< 2 இராஜாக்கள் 6 >
1 ௧ தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
И пророческите ученици казаха на Елисея: Ето сега, мястото, гдето живеем та внимаваме пред тебе е тясно за нас.
2 ௨ நாங்கள் யோர்தான்வரை சென்று அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
Нека отидам, молим, до Иордан, и от там да вземем всеки по една греда да живеем. А той отговори: Идете.
3 ௩ அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியார்களாகிய எங்களுடன் வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
И един от тях каза: Благоволи, моля, да дойдеш и ти със слугата си. И той отговори: Ще дойда.
4 ௪ அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகில் வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
Отиде, прочее, с тях. И като отидоха до Иордан, сечяха дървета.
5 ௫ ஒருவன் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும்போது கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று சத்தமிட்டான்.
А един от тях като сечеше среда, желязото падна във водата; и той извика и рече: Ах, господарю мой! то беше взето на заем!
6 ௬ தேவனுடைய மனிதன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கிளையை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கச் செய்து,
А Божият човек рече: Где падна? И показа му мястото. Тогава той отсече едно дръвце та го хвърли там; и желязото изплава.
7 ௭ அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
И рече: Вземи си го. И той простря ръка та го взе.
8 ௮ அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக போர்செய்து, இந்த இந்த இடத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் வேலைக்காரர்களோடு ஆலோசனைசெய்தான்.
А сирийският цар, като воюваше против Израиля, съветваше се със слугите си, та каза: На еди-кое-си място ще разположа стана си.
9 ௯ ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
Тогава Божият човек прати до Израилевия цар да кажат: Пази се да не минеш през това място, защото сирийците са слезли там.
10 ௧0 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனிதன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன இடத்திற்கு மனிதர்களை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேக முறை தன்னைக் காத்துக்கொண்டான்.
И Израилевият цар прати до мястото, за което Божият човек му каза и го предупреди; и опази се от там не еднъж, нито дваж.
11 ௧௧ இந்தக் காரியத்தால் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் இராணுவ அதிகாரிகளை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவிற்கு உளவாளியாக இருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
И сърцето на сирийския цар се смути поради това нещо; за туй свика слугите си та из каза: Не щете ли да ми обадите, кой от нашите е за Израилевия цар?
12 ௧௨ அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான்.
А един от слугите му каза: Никой, господарю мой царю; но пророкът, който е в Израиля, Елисей, известява на Израилевия цар думите, които говориш в спалнята си.
13 ௧௩ அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
И рече: Идете, научете се где е, зада пратя да го заловят. И известиха му казвайки: Ето, в Дотан е.
14 ௧௪ அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இரவிலே வந்து பட்டணத்தை சூழ்ந்துகொண்டார்கள்.
Тогава той прати там коне, колесници и голяма войска, които дойдоха през нощта и обиколиха града.
15 ௧௫ தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
И на слутринта, когато слугата на Божия човек стана та излезе, ето, войска с коне и колесници беше обиколила града. И рече му слугата му: Ах, господарю мой! Какво ще правим?
16 ௧௬ அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
А той отговори: Не бой се, защото ония, които са с нас, важат повече от ония, които са с тях.
17 ௧௭ அப்பொழுது எலிசா விண்ணப்பம்செய்து: யெகோவாவே, இவன் பார்க்கும்படி இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே யெகோவா அந்த வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
И помоли се Елисей, казвайки: Моля Ти се, Господи, отвори му очите за да види. И Господ отвори очите на слугата та видя, и, ето, хълмът бе пълен с огнени коне и колесници около Елисея.
18 ௧௮ அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார்.
И когато слязоха към врага, Елисей се помоли Господу казвайки: Моля Ти се, порази тия люде със слепота. И порази ги със слепота, според както каза Елисей.
19 ௧௯ அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.
Тогава Елисей им рече: Не е тоя пътят, нито е тоя градът: дойдете подир мене, и ще ви заведа при човека, когото търсите. И отведе ги в Самария.
20 ௨0 அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: யெகோவாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் யெகோவா அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
И когато стигнаха в Самария, Елисей рече: Господи, отвори очите на тези за да видят. И Господ отвори очите им, та видяха; и, ето, бяха всред Самария.
21 ௨௧ இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.
А когато ги видя, Израилевият цар рече на Елисея: Да ги поразя ли, татко? да ги поразя ли?
22 ௨௨ அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான்.
А той отговори: Не ги поразявай. Поразил ли би ти ония, които би пленил с меча си и с лъка си? Сложи им хляб и вода, за да ядат и пият; и нека отидат при господаря си.
23 ௨௩ அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துசெய்து, அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய ஆண்டவனிடத்திற்குப் போய்விட்டார்கள்; சீரியர்களின் படைகள் இஸ்ரவேல் தேசத்திலே அதற்குப் பிறகு வரவில்லை.
И така, той им сложи много ястия; и след като ядоха и пиха, пусна ги, та отидоха при господаря си. И сирийските чети не дойдоха вече в Израилевата земя.
24 ௨௪ இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.
А след това, сирийският цар Венадад събра цялата си войска и дойде та обсади Самария.
25 ௨௫ அதனால் சமாரியாவிலே கொடிய பஞ்சம் ஏற்பட்டது; ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்வரை அதை முற்றுகையிட்டார்கள்.
И стана голям глад в Самария; защото, ето, обсаждаха я докле една оселова глава се продаваше за осемдесет сребърника, и четвърт кав гълъбова тор, за пет сребърника.
26 ௨௬ இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள்.
И като заминаваше Израилевият цар по стената, една жена извика към него и каза: Помогни, господарю мой, царю!
27 ௨௭ அதற்கு அவன்: யெகோவா உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
А той рече: Ако Господ не ти помогне, от где ще ти помогна аз? от гумното ли, или от лина?
28 ௨௮ ராஜா மேலும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்தப் பெண் என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று சாப்பிடுவோம்; நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம் என்றாள்.
И царят рече: Що имаш? А тя отговори: Тая жена ми рече: Дай твоя син да го изядем днес, а утре ще изядем моя син.
29 ௨௯ அப்படியே என் மகனை வேகவைத்துச் சாப்பிட்டோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைச் சாப்பிட அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவைத்துவிட்டாள் என்றாள்.
И тъй сварихме моя син та го изядохме; и на следния денй рекох: Дай твоя син да го изядем; а тя скри сина си.
30 ௩0 அந்தப் பெண்ணின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, மதிலின்மேல் நடந்துபோகிற அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே சணல் ஆடையை அணிந்திருக்கிறதை மக்கள் கண்டார்கள்.
И като чу царят думите на жената, раздра дрехите си; и като минаваше по стената, людете видяха, и, ето, извътре имаше вретище върху снагата му.
31 ௩௧ அவன்: சாப்பாத்தின் மகனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
Тогава рече: Така да ми направи Бог, да! и повече да притури, ако главата на Елисея, Сафатовия син, остане на него днес.
32 ௩௨ எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
А когато изпрати мъж от служещите му, Елисей седеше в къщата си и старейшините седяха с него; но преди да стигне пратеникът при него, той рече на старейшините: Виждате ли как тоя син на убийцата прати да ми отнемат главата? Гедайте, щом дойде пратеникът, затворете вратата и спрете го при вратата: тропота на нозете на господаря му не е ли подир него?
33 ௩௩ அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு யெகோவாவால் உண்டானது; நான் இனிக் யெகோவாவுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
И докато още говореше с тях, ето, пратеникът слезе при него; а царят го предвари и каза: Ето, от Господа е това зло; какво има да се надея вече на Господа?