< 2 கொரிந்தியர் 4 >
1 ௧ இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறது இல்லை.
ⲁ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲈⲞⲨⲞⲚⲦⲀⲚ ⲘⲘⲀⲨ ⲚⲦⲀⲒⲆⲒⲀⲔⲞⲚⲒⲀ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲀⲨⲚⲀⲒ ⲚⲀⲚ ⲚⲦⲈⲚⲈⲢⲚⲔⲀⲔⲒⲚ ⲀⲚ.
2 ௨ வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாக நடக்காமலும், தேவ வசனத்தைத் திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்குமுன்பாக எல்லா மனிதர்களுடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமர்கள் என்று விளங்கப்பண்ணுகிறோம்.
ⲃ̅ⲀⲖⲖⲀ ⲈⲚⲬⲰ ⲚⲤⲰⲚ ⲚⲚⲎ ⲈⲦϨⲎⲠ ⲚⲦⲈⲠϢⲒⲠⲒ ⲚⲦⲈⲚⲘⲞϢⲒ ⲀⲚ ϦⲈⲚⲞⲨⲘⲈⲦⲤⲈⲂ ⲞⲨⲞϨ ⲚⲦⲈⲚⲈⲢⲬⲢⲞϤ ⲀⲚ ϦⲈⲚⲠⲒⲤⲀϪⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲀⲖⲖⲀ ϦⲈⲚⲠⲒⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ⲚⲦⲈϮⲘⲈⲐⲘⲎⲒ ⲈⲚⲦⲀϨⲞ ⲘⲘⲞⲚ ⲈⲢⲀⲦⲈⲚ ⲚⲀϨⲢⲈⲚ ⲤⲨⲚⲎⲆⲈⲤⲒⲤ ⲚⲒⲂⲈⲚ ⲚⲦⲈⲚⲒⲢⲰⲘⲒ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪⲚⲞⲨϮ.
3 ௩ எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும்.
ⲅ̅ⲒⲤϪⲈ ⲆⲈ ⲈϤⲈⲢⲠⲔⲈϨⲎⲠ ⲚϪⲈⲠⲈⲚⲈⲨⲀⲄⲄⲈⲖⲒⲞⲚ ⲈϤϨⲎⲠ ϦⲈⲚⲚⲎ ⲈⲐⲚⲀⲦⲀⲔⲞ.
4 ௪ தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn )
ⲇ̅ⲈⲚ ⲞⲒⲤ ⲀⲪⲚⲞⲨϮ ⲀϤⲐⲰⲘ ⲚⲚⲒⲘⲈⲨⲒ ⲚⲦⲈⲚⲒⲀⲐⲚⲀϨϮ ⲚⲦⲈⲠⲀⲒⲈⲚⲈϨ ⲈϢⲦⲈⲘⲐⲢⲞⲨⲚⲀⲨ ⲈⲪⲞⲨⲰⲒⲚⲒ ⲚⲦⲈⲠⲒⲈⲨⲀⲄⲄⲈⲖⲒⲞⲚ ⲚⲦⲈⲠⲰⲞⲨ ⲘⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲈⲦⲈ ⲦϨⲒⲔⲰⲚ ⲘⲪⲚⲞⲨϮ ⲠⲈ. (aiōn )
5 ௫ நாங்கள் எங்களையே பிரசங்கிக்காமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் நாங்கள் உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம்.
ⲉ̅ⲚⲀⲚϨⲒⲰⲒϢ ⲄⲀⲢ ⲘⲘⲞⲚ ⲀⲚ ⲀⲖⲖⲀ ⲘⲠⲬ ⲤⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲈⲚϬⲞⲒⲤ ⲀⲚⲞⲚ ⲆⲈ ϨⲰⲚ ⲦⲈⲚⲞⲒ ⲘⲂⲰⲔ ⲚⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲒⲎⲤⲞⲨⲤ.
6 ௬ இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.
