< 2 கொரிந்தியர் 3 >
1 ௧ எங்களை நாங்களே மீண்டும் பெருமைப்படுத்தத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாக இருக்கிறதுபோல, உங்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை அனுப்புவதும், உங்களிடமிருந்து சிபாரிசுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வதும் எங்களுக்குத் தேவையோ?
ਵਯੰ ਕਿਮ੍ ਆਤ੍ਮਪ੍ਰਸ਼ੰਸਨੰ ਪੁਨਰਾਰਭਾਮਹੇ? ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਤਿ ਯੁਸ਼਼੍ਮੱਤੋ ਵਾ ਪਰੇਸ਼਼ਾਂ ਕੇਸ਼਼ਾਞ੍ਚਿਦ੍ ਇਵਾਸ੍ਮਾਕਮਪਿ ਕਿੰ ਪ੍ਰਸ਼ੰਸਾਪਤ੍ਰੇਸ਼਼ੁ ਪ੍ਰਯੋਜਨਮ੍ ਆਸ੍ਤੇ?
2 ௨ எங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லா மனிதர்களாலும் அறிந்தும், படித்தும் இருக்கிற எங்களுடைய சிபாரிசுக் கடிதங்கள் நீங்கள்தானே.
ਯੂਯਮੇਵਾਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਸ਼ੰਸਾਪਤ੍ਰੰ ਤੱਚਾਸ੍ਮਾਕਮ੍ ਅਨ੍ਤਃਕਰਣੇਸ਼਼ੁ ਲਿਖਿਤੰ ਸਰ੍ੱਵਮਾਨਵੈਸ਼੍ਚ ਜ੍ਞੇਯੰ ਪਠਨੀਯਞ੍ਚ|
3 ௩ ஏனென்றால், நீங்கள் எங்களுடைய ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் கடிதமாக இருக்கிறீர்கள் என்று வெளிக்காட்டப்பட்டிருக்கிறது; அது மையினால் இல்லை, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளில் இல்லை, இருதயங்களாகிய பலகைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.
ਯਤੋ (ਅ)ਸ੍ਮਾਭਿਃ ਸੇਵਿਤੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਪਤ੍ਰੰ ਯੂਯਪੇਵ, ਤੱਚ ਨ ਮਸ੍ਯਾ ਕਿਨ੍ਤ੍ਵਮਰਸ੍ਯੇਸ਼੍ਵਰਸ੍ਯਾਤ੍ਮਨਾ ਲਿਖਿਤੰ ਪਾਸ਼਼ਾਣਪਤ੍ਰੇਸ਼਼ੁ ਤੰਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਕ੍ਰਵ੍ਯਮਯੇਸ਼਼ੁ ਹ੍ਰੁʼਤ੍ਪਤ੍ਰੇਸ਼਼ੁ ਲਿਖਿਤਮਿਤਿ ਸੁਸ੍ਪਸ਼਼੍ਟੰ|
4 ௪ நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாக இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறோம்.
ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨੇਸ਼੍ਵਰੰ ਪ੍ਰਤ੍ਯਸ੍ਮਾਕਮ੍ ਈਦ੍ਰੁʼਸ਼ੋ ਦ੍ਰੁʼਢਵਿਸ਼੍ਵਾਸੋ ਵਿਦ੍ਯਤੇ;
5 ௫ எங்களால் ஏதாவது ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் இல்லை; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
ਵਯੰ ਨਿਜਗੁਣੇਨ ਕਿਮਪਿ ਕਲ੍ਪਯਿਤੁੰ ਸਮਰ੍ਥਾ ਇਤਿ ਨਹਿ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰਾਦਸ੍ਮਾਕੰ ਸਾਮਰ੍ਥ੍ਯੰ ਜਾਯਤੇ|
6 ௬ புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது.
