< 2 சாமுவேல் 2 >

1 பின்பு தாவீது யெகோவாவை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் யெகோவா: போ என்றார்; எந்த இடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.
После сего Давид вопросил Господа, говоря: идти ли мне в какой-либо из городов Иудиных? И сказал ему Господь: иди. И сказал Давид: куда идти? И сказал Он: в Хеврон.
2 அப்படியே தாவீது தன்னுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரைச் சேர்ந்த அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரைச் சேர்ந்த அபிகாயிலோடும் அந்த இடத்திற்குப் போனான்.
И пошел туда Давид и обе жены его, Ахиноама Изреелитянка и Авигея, бывшая жена Навала, Кармилитянка.
3 மேலும், தன்னோடு இருந்த மனிதர்களையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் நகரங்களில் குடியேறினார்கள்.
И людей, бывших с ним, привел Давид, каждого с семейством его, и поселились в городе Хевроне.
4 அப்பொழுது யூதாவின் மனிதர்கள் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தார்களின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள். சவுலை அடக்கம்செய்தவர்கள் கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது.
И пришли мужи Иудины и помазали там Давида на царство над домом Иудиным. И донесли Давиду, что жители Иависа Галаадского погребли Саула.
5 தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்களிடம் தூதுவர்களை அனுப்பி, நீங்கள் உங்களுடைய ஆண்டவனான சவுலுக்கு இந்த தயவைச் செய்து, அவரை அடக்கம்செய்ததால், யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக.
И отправил Давид послов к жителям Иависа Галаадского, сказать им: благословенны вы у Господа за то, что оказали эту милость господину своему Саулу, помазаннику Господню, и погребли его и Ионафана, сына его,
6 யெகோவா உங்களைக் கிருபையும் உண்மையுமாக நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியால், நானும் இந்த நன்மைக்கு ஏற்றபடி உங்களை நடத்துவேன்.
и ныне да воздаст вам Господь милостью и истиною; и я сделаю вам благодеяние за то, что вы это сделали;
7 இப்பொழுதும் நீங்கள் உங்களுடைய கைகளை பெலப்படுத்திக்கொண்டு தைரியமாக இருங்கள்; உங்களுடைய ஆண்டவனான சவுல் இறந்த பின்பு, யூதா வம்சத்தார்கள் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
ныне да укрепятся руки ваши, и будьте мужественны; ибо господин ваш Саул умер, а меня помазал дом Иудин царем над собою.
8 சவுலின் படைத்தலைவனான நேரின் மகனான அப்னேர், சவுலின் மகனான இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,
Но Авенир, сын Ниров, начальник войска Саулова, взял Иевосфея, сына Саулова, и привел его в Маханаим,
9 அவனைக் கீலேயாத்தின்மேலும், அஷூரியர்கள்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக்கினான்.
и воцарил его над Галаадом, и Ашуром, и Изреелем, и Ефремом, и Вениамином, и над всем Израилем.
10 ௧0 சவுலின் மகனான இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, 40 வயதாக இருந்தான்; அவன் இரண்டுவருடங்கள் ஆட்சி செய்தான்; யூதா கோத்திரத்தார்கள் மட்டும் தாவீதைப் பின்பற்றினார்கள்.
Сорок лет было Иевосфею, сыну Саулову, когда он воцарился над Израилем, и царствовал два года. Только дом Иудин остался с Давидом.
11 ௧௧ தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாக இருந்த நாட்களின் எண்ணிக்கை ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆகும்.
Всего времени, в которое Давид царствовал в Хевроне над домом Иудиным, было семь лет и шесть месяцев.
12 ௧௨ நேரின் மகனான அப்னேர் சவுலின் மகனான இஸ்போசேத்தின் வீரர்களைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்.
И вышел Авенир, сын Ниров, и слуги Иевосфея, сына Саулова, из Маханаима в Гаваон.
13 ௧௩ அப்பொழுது செருயாளின் மகனான யோவாபும் தாவீதின் வீரர்களும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தின் அருகில் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.
Вышел и Иоав, сын Саруи, со слугами Давида, и встретились у Гаваонского пруда, и засели те на одной стороне пруда, а эти на другой стороне пруда.
14 ௧௪ அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர்கள் எழுந்து, நமக்கு முன்பாகச் சண்டையிடட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.
И сказал Авенир Иоаву: пусть встанут юноши и поиграют пред нами. И сказал Иоав: пусть встанут.
15 ௧௫ அப்பொழுது சவுலின் மகனான இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனிதர்களில் பன்னிரெண்டுபேர்களும், தாவீதுடைய வீரர்களிலே பன்னிரெண்டுபேர்களும், எழுந்து ஒரு பக்கமாகப் போய்,
И встали и пошли числом двенадцать Вениамитян со стороны Иевосфея, сына Саулова, и двенадцать из слуг Давидовых.
16 ௧௬ ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒன்றாக விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த இடம் எல்காத் அசூரிம் எனப்பட்டது.
Они схватили друг друга за голову, вонзили меч один другому в бок и пали вместе. И было названо это место Хелкаф-Хаццурим, что в Гаваоне.
17 ௧௭ அந்த நாளில் மிகவும் கடுமையான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனிதர்களும் தாவீதின் வீரர்களால் முறியடிக்கப்பட்டார்கள்.
