< 2 சாமுவேல் 18 >

1 தாவீது தன்னோடு இருந்த மக்களைக் கணக்கிட்டுப்பார்த்து, அவர்கள்மேல் 1,000 பேருக்கு தலைவர்களையும், 100 பேருக்கு தலைவர்களையும் ஏற்படுத்தி,
След това Давид събра людете, които бяха с него, и постави над тях хилядници и стотници.
2 பின்பு தாவீது படைகளில் மூன்றில் ஒரு பிரிவை யோவாபின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைச் செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைக் கித்தியனான ஈத்தாயின் கையிலுமாக அனுப்பி: நானும் உங்களோடு புறப்பட்டு வருவேன் என்று ராஜா இராணுவங்களுக்குச் சொன்னான்.
И Давид изпрати людете, една трета под началството на Иоава, една трета под началството на Ависея Саруиния син, Иоавовия брат, и една трета под началството на гетеца Итай. И царят каза на людете: Непременно ще изляза и аз с вас.
3 மக்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் இறந்துபோனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பத்தாயிரம்பேருக்கு சமமானவர்; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாக இருக்கும் என்றார்கள்.
Людете, обаче, отговориха: Да не излезеш; защото, ако ние се обърнем на бяг, няма да ги е грижа за нас; ако щат умра и половината от нас, пак няма да ги е грижа за нас; а ти си като десет хиляди от нас, затова сега е по-добре ти да си готов да ни помагаш от града.
4 அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா நகர வாசலின் ஓரத்திலே நின்றான்; மக்கள் எல்லோரும் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
И царят им каза: Каквото ви се вижда добро ще сторя. И тъй, царят застана на едната страна на портата, а всичките люде излязоха по стотини и по хиляди.
5 ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: வாலிபனான அப்சலோமை எனக்காக மெதுவாக நடத்துங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து தலைவர்களுக்கெல்லாம் கட்டளையிட்டதை மக்கள் எல்லோரும் கேட்டிருந்தார்கள்.
Тогава царят заповяда на Иоава, на Ависея и на Итая, казвайки: Пощадете ми младежа Авесалома. И всичките люде чуха, когато царят заповядваше на всичките военачалници за Авесалома.
6 மக்கள் வெளியே இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் புறப்பட்டபின்பு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
И тъй, людете, излизаха на полето против Израиля; и сражението стана в Ефремовия лес.
7 அங்கே இஸ்ரவேல் மக்கள் தாவீதின் வீரர்களுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டார்கள்; அங்கே அந்த நாளிலே இருபதாயிரம்பேர் சாகத்தக்கதாக பேரழிவு உண்டானது.
И там Израилевите люде бидоха разбити от Давидовите слуги, и в оня ден там стана голямо клане на двадесет хиляди души;
8 யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.
защото сражението в тая местност се разпростря по лицето на цялата страна, и в оня ден лесът погълна повече люде отколкото погълна ножа.
9 அப்சலோம் தாவீதின் வீரர்களை சந்திக்க நேர்ந்தது; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை தள்ளிப்போனது.
И случи се Авесалом да се срещне с Давидовите слуги. А Авесалом яздеше на мъска; и като влезе мъската под гъстите клони на един голям дъб, главата му се хвана в дъба, и той увисна между небето и земята: а мъската мина изпод него.
10 ௧0 அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலி மரத்திலே தொங்குவதைப் பார்த்தேன் என்றான்.
И един човек го видя та извести на Иоава, казвайки: Ето, видях Авесалома увиснал на дъб.
11 ௧௧ அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைப் பார்த்தாயே; பின்பு ஏன் அவனை அங்கேயே வெட்டி, நிலத்தில் விழும்படி செய்யவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு வாரையும் கொடுக்கக் கடமையுள்ளவனாக இருப்பேனே என்றான்.
А Иоав каза на човека, който му извести: Ето, ти си го видял; а защо не го порази там до земята? и аз бих ти дал десет сребърника и един пояс.
12 ௧௨ அந்த மனிதன் யோவாபை நோக்கி: என்னுடைய கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய மகன்மேல் என்னுடைய கையை நீட்டமாட்டேன்; வாலிபனான அப்சலோமை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.
А човекът рече на Иоава: И хиляда сребърника, ако бяха претеглени в шепата ми, не бих дигнал ръката си против царския син; защото ние слушахме царят как заповяда на тебе, на Ависея и на Итая, казвайки: Внимавайте всички, никой да се не докосне до младежа Авесалома.
13 ௧௩ ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவானது இல்லை; ஆதலால், நான் அதைச்செய்தால், என்னுடைய உயிருக்கே எதிராக செய்பவனாவேன், நீரும் எனக்கு எதிராக இருப்பீர் என்றான்.
Иначе, ако бяха постъпили невярно против живота му, нищо не се укрива от царя, и тогава сам ти би се обърнал против мене.
14 ௧௪ பின்பு யோவாப்: நான் இப்படி உன்னோடு பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையிலே மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடு தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய மார்பிலே குத்தினான்.
Тогава рече Иоав: Не трябва да губя време така с тебе. И като взе в ръката си три стрели, прониза с тях сърцето на Авесалома, като беше още жив всред дъба.
15 ௧௫ அப்பொழுது யோவாபின் ஆயுதம் ஏந்தினவர்களான பத்து வீரர்கள் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்று போட்டார்கள்.
И десет момъка, Иоавови оръженосци, заобиколиха Авесалома, та го удариха и убиха го.