ਤੇਨ ਵਯੰ ਨੂਤਨਨਿਯਮਸ੍ਯਾਰ੍ਥਤੋ (ਅ)ਕ੍ਸ਼਼ਰਸੰਸ੍ਥਾਨਸ੍ਯ ਤੰਨਹਿ ਕਿਨ੍ਤ੍ਵਾਤ੍ਮਨ ਏਵ ਸੇਵਨਸਾਮਰ੍ਥ੍ਯੰ ਪ੍ਰਾਪ੍ਤਾਃ| ਅਕ੍ਸ਼਼ਰਸੰਸ੍ਥਾਨੰ ਮ੍ਰੁʼਤ੍ਯੁਜਨਕੰ ਕਿਨ੍ਤ੍ਵਾਤ੍ਮਾ ਜੀਵਨਦਾਯਕਃ|
7 ௭ எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த மரணத்திற்கான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமையின் பிரகாசம் உண்டானதினால், இஸ்ரவேல் மக்கள் அவன் முகத்தை நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருந்தார்களே.
ਅਕ੍ਸ਼਼ਰੈ ਰ੍ਵਿਲਿਖਿਤਪਾਸ਼਼ਾਣਰੂਪਿਣੀ ਯਾ ਮ੍ਰੁʼਤ੍ਯੋਃ ਸੇਵਾ ਸਾ ਯਦੀਦ੍ਰੁʼਕ੍ ਤੇਜਸ੍ਵਿਨੀ ਜਾਤਾ ਯੱਤਸ੍ਯਾਚਿਰਸ੍ਥਾਯਿਨਸ੍ਤੇਜਸਃ ਕਾਰਣਾਤ੍ ਮੂਸਸੋ ਮੁਖਮ੍ ਇਸ੍ਰਾਯੇਲੀਯਲੋਕੈਃ ਸੰਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਨਾਸ਼ਕ੍ਯਤ,
8 ௮ மங்கிப்போகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாக இருந்தால், ஆவியானவருக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாக இருக்கும்?
ਤਰ੍ਹ੍ਯਾਤ੍ਮਨਃ ਸੇਵਾ ਕਿੰ ਤਤੋ(ਅ)ਪਿ ਬਹੁਤੇਜਸ੍ਵਿਨੀ ਨ ਭਵੇਤ੍?
9 ௯ அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே.
ਦਣ੍ਡਜਨਿਕਾ ਸੇਵਾ ਯਦਿ ਤੇਜੋਯੁਕ੍ਤਾ ਭਵੇਤ੍ ਤਰ੍ਹਿ ਪੁਣ੍ਯਜਨਿਕਾ ਸੇਵਾ ਤਤੋ(ਅ)ਧਿਕੰ ਬਹੁਤੇਜੋਯੁਕ੍ਤਾ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
10 ௧0 இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமையே அல்ல.
ਉਭਯੋਸ੍ਤੁਲਨਾਯਾਂ ਕ੍ਰੁʼਤਾਯਾਮ੍ ਏਕਸ੍ਯਾਸ੍ਤੇਜੋ ਦ੍ਵਿਤੀਯਾਯਾਃ ਪ੍ਰਖਰਤਰੇਣ ਤੇਜਸਾ ਹੀਨਤੇਜੋ ਭਵਤਿ|
11 ௧௧ அன்றியும் மங்கிப்போவதே மகிமையுள்ளதாக இருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாக இருக்குமே.
ਯਸ੍ਮਾਦ੍ ਯਤ੍ ਲੋਪਨੀਯੰ ਤਦ੍ ਯਦਿ ਤੇਜੋਯੁਕ੍ਤੰ ਭਵੇਤ੍ ਤਰ੍ਹਿ ਯਤ੍ ਚਿਰਸ੍ਥਾਯਿ ਤਦ੍ ਬਹੁਤਰਤੇਜੋਯੁਕ੍ਤਮੇਵ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
12 ௧௨ நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாக இருப்பதால், மிகவும் தாராளமாகப் பேசுகிறோம்.
ਈਦ੍ਰੁʼਸ਼ੀਂ ਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾਂ ਲਬ੍ਧ੍ਵਾ ਵਯੰ ਮਹਤੀਂ ਪ੍ਰਗਲ੍ਭਤਾਂ ਪ੍ਰਕਾਸ਼ਯਾਮਃ|
13 ௧௩ மேலும் மங்கிப்போகிற மகிமையின் முடிவை இஸ்ரவேல் மக்கள் நோக்கிப் பார்க்காதபடி, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.