ⲋ̅ϪⲈ ⲪⲚⲞⲨϮ ⲀϤϪⲞⲤ ϪⲈ ⲞⲨⲞⲨⲰⲒⲚⲒ ⲈϤⲈⲈⲢⲞⲨⲰⲒⲚⲒ ϦⲈⲚⲠⲬⲀⲔⲒ ⲈⲦⲈ ⲪⲀⲒ ⲠⲈ ⲈⲦⲀϤⲈⲢⲞⲨⲰⲒⲚⲒ ϦⲈⲚⲚⲈⲚϨⲎⲦ ⲈⲨⲞⲨⲰⲒⲚⲒ ⲚⲦⲈⲠⲈⲘⲒ ⲚⲦⲈⲠⲰⲞⲨ ⲘⲪⲚⲞⲨϮ ϦⲈⲚⲠϨⲞ ⲚⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ.
7 ௭ இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
ⲍ̅ⲈⲞⲨⲞⲚⲦⲀⲚ ⲘⲘⲀⲨ ⲘⲠⲀⲒⲀϨⲞ ϦⲈⲚϨⲀⲚⲤⲔⲈⲨⲞⲤ ⲘⲂⲈⲖϪ ϨⲒⲚⲀ ϮⲘⲈⲦⲚⲒϢϮ ⲚⲦⲈⲚⲒϪⲞⲘ ⲚⲦⲈⲤϢⲰⲠⲒ ⲈⲐⲀ ⲪⲚⲞⲨϮ ⲦⲈ ⲞⲨⲞϨ ⲈⲚⲞⲨ ⲈⲂⲞⲖ ⲘⲘⲰⲦⲈⲚ ⲀⲚ ⲦⲈ.
8 ௮ நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை;
ⲏ̅ⲈⲚϨⲈϪϨⲰϪ ϦⲈⲚϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲀⲖⲖⲀ ⲚⲦⲈⲚϨⲈϪϨⲰϪ ⲀⲚ ⲈⲨϨⲒⲞⲨⲒ ⲘⲘⲞⲚ ⲈⲂⲞⲖ ⲀⲖⲖⲀ ⲚⲦⲈⲚϨⲰⲞⲨⲒ ⲈⲂⲞⲖ ⲀⲚ.
9 ௯ துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
ⲑ̅ⲈⲨϬⲞϪⲒ ⲚⲤⲰⲚ ⲀⲖⲖⲀ ⲀϤⲬⲰ ⲘⲘⲞⲚ ⲚⲤⲰϤ ⲀⲚ ⲈⲨⲢⲰϦⲦ ⲘⲘⲞⲚ ⲈϦⲢⲎⲒ ⲀⲖⲖⲀ ⲦⲈⲚⲦⲀⲔⲎⲞⲨⲦ ⲀⲚ
10 ௧0 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
ⲓ̅ⲈⲚⲤⲎⲞⲨ ⲚⲒⲂⲈⲚ ⲈⲚϤⲀⲒ ϦⲀ ⲪⲘⲞⲨ ⲚⲒⲎⲤⲞⲨⲤ ϦⲈⲚⲠⲈⲚⲤⲰⲘⲀ ϨⲒⲚⲀ ⲠⲒⲔⲈⲰⲚϦ ⲞⲚ ⲚⲦⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲦⲈϤⲞⲨⲞⲚϨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲈⲚⲤⲰⲘⲀ.
11 ௧௧ எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
ⲓ̅ⲁ̅ⲈⲚⲤⲎⲞⲨ ⲄⲀⲢ ⲚⲒⲂⲈⲚ ⲀⲚⲞⲚ ϦⲀ ⲚⲎ ⲈⲦⲞⲚϦ ⲤⲈϮ ⲘⲘⲞⲚ ⲈϦⲢⲎⲒ ⲈⲪⲘⲞⲨ ⲈⲐⲂⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ϨⲒⲚⲀ ⲠⲒⲔⲈⲰⲚϦ ⲞⲚ ⲚⲦⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲦⲈϤⲞⲨⲞⲚϨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲦⲈⲚⲤⲀⲢⲜ ⲈⲐⲚⲀⲘⲞⲨ.
12 ௧௨ இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது.
ⲓ̅ⲃ̅ϨⲰⲤⲦⲈ ⲪⲘⲞⲨ ⲀϤⲈⲢϨⲰⲂ ⲚϦⲎⲦⲈⲚ ⲠⲒⲰⲚϦ ⲆⲈ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ.
13 ௧௩ விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம்.
