Deɛ ɔtɔ so mmienu wɔ Baasa no mu no ne Dodo babarima Eleasa a ɔyɛ Ahohi aseni. Ɛberɛ bi Eleasa ne Dawid ka boom, te gyinaeɛ, de tiaa Filistifoɔ ɛberɛ a Israel akodɔm no nyinaa adwane.
10 ௧0 இவன் எழுந்து தன்னுடைய கை சோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
Ɔkunkumm Filistifoɔ no ara kɔsii sɛ afei, na ɔntumi mpagya ne pea. Nanso, Awurade maa no dii nkonim saa da no. Akodɔm a aka no ansane amma, kɔsii ɛberɛ a ɛsɛ sɛ wɔkɔtase wɔn asadeɛ no.
11 ௧௧ இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயிறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது,
Deɛ ɔdi hɔ yɛ Sama a ɔyɛ Agee a ɔfiri Harar babarima. Ɛda koro bi, Filistifoɔ no boaa wɔn ho ano wɔ Lehi, na wɔto hyɛɛ Israelfoɔ no so asɛdua afuo bi mu. Israel akodɔm no dwaneeɛ,
12 ௧௨ இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்.
nanso, Sama gyinaa ne nan so pintinn wɔ afuo no mfimfini, kaa Filistifoɔ no guiɛ. Enti, Awurade ma ɔdii nkonim.
13 ௧௩ முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது,
Ɛberɛ bi, ɛduruu twaberɛ no a Dawid wɔ Adulam ɔbodan mu no, Filistia akodɔm bɛkyeree sraban wɔ Refaim bɔnhwa mu. Baasa no (a na wɔka Aduasa no ho no, wɔn a na wɔyɛ nimdefoɔ wɔ Dawid akofoɔ mu no) siane kɔhyiaa no wɔ hɔ.
14 ௧௪ தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாம் பெத்லெகேமிலே இருந்தது.
Saa ɛberɛ no na Dawid te sraban mu hɔ a na Filistifoɔ akodɔm no fa bi nso akɔtena Betlehem.
15 ௧௫ தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆசைகொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
Dawid daa nʼakɔnnɔ adi sɛ, “Ao, sɛ menya nsu pa a ɛwɔ Betlehem abura a ɛwɔ kuro no ɛpono no ano hɔ no bi a, mɛnom.”
16 ௧௬ அப்பொழுது இந்த மூன்று பெலசாலிகளும் பெலிஸ்தர்களின் முகாமில் துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனம் இல்லாமல் அதைக் யெகோவாவெக்கென்று ஊற்றிப்போட்டு:
Enti, Baasa no bu faa Filistifoɔ no mu kɔsaa nsuo no bi firii abura no mu, de brɛɛ Dawid. Nanso, wannom. Mmom, ɔhwie guu Awurade anim.
17 ௧௭ யெகோவாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
Ɔteaam sɛ, “Awurade ma ɛmpare me sɛ mɛnom yei! Saa nsuo yi som bo te sɛ saa mmarima yi a wɔde wɔn nkwa too hɔ, kɔsaa nsuo yi brɛɛ me yi mogya.” Enti, Dawid annom. Aninsɛm a Baasa no yɛeɛ nhwɛsoɔ bi nie.
18 ௧௮ யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி 300 பேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.
Na Yoab nua Seruia babarima Abisai nso dii Aduasa no anim. Ɛda bi, ɔde ne pea kumm atamfoɔ akofoɔ ahasa wɔ ɔsa baako pɛ mu. Saa mmaninsɛm yi enti na ɔgyee edin te sɛ Baasa no.
19 ௧௯ இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல.
Abisai na ɔgyee edin pa ara wɔ Aduasa no mu. Ɛwom na ɔnka Baasa no ho deɛ, nanso na ɔno ne Aduasa no safohene.
20 ௨0 பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.
Na Yehoiada babarima Benaia nso yɛ ɔkofoɔ kokodurufoɔ a ɔfiri Kabseel. Ɔdii aninsɛm bebree a ebi ne sɛ, ɔkumm Moab akofoɔ akɛseɛ baanu. Ɛberɛ bi nso, ɔtaa gyata, ma wɔkɔtɔɔ amena mu. Na sukyerɛmma atɔ, ama fam ayɛ toro deɛ, nanso ɔkyeree gyata no, kumm no.
21 ௨௧ அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான்.
Ɛberɛ bi nso, na akontibaa na ɛkura no, nanso ɔde kumm Misraimni ɔkofoɔ kɛseɛ bi a na ɔno kura pea. Benaia hwam pea no firii Misraimni no nsam, na ɔde kumm no.
22 ௨௨ இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான்.
Yeinom ne mmaninsɛm a ɛmaa Yehoiada babarima Benaia gyee edin te sɛ Baasa no.
23 ௨௩ 30 பேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
Na ɔwɔ animuonyam sene wɔn a na wɔfra Aduasa no mu, nanso na ɔnka Baasa no ho. Na Dawid yɛɛ no nʼawɛmfoɔ no so ɔsahene.
24 ௨௪ யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
Wɔn a aka a wɔfra Aduasa no mu nie: Yoab nuabarima Asahel; Dodo a ɔfiri Betlehem babarima Elhanan;
25 ௨௫ ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
Sama a ɔfiri Harod; Elika a ɔfiri Harod;
26 ௨௬ பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன்.
Heles a ɔfiri Palti; Ira, Ikes a ɔfiri Tekoa babarima;
27 ௨௭ ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
Abieser a ɔfiri Anatot; Sibekai a ɔfiri Husa;
28 ௨௮ அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
Salmon a ɔfiri Ahoa; Maharai a ɔfiri Netofa;
29 ௨௯ பானாவின் மகனான ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் வம்சத்தார்களின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
Heleb, Baana a ɔfiri Netofa babarima; Itai, Ribai a ɔfiri Gibea (Benyamin abusuakuo mu) babarima;
30 ௩0 பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி,
Benaia a ɔfiri Piraton; Hidai a ɔfiri Nahale-Gaas;
31 ௩௧ அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத்,
Arbatini Abi-Albon; Asmawet a ɔfiri Bahurim;
32 ௩௨ சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன்.
Eliahba a ɔfiri Saalbon; Yaasen mmammarima;
33 ௩௩ ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன்,
Yonatan, Sama a ɔfiri Harar babarima; Sarar, Ahiam a ɔfiri Maaka babarima;
34 ௩௪ மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன்.
Elifelet, Ahasbai a ɔfiri Maaka babarima; Eliam, Ahitofel a ɔfiri Gilo babarima;
35 ௩௫ கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,
Hesro a ɔfiri Karmel; Paarai a ɔfiri Arba;
36 ௩௬ சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத்தியனான பானி,
Igal, Natan a ɔfiri Soba babarima; Bani a ɔfiri Gad;
37 ௩௭ அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய்,
Selek a ɔfiri Amon; Naharai a ɔfiri Beerot (Yoab akodeɛkurafoɔ);
38 ௩௮ இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப்,
Ira a ɔfiri Yitri; Gareb a ɔfiri Yitri;
39 ௩௯ ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக 37 பேர்.
Hetini Uria. Wɔn nyinaa dodoɔ yɛ aduasa nson.

< 2 சாமுவேல் 23 >