< 2 பேதுரு 1 >
1 ௧ நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது:
Simeon Peter hlapec in apostelj Jezusa Kristusa, njim, ki so zadobili z nami enakovredno vero v pravici Boga našega in zveličarja Jezusa Kristusa;
2 ௨ தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின் மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும்.
Milost vam in mir naj se napolni v spoznanji Boga in Jezusa Gospoda našega.
3 ௩ தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல்,
Ker nam je Božja moč njegova vse za življenje in pobožnost podarila, po spoznanji njega, ki nas je poklical po slavi in kreposti,
4 ௪ இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Po katerih so se nam podarile največje in dragocene obljube, da postanete po njih deležniki Božje narave, ter ubežite pogubi, ki je v poželenji na svetu;
5 ௫ இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும்,
Ravno za to, prinesite sleherno pridnost, in pridodelite v veri svoji krepost, v kreposti pa spoznanje, v spoznanji pa zmernost,
6 ௬ ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும்,
V zmernosti pa stanovitnost, v stanovitnosti pa pobožnost,
7 ௭ தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள்.
V pobožnosti pa bratoljubje, v bratoljubji pa ljubezen.
8 ௮ இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள்.
Kajti če je to pri vas in obilo, dela, da niste nedelavni in nerodovitni v spoznanje Gospoda našega Jezusa Kristusa;
9 ௯ இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்.
Kdor namreč nima tega, on je slep, kratkoviden, in je pozabil očiščenja prejšnjih grehov svojih.
10 ௧0 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை.
Zato se, bratje, bolj trúdite, da utrdite poklic svoj in izvoljenje; kajti če tako delate, ne izpotaknete se nikdar.
11 ௧௧ இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios )
Kajti tako se vam bode obilo dovolil vhod v večno kraljestvo Gospoda našega in zveličarja Jezusa Kristusa. (aiōnios )
12 ௧௨ இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
Zato ne bodem v nemar pustil, vedno opominjati vas tega, dasì veste in ste utrjeni v dani vam resnici.
13 ௧௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து,
Pravično pa se mi zdí, dokler sem v tej koči, zbujati vas v opominjanji;
14 ௧௪ நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன்.
Vedoč, da skoraj pride odloga koče moje, kakor mi je tudi Gospod naš Jezus Kristus naznanil.
15 ௧௫ மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன்.
Potrudil se pa bodem, da bodete imeli po mojem odhodu vedno spominjati se tega.
16 ௧௬ நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
Kajti ne držeč se izmišljenih basni, oznanili smo vam Gospoda našega Jezusa Kristusa moč in prihod, nego ker smo bili samovidne priče njegovega veličastva.
17 ௧௭ இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
Kajti prejel je od Boga očeta čast in slavo, ko mu je prišel tak glas od veličastne slave: Ta je sin moj ljubljeni, kateri mi je po volji."
18 ௧௮ அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
In ta glas smo mi slišali prihajoč z neba, ko smo bili z njim na sveti gori.
19 ௧௯ அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும்.
In trdnejšo imamo besedo preroško, na katero po pravici pazite, kakor na svetilnico, ki sveti na temnem kraji, dokler dan ne prisije, in danica vzide v srcih vaših;
20 ௨0 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும்.
To najprej spoznajoč, da nobeno prerokovanje pisma ni lastne razrešitve;
21 ௨௧ தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
Kajti prerokovanje ni nikdar prišlo po volji človeški, nego od Duha svetega gnani so govorili sveti ljudje Božji.