ⲓ̅ⲅ̅ⲈϤⲈⲚϦⲎⲦⲈⲚ ⲆⲈ ⲚϪⲈⲠⲀⲒⲠⲚⲈⲨⲘⲀⲠⲀⲒⲠⲚⲈⲨⲘⲀⲚⲦⲈⲪⲚⲀϨϮ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲤϦⲎⲞⲨⲦ ϪⲈ ⲀⲒⲚⲀϨϮ ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲀⲒⲤⲀϪⲒ ⲀⲚⲞⲚ ϨⲰⲚ ⲦⲈⲚⲚⲀϨϮ ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲦⲈⲚⲤⲀϪⲒ.
14 ௧௪ கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம்.
ⲓ̅ⲇ̅ⲈⲚⲈⲘⲒ ϪⲈ ⲪⲎ ⲈⲦⲀϤⲦⲞⲨⲚⲞⲤ ⲠϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲈϤⲈⲦⲞⲨⲚⲞⲤⲦⲈⲚ ϨⲰⲚ ⲚⲈⲘ ⲒⲎⲤⲞⲨⲤ ⲞⲨⲞϨ ϤⲚⲀⲦⲀϨⲞⲚ ⲈⲢⲀⲦⲈⲚ ⲚⲈⲘⲰⲦⲈⲚ.
15 ௧௫ தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது.
ⲓ̅ⲉ̅ϨⲰⲂ ⲄⲀⲢ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲀⲨϢⲰⲠⲒ ⲈⲐⲂⲈ ⲐⲎⲚⲞⲨ ϨⲒⲚⲀ ⲠⲒϨⲘⲞⲦ ⲚⲦⲈϤⲈⲢϨⲞⲨⲞ ⲞⲨⲞϨ ⲚⲦⲈϤⲐⲢⲈ ⲠⲒϢⲈⲠϨⲘⲞⲦ ⲈⲢϨⲞⲨⲞ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲚⲒⲘⲎϢ ⲈⲨⲰⲞⲨ ⲘⲪⲚⲞⲨϮ.
16 ௧௬ எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.
ⲓ̅ⲋ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲚⲦⲈⲚⲈⲢⲚⲔⲀⲔⲒⲚ ⲀⲚ ⲀⲖⲖⲀ ⲒⲤϪⲈ ⲠⲈⲚⲢⲰⲘⲒ ⲈⲦⲤⲀⲂⲞⲖ ϤⲚⲀⲦⲀⲔⲞ ⲀⲖⲖⲀ ⲠⲈⲦⲤⲀϦⲞⲨⲚ ϤⲞⲒ ⲘⲂⲈⲢⲒ ⲚⲈϨⲞⲞⲨ ϦⲀⲦϨⲎ ⲚⲈϨⲞⲞⲨ.
17 ௧௭ மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios )
ⲓ̅ⲍ̅ⲠⲀⲤⲒⲀⲒ ⲄⲀⲢ ⲚⲦⲈⲠⲈⲚϨⲞϪϨⲈϪ ⲚⲦⲈϮⲚⲞⲨ ⲀϤⲈⲢϨⲰⲂ ⲔⲀⲦⲀ ⲞⲨⲘⲈⲦϨⲞⲨⲞ ⲈⲨⲘⲈⲦϨⲞⲨⲞ ⲈⲨⲂⲀⲢⲞⲤ ⲚⲦⲈⲞⲨⲰⲞⲨ ⲚⲈⲚⲈϨ. (aiōnios )
18 ௧௮ ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios )
ⲓ̅ⲏ̅ⲈⲚϪⲞⲨϢⲦ ⲀⲚ ⲈⲚⲎ ⲈⲦⲀⲚⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲀⲖⲖⲀ ⲚⲎ ⲈⲦⲀⲚⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲀⲚ ⲚⲈⲦⲞⲨⲚⲀⲨ ⲄⲀⲢ ⲈⲢⲰⲞⲨ ϨⲀⲚⲠⲢⲞⲤ ⲞⲨⲤⲎⲞⲨ ⲚⲈⲚⲎ ⲆⲈ ⲈⲦⲈ ⲚⲤⲈⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲀⲚ ϨⲀⲚϢⲀ ⲈⲚⲈϨ ⲚⲈ. (aiōnios )