< 2 சாமுவேல் 22 >

1 யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு:
וַיְדַבֵּר דָּוִד לַֽיהוָה אֶת־דִּבְרֵי הַשִּׁירָה הַזֹּאת בְּיוֹם הִצִּיל יְהוָה אֹתוֹ מִכַּף כָּל־אֹיְבָיו וּמִכַּף שָׁאֽוּל׃
2 “யெகோவா என்னுடைய கன்மலையும், என்னுடைய கோட்டையும், என்னுடைய இரட்சகருமானவர்.
וַיֹּאמַר יְהוָה סַֽלְעִי וּמְצֻדָתִי וּמְפַלְטִי־לִֽי׃
3 தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னுடைய இருப்பிடமும், என்னுடைய இரட்சகருமானவர்; என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே.
אֱלֹהֵי צוּרִי אֶחֱסֶה־בּוֹ מָגִנִּי וְקֶרֶן יִשְׁעִי מִשְׂגַּבִּי וּמְנוּסִי מֹשִׁעִי מֵחָמָס תֹּשִׁעֵֽנִי׃
4 துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன்.
מְהֻלָּל אֶקְרָא יְהוָה וּמֵאֹיְבַי אִוָּשֵֽׁעַ׃
5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது.
כִּי אֲפָפֻנִי מִשְׁבְּרֵי־מָוֶת נַחֲלֵי בְלִיַּעַל יְבַעֲתֻֽנִי׃
6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol h7585)
חֶבְלֵי שְׁאוֹל סַבֻּנִי קִדְּמֻנִי מֹֽקְשֵׁי־מָֽוֶת׃ (Sheol h7585)
7 எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது.
בַּצַּר־לִי אֶקְרָא יְהוָה וְאֶל־אֱלֹהַי אֶקְרָא וַיִּשְׁמַע מֵהֵֽיכָלוֹ קוֹלִי וְשַׁוְעָתִי בְּאָזְנָֽיו׃
8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
ותגעש וַיִּתְגָּעַשׁ וַתִּרְעַשׁ הָאָרֶץ מוֹסְדוֹת הַשָּׁמַיִם יִרְגָּזוּ וַיִּֽתְגָּעֲשׁוּ כִּֽי־חָרָה לֽוֹ׃
9 அவர் நாசியிலிருந்து புகை வந்தது, அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது, அதனால் தீப்பற்றிக்கொண்டது.
עָלָה עָשָׁן בְּאַפּוֹ וְאֵשׁ מִפִּיו תֹּאכֵל גֶּחָלִים בָּעֲרוּ מִמֶּֽנּוּ׃
10 ௧0 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
וַיֵּט שָׁמַיִם וַיֵּרַד וַעֲרָפֶל תַּחַת רַגְלָֽיו׃
11 ௧௧ கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார்.
וַיִּרְכַּב עַל־כְּרוּב וַיָּעֹף וַיֵּרָא עַל־כַּנְפֵי־רֽוּחַ׃
12 ௧௨ வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
וַיָּשֶׁת חֹשֶׁךְ סְבִיבֹתָיו סֻכּוֹת חַֽשְׁרַת־מַיִם עָבֵי שְׁחָקִֽים׃
13 ௧௩ அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
מִנֹּגַהּ נֶגְדּוֹ בָּעֲרוּ גַּחֲלֵי־אֵֽשׁ׃
14 ௧௪ யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார்.
יַרְעֵם מִן־שָׁמַיִם יְהוָה וְעֶלְיוֹן יִתֵּן קוֹלֽוֹ׃
15 ௧௫ அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்து, மின்னல்களை உபயோகித்து, அவர்களைச் சிதறடித்தார்.
וַיִּשְׁלַח חִצִּים וַיְפִיצֵם בָּרָק ויהמם וַיָּהֹֽם׃
16 ௧௬ யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
וַיֵּֽרָאוּ אֲפִקֵי יָם יִגָּלוּ מֹסְדוֹת תֵּבֵל בְּגַעֲרַת יְהוָה מִנִּשְׁמַת רוּחַ אַפּֽוֹ׃
17 ௧௭ உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
יִשְׁלַח מִמָּרוֹם יִקָּחֵנִי יַֽמְשֵׁנִי מִמַּיִם רַבִּֽים׃
18 ௧௮ என்னைவிட பெலவானாக இருந்த என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார்.
יַצִּילֵנִי מֵאֹיְבִי עָז מִשֹּׂנְאַי כִּי אָמְצוּ מִמֶּֽנִּי׃
19 ௧௯ என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
יְקַדְּמֻנִי בְּיוֹם אֵידִי וַיְהִי יְהוָה מִשְׁעָן לִֽי׃
20 ௨0 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
וַיֹּצֵא לַמֶּרְחָב אֹתִי יְחַלְּצֵנִי כִּי־חָפֵֽץ בִּֽי׃
21 ௨௧ யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
יִגְמְלֵנִי יְהוָה כְּצִדְקָתִי כְּבֹר יָדַי יָשִׁיב לִֽי׃
22 ௨௨ யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை.
כִּי שָׁמַרְתִּי דַּרְכֵי יְהוָה וְלֹא רָשַׁעְתִּי מֵאֱלֹהָֽי׃
23 ௨௩ அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல்,
כִּי כָל־משפטו מִשְׁפָּטָיו לְנֶגְדִּי וְחֻקֹּתָיו לֹא־אָסוּר מִמֶּֽנָּה׃
24 ௨௪ அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து, பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
וָאֶהְיֶה תָמִים לוֹ וָאֶשְׁתַּמְּרָה מֵעֲוֺנִֽי׃
25 ௨௫ ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார்.