И произошло в тот день жесточайшее сражение, и Авенир с людьми Израильскими был поражен слугами Давида.
18 ௧௮ அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் காட்டுமான்களில் ஒன்றைப்போல வேகமாக ஓடுகிறவனாக இருந்தான்.
И были там три сына Саруи: Иоав, и Авесса, и Асаил. Асаил же был легок на ноги, как серна в поле.
19 ௧௯ அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமாவது இடதுபுறமாவது, அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
И погнался Асаил за Авениром и преследовал его, не уклоняясь ни направо, ни налево от следов Авенира.
20 ௨0 அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
И оглянулся Авенир назад и сказал: ты ли это, Асаил? Тот сказал: я.
21 ௨௧ அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திலோ இடதுபக்கத்திலோ விலகி, வாலிபர்களில் ஒருவனைப் பிடித்து அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
И сказал ему Авенир: уклонись направо или налево, и выбери себе одного из отроков и возьми себе его вооружение. Но Асаил не захотел отстать от него.
22 ௨௨ பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னை ஏன் தரையில் விழ வெட்டவேண்டும்? பின்பு உன்னுடைய சகோதரனான யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
И повторил Авенир еще, говоря Асаилу: отстань от меня, чтоб я не поверг тебя на землю; тогда с каким лицем явлюсь я к Иоаву, брату твоему?
23 ௨௩ ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற மழுங்கிய முனையால் அவனுடைய வயிற்றிலே குத்தினான்; ஈட்டி மறுபக்கத்தில் வந்தது; அவன் அங்கேயே விழுந்து இறந்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அங்கேயே நின்றார்கள்.
и где это бывает? возвратись к брату твоему Иоаву. Но тот не захотел отстать. Тогда Авенир, поворотив копье, поразил его в живот; копье прошло насквозь его, и он упал там же и умер на месте. Все проходившие чрез то место, где пал и умер Асаил, останавливались.
24 ௨௪ யோவாபும் அபிசாயும் சூரியன் மறையும்வரை அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்திர வழிக்கு அருகில் இருக்கிற கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுவரை வந்தார்கள்.
И преследовали Иоав и Авесса Авенира. Солнце уже зашло, когда они пришли к холму Амма, что против Гиаха, на дороге к пустыне Гаваонской.
25 ௨௫ அப்பொழுது அப்னேருக்குப் பின்சென்ற பென்யமீன் மனிதர்கள் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
И собрались Вениамитяне вокруг Авенира и составили одно ополчение, и стали на вершине одного холма.
26 ௨௬ அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் அழித்துக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று தெரியாதோ, தங்களுடைய சகோதரர்களைவிட்டுப் பின்வாங்கும்படி எதுவரைக்கும் மக்களுக்குச் சொல்லாமல் இருப்பீர் என்றான்.
И воззвал Авенир к Иоаву, и сказал: вечно ли будет пожирать меч? Или ты не знаешь, что последствия будут горестные? И доколе ты не скажешь людям, чтобы они перестали преследовать братьев своих?
27 ௨௭ அதற்கு யோவாப்: இன்று காலையில் நீர் பேசாமல் இருந்திருந்தால் மக்கள் அவரவர்கள் தங்களுடைய சகோதரர்களைப் பின்தொடராமல், அப்போதே திரும்பியிருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
И сказал Иоав: жив Бог! если бы ты не говорил иначе, то еще утром перестали бы люди преследовать братьев своих.
28 ௨௮ யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது மக்கள் அனைவரும் இஸ்ரவேலைப் பின்தொடராமலும், யுத்தம்செய்யாமலும் நின்றுவிட்டார்கள்.
И затрубил Иоав трубою, и остановился весь народ, и не преследовали более Израильтян; сражение прекратилось.
29 ௨௯ அன்று இரவு முழுவதும் அப்னேரும் அவனுடைய மனிதர்களும் பாலைவனம் வழியாகப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோன் வழியே சென்று அதைக் கடந்து, மகனாயீமுக்குப் போனார்கள்.
Авенир же и люди его шли равниною всю ту ночь и перешли Иордан, и прошли весь Битрон, и пришли в Маханаим.
30 ௩0 யோவாப் அப்னேரைப் பின்தொடராமல் மக்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் வீரர்களில் 19 பேர்களும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள்.
И возвратился Иоав от преследования Авенира и собрал весь народ, и недоставало из слуг Давидовых девятнадцати человек кроме Асаила.
31 ௩௧ தாவீதின் வீரர்களோ பென்யமீனியர்களிலும், அப்னேரின் மனிதர்களிலும், 360 பேரைக் கொன்றிருந்தார்கள்.
Слуги же Давидовы поразили Вениамитян и людей Авенировых; пало их триста шестьдесят человек.
32 ௩௨ அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்; யோவாபும் அவனுடைய மனிதர்களும் இரவு முழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிற்கு வந்துசேர்ந்தார்கள்.
И взяли Асаила и похоронили его во гробе отца его, что в Вифлееме. Иоав же с людьми своими шел всю ночь и на рассвете прибыл в Хеврон.

< 2 சாமுவேல் 2 >