< 2 இராஜாக்கள் 2 >
1 ௧ யெகோவா எலியாவை சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.
А кад Господ хтеде узети Илију у вихору на небу, пођоше Илија и Јелисије из Галгала.
2 ௨ எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னைப் பெத்தேல்வரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
И рече Илија Јелисију: Остани ти овде, јер мене Господ шаље до Ветиља. Али Јелисије рече: Тако жив био Господ и тако жива била душа твоја, нећу те оставити. И дођоше у Ветиљ.
3 ௩ அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
Тада дођоше к Јелисију синови пророчки који беху у Ветиљу и рекоше му: Знаш ли да ће данас Господ узети господара твог од тебе? А он рече: Знам, ћутите.
4 ௪ பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; யெகோவா என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
Опет му рече Илија: Јелисије, остани ти ту, јер ме Господ шаље у Јерихон. А он рече: Тако жив био Господ и тако жива била душа твоја, нећу те оставити. Тако дођоше у Јерихон.
5 ௫ எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
А синови пророчки који беху у Јерихону приступише к Јелисију, и рекоше му: Знаш ли да ће данас узети Господ од тебе господара твог? А он рече: Знам, ћутите.
6 ௬ பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
Опет му рече Илија: Остани ти ту, јер ме Господ шаље на Јордан. А он рече: Тако жив био Господ и тако била жива твоја душа, нећу те оставити. Тако отидоше обојица.
7 ௭ தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர் தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.
И педесет људи између синова пророчких отидоше и стадоше према њима из далека, а они обојица уставише се код Јордана.
8 ௮ அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இரண்டாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாக மறுகரைக்குப் போனார்கள்.
И узе Илија плашт свој, и савивши га удари њим по води, а она се раступи тамо и амо, те пређоше обојица сувим.
9 ௯ அவர்கள் மறுகரைக்குப் போனபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்க வேண்டுகிறேன் என்றான்.
А кад пређоше, рече Илија Јелисију: Ишти шта хоћеш да ти учиним, докле се нисам узео од тебе. А Јелисије рече: Да буду два дела духа твог у мене.
10 ௧0 அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ பார்த்தால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடைக்காது என்றான்.
А он му рече: Заискао си тешку ствар; али ако ме видиш кад се узмем од тебе, биће ти тако; ако ли не видиш, неће бити.
11 ௧௧ அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
И кад иђаху даље разговарајући се, гле, огњена кола и огњени коњи раставише их, и Илија отиде у вихору на небо.
12 ௧௨ அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாக இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அதற்குப் பிறகு காணாமல், தன் உடையைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.
А Јелисије видећи то викаше: Оче мој, оче мој! Кола Израиљева и коњици његови! И не виде га више; потом узе хаљине своје и раздре их на два комада.
13 ௧௩ பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
И подиже плашт Илијин, који беше спао с њега, и вративши се стаде на брегу јорданском.
14 ௧௪ எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய யெகோவா எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரண்டாகப் பிரிந்ததால் எலிசா இக்கரைக்கு வந்தான்.
И узевши плашт Илијин, који беше спао с њега, удари по води и рече: Где је Господ Бог Илијин? А кад и он удари по води, раступи се вода тамо и амо, и пређе Јелисије.
15 ௧௫ எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:
А кад с друге стране видеше синови пророчки, који беху у Јерихону, рекоше: Почину дух Илијин на Јелисију. И сретоше га и поклонише му се до земље.
16 ௧௬ இதோ, உமது அடியாரோடு ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்திரவு கொடும்; ஒருவேளை யெகோவாவுடைய ஆவியானவர் அவரை எடுத்து, மலைகளில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு எலிசா: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.
И рекоше му: Ево има у слуга твојих педесет јунака, нека иду и траже твог господара, да га не буде узео дух Господњи и бацио га на какво брдо или у какав до. А он рече: Не шаљите.
17 ௧௭ அவன் சோர்ந்துபோகும்வரை அவர்கள் அவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்ததால், அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாட்கள் அவனைத் தேடியும் காணாமல்,
Али они наваљиваху на њ докле му се не досади, те рече: Пошаљите. И послаше педесет људи који га тражише три дана, али не нађоше.
18 ௧௮ எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
И вратише се к њему, а он беше у Јерихону, па им рече: Нисам ли вам говорио да не идете?
19 ௧௯ பின்பு அந்தப் பட்டணத்தின் மனிதர்கள் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்பதற்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.
Тада грађани рекоше Јелисију: Гле, добро је живети у овом граду, као што господар наш види; али је вода зла и земља неродна.
20 ௨0 அப்பொழுது அவன்: ஒரு புதிய பாத்திரத்தை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,
А он им рече: Донесите ми нов котао, и метните у њ соли. И донесоше му.
21 ௨௧ அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
А он изађе на извор и баци у њ со, говорећи: Овако вели Господ: Исцелих ову воду, да не буде више од ње смрти ни неродности.
22 ௨௨ எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்தநாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமானது.
И вода поста здрава до данашњег дана по речи Јелисијевој, коју изрече.
23 ௨௩ அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள்.
Потом отиде оданде у Ветиљ; и кад иђаше путем, изиђоше мала деца из града и ругаху му се говорећи му: Ходи, ћело! Ходи, ћело!
24 ௨௪ அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: யெகோவாவின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது.
А Јелисије обазре се и видећи их прокле их именом Господњим. Тада изађоше две медведице из шуме, и растргоше четрдесет и двоје деце.
25 ௨௫ அவன் அந்த இடத்தைவிட்டுக் கர்மேல் மலைக்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.
Оданде отиде на гору кармилску, а оданде се врати у Самарију.