< 2 இராஜாக்கள் 1 >
1 ௧ ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம்செய்து பிரிந்துபோனார்கள்.
А по смрти Ахавовој одметнуше се Моавци од Израиља.
2 ௨ அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டின் ஜன்னலிலிருந்து விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
А Охозија паде кроз решетку из горње собе своје у Самарији, и разболе се; па посла посланике и рече им: Идите, питајте Велзевула бога акаронског хоћу ли оздравити од ове болести.
3 ௩ யெகோவாவுடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களைச் சந்தித்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?
Али анђео Господњи рече Илији Тесвићанину: Устани, изађи на сусрет посланицима цара самаријског и реци им: Еда ли нема Бога у Израиљу, те идете да питате Велзевула бога у Акарону?
4 ௪ இதனால் நீ ஏறிப்படுத்த கட்டிலிலிருந்து இறங்காமல், நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.
А зато овако вели Господ: Нећеш се дигнути са постеље на коју си легао, него ћеш умрети. Потом отиде Илија.
5 ௫ அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் ஏன் திரும்பிவந்தீர்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான்.
А слуге се вратише к Охозији, и он им рече: Што сте се вратили?
6 ௬ அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
А они му рекоше: Срете нас један човек, и рече нам: Идите, вратите се к цару који вас је послао, и реците му: Овако вели Господ: Еда ли нема Бога у Израиљу, те шаљеш да питаш Велзевула бога у Акарону? Зато нећеш се дигнути с постеље на коју си легао, него ћеш умрети.
7 ௭ அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களைச் சந்தித்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது என்று கேட்டான்.
А он им рече: Какав беше на очи тај човек који вас срете и то вам рече?
8 ௮ அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;
А они му одговорише: Беше сав космат и опасан кожним појасом. А он рече: То је Илија Тесвићанин.
9 ௯ அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.
Тада посла к њему педесетника с његовом педесеторицом; и он отиде к њему; и гле, он сеђаше наврх горе: и педесетник му рече: Човече Божји, цар је заповедио, сиђи.
10 ௧0 அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
А Илија одговарајући рече педесетнику: Ако сам човек Божји, нека сиђе огањ с неба и прождре тебе и твоју педесеторицу. И сиђе огањ с неба и прождре њега и његову педесеторицу.
11 ௧௧ மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னைச் சீக்கிரமாக வரச்சொல்லுகிறார் என்றான்.
Опет посла к њему другог педесетника с његовом педесеторицом, који проговори и рече му: Човече Божји, цар је тако заповедио, сиђи брже.
12 ௧௨ எலியா அவர்களுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன்னுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரித்தது.
А Илија одговори и рече им: Ако сам човек Божји, нека сиђе огањ с неба и прождре тебе и твоју педесеторицу. И сиђе огањ Божји с неба и прождре њега и његову педесеторицу.
13 ௧௩ மறுபடியும் மூன்றாவது முறை ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; இந்த மூன்றாவது தலைவன் ஏறிவந்து, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனிதனே, என்னுடைய உயிரும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் உயிரும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.
Тада опет посла трећег педесетника с његовом педесеторицом. А овај трећи педесетник кад дође, клече на колена своја пред Илијом, и молећи га рече му: Човече Божји, да ти је драга душа моја и душа ове педесеторице, слуга твојих.
14 ௧௪ இதோ, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, முந்தின இரண்டு தலைவர்களையும், அவரவர்களுடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
Ето, сишао је огањ с неба и прождрао прва два педесетника с њиховом педесеторицом; али сада да ти је драга душа моја.
15 ௧௫ அப்பொழுது யெகோவாவுடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய்,
А анђео Господњи рече Илији: Иди с њим, и не бој га се. И уста Илија и отиде с њим к цару.
16 ௧௬ அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
И рече му: Овако вели Господ: зато што си слао посланике да питају Велзевула бога у Акарону као да нема Бога у Израиљу да би Га питао, нећеш се дигнути с постеље на коју си легао, него ћеш умрети.
17 ௧௭ எலியா சொன்ன யெகோவாவுடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்கு மகன் இல்லாததால், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய மகனான யோராமின் இரண்டாம் வருடத்தில் யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
И умре по речи Господњој, коју рече Илија, а на његово се место зацари Јорам, друге године царовања Јорама сина Јосафатовог над Јудом, јер он нема сина.
18 ௧௮ அகசியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
А остала дела Охозијина што је чинио, нису ли записана у дневнику царева Израиљевих?