16 ௧௬ அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி இராணுவத்தை நிறுத்தியதால், இராணுவம் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பினார்கள்.
Тогава Иоав засвири с тръбата, и людете се върнаха от преследването на Израиля; защото Иоав спря людете.
17 ௧௭ அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மிகப் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
И взеха Авесалома та го хвърлиха в един голям ров, вътре в леса, и натрупаха на него много голям куп камъни. И целият Израил побягна, всеки в шатъра си.
18 ௧௮ அப்சலோம் உயிரோடு இருக்கும்போது: என்னுடைய பெயரை நினைக்கச்செய்யும்படியாக எனக்கு மகன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரை சூட்டினான்; அது இந்த நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
А Авесалом, когато беше още жив, бе взел и издигнал за себе си стълба, който е в царската долина; защото си рече: Нямам син, който да опази паметта на името ми; затова нарече стълба по своето име; и той се нарича и до днес Авесаломов паметник.
19 ௧௯ சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.
Тогава рече Ахимаас, Садоковият син: Да се завтека сега да занеса на царя известие, че Господ въздаде за него на неприятелите му.
20 ௨0 யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் மகன் இறந்ததால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
А Иоав му рече: Няма да занесеш днес известия; друг ден ще бъдеш известител; а днес няма да занесеш известия, понеже царският син умря.
21 ௨௧ யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், பார்த்ததை ராஜாவுக்கு அறிவிப்பாயாக என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
Тогава рече Иоав на Хусина: Иди, извести на царя каквото си видял. И Хусина се поклони на Иоава и се завтече.
22 ௨௨ சாதோக்கின் மகனான அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பின்பாக நானும் ஓடுகிறேன் என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கும்போது, நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
Тогава Ахимаас, Садоковият син, рече пак на Иоава: Но каквото и да стане, нека тичам и аз, моля след Хусина. А Иоав му рече: Защо искаш да тичаш, синко, като не ще имаш възнаграждение за известията?
23 ௨௩ அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமவெளி நிலத்தின் வழியாக ஓடி கூஷிக்கு முந்திப்போனான்.
Но той пак рече: Но каквото и да стане, нека се завтека. Тогава му рече: Тичай. И така Ахимаас се завтече през полския път, и замина Хусина.
24 ௨௪ தாவீது உள் மற்றும் வெளி வாசலின் நடுவாக உட்கார்ந்திருந்தான்; இரவு காவலன் மதில் வாசலின் மேற்கூரையின்மேல் நடந்து, தன்னுடைய கண்களை உயர்த்தி, இதோ, ஒரு மனிதன் தனியே ஓடிவருகிறதைப் பார்த்து,
А Давид седеше между двете порти; и стража се изкачи на покрива на портата към стената, и като подигна очи видя, и, ето, един човек тичаше сам.
25 ௨௫ கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாக வந்தால், அவனுடைய வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் அருகே ஓடிவரும்போது,
И стражът извика и извести на царя. А царят рече: Щом е сам, има известия в устата му. И той притичваше и се приближаваше.
26 ௨௬ இரவு காவலன், வேறொருவன் ஓடிவருகிறதைப் பார்த்து: அதோ இன்னொரு மனிதன் தனியே ஓடிவருகிறான் என்று வாயிற்காவலனைக் கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
После стражът видя друг човек, който тичаше; и стражът извика към вратаря, казвайки: Ето още един човек, който тича сам. И рече царят: И той носи известия.
27 ௨௭ மேலும் இரவு காவலன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனிதன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
И рече стражът: струва ми се, че тичането на първия прилича на тичането на Ахимаас, Садоковия син. И рече царят: Добър човек е той, и иде с добри известия.
28 ௨௮ அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராகத் தங்கள் கைகளை எடுத்த மனிதர்களை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனான யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
А Ахимаас извика та рече на царя: Радвай се! И поклони се на царя с лице до земята и рече: Благословен да бъде Господ твоят Бог, Който предаде човеците, които подигнаха ръка против господаря ми царя.
29 ௨௯ அப்பொழுது ராஜா: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய குழப்பம் இருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
И царят рече: Здрав ли е младежът Авесалом? А Ахимаас отговори: Когато Иоав изпрати царския слуга, мене слугата ти, видях едно голямо смущение, но не знаех що беше.
30 ௩0 அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.
И рече царят: Обърни се та застани тук. И той се обърна та застана.
31 ௩௧ இதோ, கூஷி வந்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, நற்செய்தி, இன்று யெகோவா உமக்கு எதிராக எழும்பின எல்லோடைய கைக்கும் உம்மை விலக்கி நியாயம் செய்தார் என்றான்.
И, ето, дойде Хусина. И рече Хусина: Известия, господарю мой царю! защото днес Господ въздаде за тебе на всички, които се подигнаха против тебе.
32 ௩௨ அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான்.
И царят рече на Хусина: Здрав ли е младежът Авесалом? А Хусина отговори: Неприятелите на господаря ми царя, и всички, които се подигат против тебе за зло, дано станат като оня младеж!
33 ௩௩ அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, நகர வாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகும்போது: என் மகனான அப்சலோமே, என் மகனே, என் மகனான அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக இறந்துபோனால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.
И царят се смути много, и възкачи се в стаята над портата та плака; и като отиваше говореше така: Сине мой Авесаломе, сине мой, сине мой Авесаломе! да бих умрял аз вместо тебе, Авесаломе, сине мой, сине мой!

< 2 சாமுவேல் 18 >