ਇਸ੍ਰਾਯੇਲੀਯਲੋਕਾ ਯਤ੍ ਤਸ੍ਯ ਲੋਪਨੀਯਸ੍ਯ ਤੇਜਸਃ ਸ਼ੇਸ਼਼ੰ ਨ ਵਿਲੋਕਯੇਯੁਸ੍ਤਦਰ੍ਥੰ ਮੂਸਾ ਯਾਦ੍ਰੁʼਗ੍ ਆਵਰਣੇਨ ਸ੍ਵਮੁਖਮ੍ ਆੱਛਾਦਯਤ੍ ਵਯੰ ਤਾਦ੍ਰੁʼਕ੍ ਨ ਕੁਰ੍ੰਮਃ|
14 ௧௪ அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்தநாள் வரைக்கும் பழைய ஏற்பாடு படிக்கும்போது, அந்த முக்காடு நீங்காமல் இருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.
ਤੇਸ਼਼ਾਂ ਮਨਾਂਸਿ ਕਠਿਨੀਭੂਤਾਨਿ ਯਤਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਪਠਨਸਮਯੇ ਸ ਪੁਰਾਤਨੋ ਨਿਯਮਸ੍ਤੇਨਾਵਰਣੇਨਾਦ੍ਯਾਪਿ ਪ੍ਰੱਛੰਨਸ੍ਤਿਸ਼਼੍ਠਤਿ|
15 ௧௫ மோசேயின் ஆகமங்கள் படிக்கப்படும்போது, இந்தநாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
ਤੱਚ ਨ ਦੂਰੀਭਵਤਿ ਯਤਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨੈਵ ਤਤ੍ ਲੁਪ੍ਯਤੇ| ਮੂਸਸਃ ਸ਼ਾਸ੍ਤ੍ਰਸ੍ਯ ਪਾਠਸਮਯੇ(ਅ)ਦ੍ਯਾਪਿ ਤੇਸ਼਼ਾਂ ਮਨਾਂਸਿ ਤੇਨਾਵਰਣੇਨ ਪ੍ਰੱਛਾਦ੍ਯਨ੍ਤੇ|
16 ௧௬ அவர்கள் கர்த்தரிடத்தில் மனம்திரும்பும்போது, அந்த முக்காடு எடுக்கப்படும்.
ਕਿਨ੍ਤੁ ਪ੍ਰਭੁੰ ਪ੍ਰਤਿ ਮਨਸਿ ਪਰਾਵ੍ਰੁʼੱਤੇ ਤਦ੍ ਆਵਰਣੰ ਦੂਰੀਕਾਰਿਸ਼਼੍ਯਤੇ|
17 ௧௭ கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு.
ਯਃ ਪ੍ਰਭੁਃ ਸ ਏਵ ਸ ਆਤ੍ਮਾ ਯਤ੍ਰ ਚ ਪ੍ਰਭੋਰਾਤ੍ਮਾ ਤਤ੍ਰੈਵ ਮੁਕ੍ਤਿਃ|
18 ௧௮ நாமெல்லோரும் திறந்த முகமாகக் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே பார்க்கிறதுபோலப் பார்த்து, ஆவியாக இருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகவே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமடைகிறோம்.
ਵਯਞ੍ਚ ਸਰ੍ੱਵੇ(ਅ)ਨਾੱਛਾਦਿਤੇਨਾਸ੍ਯੇਨ ਪ੍ਰਭੋਸ੍ਤੇਜਸਃ ਪ੍ਰਤਿਬਿਮ੍ਬੰ ਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍ਤ ਆਤ੍ਮਸ੍ਵਰੂਪੇਣ ਪ੍ਰਭੁਨਾ ਰੂਪਾਨ੍ਤਰੀਕ੍ਰੁʼਤਾ ਵਰ੍ੱਧਮਾਨਤੇਜੋਯੁਕ੍ਤਾਂ ਤਾਮੇਵ ਪ੍ਰਤਿਮੂਰ੍ੱਤਿੰ ਪ੍ਰਾਪ੍ਨੁਮਃ|