< 2 இராஜாக்கள் 9 >
1 ௧ அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஒருவனை அழைத்து: நீ பயணத்திற்கான உடையணிந்துகொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.
Тогава пророк Елисей повика един от пророческите ученици та му раче: Препаши кръста си и вземи в ръката си тоя съд с миро та иди в Рамот-галаад;
2 ௨ நீ அங்கே சென்றபின்பு, நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே சென்று, அவனைத் தன் சகோதரர்களின் நடுவிலிருந்து எழுந்திருக்கச்செய்து, அவனை ஒரு உள் அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,
и като стигнеш там, подири в същото място Ииуя, син на Иосафата, Намесиевия син; тогава влез при него, дигни го отсред братята му, и въведи го в една вътрешна стая.
3 ௩ தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதிக்காமல் ஓடிப்போ என்றான்.
После вземи съда с мирото та го излей на главата му, и речи: Така казва Господ: Помазах те цар над Израиля. Тогава отвори вратата и бягай без да се забавиш.
4 ௪ அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான்.
И тъй, младежът, младият пророк, отиде в Рамот-галаад.
5 ௫ அவன் அங்கே சென்றபோது, சேனாதிபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாதிபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களில் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாதிபதியாகிய உமக்குத்தான் என்றான்.
И като стигна, ето, военачалниците седяха заедно; и рече: Имам дума към тебе, о военачалниче. И Ииуй рече: Към кого от всички нас? А той каза: Към тебе военачалниче.
6 ௬ அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் ஊற்றி: , அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் யெகோவாவுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன்.
И той стана та влезе в къщата. Тогава пророкът изля мирото на главата му и му рече: Така казва Господ Израилевият Бог: Помазах те цар над Господните люде, над Израиля.
7 ௭ நான் என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், யெகோவாவுடைய சகல ஊழியக்காரர்களின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படி நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடவேண்டும்.
И ти да поразиш дома на господаря си Ахаава, за да отмъстя върху Езавел за кръвта на слугите Си пророците, за кръвта на всичките Господни слуги.
8 ௮ ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படி, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர்விடும் ஒரு நாய்முதலாக இருக்காதபடி, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடிமைபட்டவனையும் மற்றவனையும் கருவறுத்து,
Защото целият Ахаавов дом ще бъде изтребен, и ще погубя от Ахаава всеки от мъжки пол, както малолетния, така и пълнолетния в Израил;
9 ௯ ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சரியாக்குவேன்.
и ще направя дома на Ахаава както дома на Еровоама, Наватовия син и както дома на Вааса, Ахиевия син.
10 ௧0 யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்செய்கிறவன் இல்லையென்று சொல்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.
А Езавел - кучетата ще я изядат в градския край на Езраел, и не ще да има кой да я погребе. И като отвори вратата, побягна.
11 ௧௧ யெகூ தன் எஜமானுடைய ஊழியக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்திற்கு எதற்காக வந்தான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனிதனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
Тогава Ииуй излезе при слугите на господаря си, и един от тях ме каза: Всичко добре ли е? Защо е дошъл тоя луд при тебе? А той им рече: Вие знаете човека и това, което каза.
12 ௧௨ அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று யெகோவா உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.
А те рекоха: Не е вярно; я ни кажи. А той рече: Така и така ми говори, като рече: Така казва Господ: Помазах те цар над Израиля.
13 ௧௩ அப்பொழுது அவர்கள் துரிதமாக அவரவர் தங்கள் ஆடைகளைப் படிகளின் உயரத்தில் அவனுக்கு கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
Тогава побързаха, и като взеха всеки дрехата си туриха ги под Ииуя на върха на стълбата, и засвириха с тръба и рекоха: Ииуй се възцари.
14 ௧௪ அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் மகன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டினான்; யோராமோ இஸ்ரவேலர்கள் எல்லோரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்துவைத்தான்.
Така Ииуй, син на Иосафата, Немесиевият син, направи заговор против Иорама. (А Иорам с целия Израил пазеше Рамот-галаад от сирийския цар Азаил;
15 ௧௫ ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே செய்த போரிலே, சீரியர்கள் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்வதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்; இது உங்களுக்குச் சம்மதமாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிச்செல்ல விடாதிருங்கள் என்றான்.
а цар Иорам беше се върнал в Езраел за да се цери от раните които сирийците му баха нанесли, когато войваше протви сирийския цар Азаил). И рече Ииуй: Ако това е вашето мнение, то да не излезе никой да побегне из града за да отиде и извести това в Езраел.
16 ௧௬ அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
Тогава Ииуй се качи на колесницата та отиде в Езаел, защото Иорам лежеше там. И Юдовият цар Охозия бе слязъл да види Иорама.
17 ௧௭ யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பி சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
И стражът, който стоеше на кулата в Езраел, когато съгледа дружината на Ииуя, като идеше, рече: Виждам една дружина. И рече Иорам: Вземи конник и прати да ги посрещне; и нака рече: С мир ли идеш?
18 ௧௮ அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்.
