< 2 இராஜாக்கள் 8 >
1 ௧ எலிசா தான் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயை நோக்கி: நீ உன் குடும்பத்தாரோடு எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாவது போய் தங்கியிரு; யெகோவா பஞ்சத்தை வரச்செய்வார்; அது ஏழுவருடங்கள் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
И глагола Елиссей к жене, еяже воскреси сына, глаголя: востани и иди ты и дом твой, и обитай идеже аще можеши обитати, яко призва Господь глад на землю, и приидет на землю седмь лет.
2 ௨ அந்தப் பெண் எழுந்து, தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தையின்படியே செய்து, தன் குடும்பத்தாரோடுகூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், ஏழுவருடங்கள் குடியிருந்தாள்.
И воста жена, и сотвори но глаголу Елиссееву, и пойде сама и дом ея, и обита на земли иноплеменничи седмь лет.
3 ௩ ஏழுவருடங்கள் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தைவிட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடுவதற்காகப் போனாள்.
И бысть но скончании седми лет, и возвратися жена от земли иноплеменничи во град, и прииде возопити к царю о доме своем и о селех своих.
4 ௪ அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனிதனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாகச் சொல் என்றான்.
И глагола царь ко Гиезию отроку Елиссеа человека Божия глаголя: повеждь ми ныне вся великая, яже сотвори Елиссей.
5 ௫ இறந்துபோனவனை உயிரோடு எழுப்பினார் என்பதை அவன் ராஜாவிற்குச் சொல்லுகிறபோது, இதோ, அவன் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயாகிய அந்தப் பெண் வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவிடம் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த பெண்; எலிசா உயிரோடு எழுப்பின இவளுடைய மகன் இவன்தான் என்றான்.
И бысть ему поведающу цареви, яко жива сотвори сына умершаго: и се, жена, еяже воскреси Елиссей сына ея, вопиющи ко цареви о доме своем и о селех своих, и рече Гиезий: господине царю, сия жена и сей сын ея, егоже жива сотвори Елиссей.
6 ௬ ராஜா அந்த பெண்ணைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரமாகச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவளுக்குரிய எல்லாவற்றையும், அவள் தேசத்தைவிட்டுப் போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கச் செய் என்றான்.
И вопроси царь жену: и поведа ему. И даде ей царь скопца единаго, глаголя возврати вся, яже ея суть, и вся плоды села ея, от да, в оньже остави землю, даже до ныне.
7 ௭ சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனிதன் இவ்விடத்திற்கு வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது.
И прииде Елиссей в Дамаск. И сын Адеров царь Сирский разболеся, и возвестиша ему, глаголюще: прииде человек Божий до зде.
8 ௮ ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனிதனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.
И рече царь ко Азаилу: приими в руку свою дар, и иди во сретение человеку Божию, и вопроси Господа им, глаголя: аще ли жив буду от болезни сея?
9 ௯ ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய மகன் என்னை உம்மிடத்திற்கு அனுப்பி, இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.
И иде Азаил на сретение ему, и взя дар в руку свою, и вся благая Дамаскова, бремя четыредесять велблюдов, и прииде, и ста пред ним, и рече ко Елиссею: сын твой, сын Адеров, царь Сирский, посла мя к тебе вопросити, глаголя: буду ли жив от болезни моея сея?
10 ௧0 எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் யெகோவா எனக்குக் காண்பித்தார் என்றான்.
И рече к нему Елиссей: иди и рцы ему: живя поживеши: но показа ми Господь, яко смертию умрет.
11 ௧௧ பின்பு தேவனுடைய மனிதன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகும்வரை அவனைப் பார்த்துக்கொண்டே அழுதான்.
И предста лицу его, и возложи (руки) даже до постыдения, и плакася человек Божий.
12 ௧௨ அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவனே, ஏன் அழுகிறீர் என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் மக்களுக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியால் அழுகிறேன்; நீ அவர்களுடைய கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்களுடைய வாலிபர்களைப் பட்டயத்தால் கொன்று, அவர்களுடைய குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிற்றைக் கிழித்துப்போடுவாய் என்றான்.
И рече Азаил: что яко господин мой плачет? И рече: вем елика сотвориши сыном Израилевым зла: крепости их сожжеши огнем, и избранныя их избиеши мечем, и младенцы их разбиеши, и во чреве имеющыя их расторгнеши.
13 ௧௩ அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்வதற்கு நாயைப்போல இருக்கிற உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் யெகோவா எனக்குத் தெரிவித்தார் என்றான்.
