< 2 கொரிந்தியர் 5 >
1 ௧ பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios )
我们知道,当我们所居住的人间“帐篷”被拆毁,我们就会获得上帝为我们准备的居所,并非人类建造,而是天上永存的居所。 (aiōnios )
2 ௨ ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்;
我们叹息着、如此迫切地渴望能够拥有那天上的住处,就像换上新衣服。
3 ௩ அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம்.
当我们穿上这新衣服,就不会再赤身裸体。
4 ௪ இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் சுமை சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டும் என்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக போர்வை தரித்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
我们身处这“帐篷”中哀叹,被今生的苦压垮。与其说我们希望脱去今生之衣,倒不如说我们更期待将要穿上的新衣,这样就可以在这必死之躯中注入生命。
5 ௫ இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவி என்னும் உத்திரவாதத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
上帝为我们准备了这一切,带来灵保证我们达成这目标。
6 ௬ நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம்.
我们始终保持信心,但知晓一点:当我们安然生活在这肉体之躯中,就远离了主。
7 ௭ இந்த சரீரத்தில் குடியிருக்கும்போது கர்த்தரிடம் குடியில்லாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிந்தும், எப்பொழுதும் தைரியமாக இருக்கிறோம்.
(因为我们是靠信靠上帝而活,而不是靠看见他而活)。
8 ௮ நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம்.
正如我所说,我们充满信心地期盼着远离这身躯,与主同在。
9 ௯ அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம்.
因此我们立定志向,无论是否住在自己的身体中,都要让主欢喜。
10 ௧0 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும்.
因为最终我们所有人都要现身基督的审判之座面前,然后根据每个人此生所做的一切,或善或恶,接受应得的结果。
11 ௧௧ எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன்.
我们知道我们尊重主,以此劝勉众人。上帝非常了解我们是谁,我盼望你们的内心也能清楚地知晓自己。
12 ௧௨ இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மீண்டும் பெருமைப்படுத்திக்கொள்ளாமல், இருதயத்தில் இல்லை, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே, எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படி வாய்ப்பை உண்டாக்குகிறோம்.
我们并不是再次向你们夸赞自己,只是给予你们让我们骄傲的机会,让你们可以应对那些只看外在、不关注内心之人。
13 ௧௩ நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம்.
如果我们“疯狂”,那也是为了上帝。如果我们清醒,那是为了你们。
14 ௧௪ கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்;
基督的爱督促我们前进,因为我们确定他为众人而死,所以众人现在已经死去。
15 ௧௫ வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று வாழாமல், தங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தவருக்கென்று வாழ்வதற்காக, அவர் எல்லோருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம்.
基督为众人而死,就是为了让他们不再为自己而生,而是要为已经死去、并且死而复活的主而生。
16 ௧௬ எனவே, இனிமேல், நாங்கள் ஒருவனையும் சரீரத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் சரீரத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை சரீரத்தின்படி அறியோம்.
从今以后,我们不再从人的角度看待人。虽然我们曾经以人的角度看待基督,但现在已经不再如此。
17 ௧௭ இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது.
所以任何人如果与基督同在,就是一个全新的生命,旧人已去,新人已来!
18 ௧௮ இவைகளெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
上帝通过基督改变了我们,让我们不再与他为敌,而是成为朋友。上帝给了我们同样的使命,将他的敌人转变成他的朋友。
19 ௧௯ அது என்னவென்றால், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவிற்குள் அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடம் ஒப்புவித்தார்.
通过基督,上帝让这个世界不再与他为敌,而是成为朋友,不再追究他们的罪过,并且告诉了我们化敌为友的道理。
20 ௨0 ஆகவே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து, தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.
因此,我们就是基督的使者,上帝通过我们劝告世人:“请求你们,难道不希望回归、与上帝为友吗?”
21 ௨௧ நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதற்காக, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
耶稣从未犯下任何罪过,上帝让无罪的他经历罪的后果,让我们可以获得善良正义的性格,因为上帝就是善良正义。