Отиде, прочее, конник да го посрещне, и рече: Така казва царят: С мир ли идеш? А Ииуй рече: Що имаш ти с мира? обърни се та иди отзаде ми. И стражарят извести, казвайки: Пратеникът стигна до тях, но не се връща.
19 ௧௯ ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான்.
Тогава изпрати втори конник, който отиде при тях та рече: Така казва царят: С мир ли идеш? А Ииуй отговори: Що имаш ти се мира? обърни се та иди отзаде ми.
20 ௨0 அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் மகனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாக ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.
И стражът извести, казвайки: Стигна до тях, но и той не се връща; а канането прилима на карането на Ииуя, Намасиевия син, защото кара като луд.
21 ௨௧ அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.
Тогава рече Иорам: Впрегнете. И впрегнаха колесницата му. И Израилевият цар Иорам и Юдовият цар Охозия излязоха, всеки в колесницата си, и отидоха да посрещнат Ииуя, и намериха го в нивата на езраелеца Навутей.
22 ௨௨ யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கும்போது சமாதானம் ஏது என்றான்.
И Иорам, като вия, Ииуя, рече: С мир ли идеш, Ииуе? А той отговори: Какъв мир докле са толкоз вного блудствата и чародействата на майка ти Езавел?
23 ௨௩ அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.
Тогава Иорам обърна юзда та побягна, като думаше на Охозия: Предателство, Охозие!
24 ௨௪ யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் ஊடுருவிப் போகத்தக்கதாக, அவனை அவனுடைய புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.
А Иий дръпна лъка си с пълна сила та устрели Иорама между плещите му така щото стрелата излезе през сърцето му; а той се пригърби в колесницата си.
25 ௨௫ அப்பொழுது யெகூ, தன் சேனாதிபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒன்றுசேர்ந்து அவனுடைய தகப்பனாகிய ஆகாபின் பின்னே குதிரையில் ஏறிவருகிறபோது, யெகோவா இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.
Тогава рече Ииуй на военачалника си Видкар: Вземи та го хвърли в оная част от нивата, която пренадлежи на езраелеца Навутей; защото спомни си, че, когато аз и ти яздехме подир баща му Ахаава, Господ произнесе против него това пророчество:
26 ௨௬ நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவனுடைய மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது யெகோவா சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.
Не видях ли вчера кръвта на Навутея и кръвта на синовете му, казва Господ? И в тая част от нивата ще ти въздам, казва Господ. Сега, прочее, дигни, хвърли го в тая част, според Господното слово.
27 ௨௭ இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாக ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் அருகில் இருக்கிற கூர் என்னும் மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே இறந்துபோனான்.
А Юдовият цар Охозия, като видя това побягна през пътя на градинската къща. И ииу се спусна подир него и рече: Поразете тогова в колесницата. И поразиха го в негорнището на Гер, близо до Ивлеам; и той побягна в Магедон и умря там.
28 ௨௮ அவனுடைய வேலைக்காரர்கள் அவனை இரதத்தில் ஏற்றி எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்செய்தார்கள்.
И слугите му го докараха на колесница ва Ерусалим, погребаха го в гроба му с бащите му в Давидовия град.
29 ௨௯ இந்த அகசியா, ஆகாபுடைய மகனாகிய யோராமின் பதினோராம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
А Охозия бе се възцарил над Юда в единадесетата година на Иорама Ахаавовия сен.
30 ௩0 யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,
Тага Ииуй дойде в Езраел и Езавел като чу начерни клепачите на очите си, накити главата си и надникна през прозореца.
31 ௩௧ யெகூ பட்டணத்து நுழைவாயிலுக்கு வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி பாதுகாக்கப்பட்டானா என்றாள்.
И, като влизаше Ииуй в портата, те рече: С мир ли идеш, ти Зимриевце, убиецо на господаря си?
32 ௩௨ அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என்னுடன் இருக்கிறது யார் யார் என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று அதிகாரிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
А той подигна лицето си към прозореца и рече: Кой е от към мене? Кой? И надникнаха към него двама трима скопци.
33 ௩௩ அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,
И рече: Хвърлете я долу. И те я хвърлиха долу; и пръсна от кръвта й по стената и по конете; и той я сгази.
34 ௩௪ உள்ளேபோய், சாப்பிட்டுக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த பெண்ணைப் பார்த்து, அவளை அடக்கம் செய்யுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.
И като влезе та яде и пи, рече: Идете сега и вижте тая проклета и погребете я, защото е царска дъщеря.
35 ௩௫ அவர்கள் அவளை அடக்கம்செய்யப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறொன்றையும் காணவில்லை.
И отидоха да я погребат, но не намериха от нея освен черепа, нозете и дланите на ръцете.
36 ௩௬ ஆகையால் அவர்கள் திரும்பிவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது யெகோவா திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
И когато се върнаха та му явиха това, той рече: Това е словото, което Господ говори чрез слугата Си тесвиеца Илия, като рече: В градския край на Езраел кучетата ще изядат месата на Езавел;
37 ௩௭ இதுதான் யேசபேலென்று சொல்லமுடியாத அளவிற்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.
и трупът на Езавел в градския край на Езраел ще бъде като гной по лицето на полето, така щото не ще да рекат: Това е Езавел.