И рече Азаил: кто есть раб твой, пес мертвый, яко сотворит глагол сей? И рече Елиссей: показа ми тя Господь царствующа над Сириею.
14 ௧௪ இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் எஜமானிடத்திற்கு வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,
И отиде от Елиссеа и вниде ко господину своему. И рече ему (царь): что ти рече Елиссей? Отвеща: рече ми Елиссей, живя поживеши.
15 ௧௫ மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவனுடைய முகத்தின்மேல் விரித்தான்; அதனால் அவன் இறந்துபோனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாக ராஜாவானான்.
И бысть во утрии, и взя одеяло, и намочи в воде, и обложи на лице его, и умре: и воцарися Азаил вместо его.
16 ௧௬ இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய ஐந்தாம் வருட ஆட்சியில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாக இருக்கும்போது, யோசபாத்தின் மகனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ஆட்சிசெய்யத் துவங்கினான்.
В лето пятое Иорама сына Ахаава царя Израилева и Иосафата царя Иудина, воцарися Иорам сын Иосафатов царь Иудин:
17 ௧௭ அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
сын тридесяти и двою лету бе, внегда воцаритися ему, и осмь лет царствова во Иерусалиме,
18 ௧௮ அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
и ходи в пути царей Израилевых, якоже сотвори дом Ахаавль, бе бо дщи Ахаавля жена ему, и сотвори лукавое пред Господем.
19 ௧௯ யெகோவா: உன் மகன்களுக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னபடியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் அழிக்கவில்லை.
И не хотяше Господь потребити Иуды, Давида ради раба Своего, якоже рече дати ему светилник и сыном его во вся дни.
20 ௨0 அவனுடைய நாட்களில் யூதாவுடைய ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
Во дни его отвержеся Едом из под руки Иудины и постави над собою царя.
21 ௨௧ அதனாலே யோராம் சகல இரதங்களோடுங்கூட சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவர்களையும் தாக்கியபோது, மக்கள் தங்களுடைய கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
И взыде Иорам в Сиор, и вся колесницы яже с ним. И бысть ему воставшу, и изби Едома обступившаго окрест его, и князи колесниц, и бежаша людие в селения своя.
22 ௨௨ அப்படியே யூதாவுடைய ஆளுகையின் கீழிருந்த ஏதோமியர்கள், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல கலகம்செய்தார்கள்; அக்காலத்தில்தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள்.
И отступи Едом из под руки Иудины да дне сего: тогда отвержеся Ловна во время оно.
23 ௨௩ யோராமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அனைத்தும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
И прочая словес Иорамлих, и вся елика сотвори, не се ли, сия писана в книзе словес дний царей Иудиных?
24 ௨௪ யோராம் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவனுடைய மகனாகிய அகசியா ராஜாவானான்.
И успе Иорам со отцы своими, и погребен бысть со отцы своими во граде Давида отца своего: и царствова Охозиа сын его вместо его.
25 ௨௫ இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய பன்னிரண்டாம் வருட ஆட்சியிலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா ராஜாவானான்.
В лето второенадесять Иорама сына Ахаавля царя Израилева, царствовати нача Охозиа сын Иорама царя Иудина:
26 ௨௬ அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே ஒரு வருடம் எருசலேமில் அரசாட்சி செய்தான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் மகளான அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்.
сын двадесяти двух лет бысть Охозиа, егда нача царствовати, и лето едино царствова во Иерусалиме. Имя же матери его Гофолиа, дщерь Амвриа царя Израилева.
27 ௨௭ அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தம் கலந்திருந்தான்.
И хождаше по путем дому Ахаавля, и сотвори лукавое пред Господем, якоже дом Ахаавль: зять бо бе дому Ахаавля.
28 ௨௮ அவன் ஆகாபின் மகனாகிய யோராமோடேகூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போரிடப்போனான்; சீரியர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
И иде со Иорамом сыном Ахаавлим на брань, на Азаила царя иноплеменнича в Рамоф Галаадский, и уязвиша Сиряне Иорама.
29 ௨௯ ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, சீரியர்கள் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்ப்பதற்குப் போனான்.
И возвратися царь Иорам целитися во Иезраель от язв, имиже уязвиша его в Рамофе, егда ратоваше той на Азаила царя Сирска, и Охозиа сын Иорамль царь Иудин сниде видети Иорама, сына Ахаавля, во Иезраель, яко боляше той.