וַיָּשֶׁב יְהוָה לִי כְּצִדְקָתִי כְּבֹרִי לְנֶגֶד עֵינָֽיו׃
26 ௨௬ தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
עִם־חָסִיד תִּתְחַסָּד עִם־גִּבּוֹר תָּמִים תִּתַּמָּֽם׃
27 ௨௭ புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
עִם־נָבָר תִּתָּבָר וְעִם־עִקֵּשׁ תִּתַּפָּֽל׃
28 ௨௮ சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது.
וְאֶת־עַם עָנִי תּוֹשִׁיעַ וְעֵינֶיךָ עַל־רָמִים תַּשְׁפִּֽיל׃
29 ௨௯ கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர்.
כִּֽי־אַתָּה נֵירִי יְהוָה וַיהוָה יַגִּיהַּ חָשְׁכִּֽי׃
30 ௩0 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
כִּי בְכָה אָרוּץ גְּדוּד בֵּאלֹהַי אֲדַלֶּג־שֽׁוּר׃
31 ௩௧ தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் சுத்தமானது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
הָאֵל תָּמִים דַּרְכּוֹ אִמְרַת יְהוָה צְרוּפָה מָגֵן הוּא לְכֹל הַחֹסִים בּֽוֹ׃
32 ௩௨ யெகோவாவைத் தவிர தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
כִּי מִי־אֵל מִבַּלְעֲדֵי יְהוָה וּמִי צוּר מִֽבַּלְעֲדֵי אֱלֹהֵֽינוּ׃
33 ௩௩ தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
הָאֵל מָעוּזִּי חָיִל וַיַּתֵּר תָּמִים דרכו דַּרְכִּֽי׃
34 ௩௪ அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார்.
מְשַׁוֶּה רגליו רַגְלַי כָּאַיָּלוֹת וְעַל בָּמוֹתַי יַעֲמִדֵֽנִי׃
35 ௩௫ வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப்.
מְלַמֵּד יָדַי לַמִּלְחָמָה וְנִחַת קֶֽשֶׁת־נְחוּשָׁה זְרֹעֹתָֽי׃
36 ௩௬ உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும்.
וַתִּתֶּן־לִי מָגֵן יִשְׁעֶךָ וַעֲנֹתְךָ תַּרְבֵּֽנִי׃
37 ௩௭ என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
תַּרְחִיב צַעֲדִי תַּחְתֵּנִי וְלֹא מָעֲדוּ קַרְסֻלָּֽי׃
38 ௩௮ என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன்.
אֶרְדְּפָה אֹיְבַי וָאַשְׁמִידֵם וְלֹא אָשׁוּב עַד־כַּלּוֹתָֽם׃
39 ௩௯ அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறியடித்து வெட்டினேன்.
וָאֲכַלֵּם וָאֶמְחָצֵם וְלֹא יְקוּמוּן וַֽיִּפְּלוּ תַּחַת רַגְלָֽי׃
40 ௪0 யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர்.
וַתַּזְרֵנִי חַיִל לַמִּלְחָמָה תַּכְרִיעַ קָמַי תַּחְתֵּֽנִי׃
41 ௪௧ நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
וְאֹיְבַי תַּתָּה לִּי עֹרֶף מְשַׂנְאַי וָאַצְמִיתֵֽם׃
42 ௪௨ அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை; யெகோவாவை நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை.
יִשְׁעוּ וְאֵין מֹשִׁיעַ אֶל־יְהוָה וְלֹא עָנָֽם׃
43 ௪௩ அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன்.
וְאֶשְׁחָקֵם כַּעֲפַר־אָרֶץ כְּטִיט־חוּצוֹת אֲדִקֵּם אֶרְקָעֵֽם׃
44 ௪௪ என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள்.
וַֽתְּפַלְּטֵנִי מֵרִיבֵי עַמִּי תִּשְׁמְרֵנִי לְרֹאשׁ גּוֹיִם עַם לֹא־יָדַעְתִּי יַעַבְדֻֽנִי׃
45 ௪௫ அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
בְּנֵי נֵכָר יִתְכַּֽחֲשׁוּ־לִי לִשְׁמוֹעַ אֹזֶן יִשָּׁמְעוּ לִֽי׃
46 ௪௬ அந்நியர்கள் பயந்துபோய், தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள்.
בְּנֵי נֵכָר יִבֹּלוּ וְיַחְגְּרוּ מִמִּסְגְּרוֹתָֽם׃
47 ௪௭ யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக.
חַי־יְהוָה וּבָרוּךְ צוּרִי וְיָרֻם אֱלֹהֵי צוּר יִשְׁעִֽי׃
48 ௪௮ அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
הָאֵל הַנֹּתֵן נְקָמֹת לִי וּמוֹרִיד עַמִּים תַּחְתֵּֽנִי׃
49 ௪௯ அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
וּמוֹצִיאִי מֵאֹֽיְבָי וּמִקָּמַי תְּרוֹמְמֵנִי מֵאִישׁ חֲמָסִים תַּצִּילֵֽנִי׃
50 ௫0 இதனால் யெகோவாவே, தேசங்களுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன்.
עַל־כֵּן אוֹדְךָ יְהוָה בַּגּוֹיִם וּלְשִׁמְךָ אֲזַמֵּֽר׃
51 ௫௧ தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.”
מגדיל מִגְדּוֹל יְשׁוּעוֹת מַלְכּוֹ וְעֹֽשֶׂה־חֶסֶד לִמְשִׁיחוֹ לְדָוִד וּלְזַרְעוֹ עַד־עוֹלָֽם׃

< 2 சாமுவேல் 22 >