< 2 கொரிந்தியர் 12 >
1 ௧ மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
ಆತ್ಮಶ್ಲಾಘಾ ಮಮಾನುಪಯುಕ್ತಾ ಕಿನ್ತ್ವಹಂ ಪ್ರಭೋ ರ್ದರ್ಶನಾದೇಶಾನಾಮ್ ಆಖ್ಯಾನಂ ಕಥಯಿತುಂ ಪ್ರವರ್ತ್ತೇ|
2 ௨ கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
ಇತಶ್ಚತುರ್ದಶವತ್ಸರೇಭ್ಯಃ ಪೂರ್ವ್ವಂ ಮಯಾ ಪರಿಚಿತ ಏಕೋ ಜನಸ್ತೃತೀಯಂ ಸ್ವರ್ಗಮನೀಯತ, ಸ ಸಶರೀರೇಣ ನಿಃಶರೀರೇಣ ವಾ ತತ್ ಸ್ಥಾನಮನೀಯತ ತದಹಂ ನ ಜಾನಾಮಿ ಕಿನ್ತ್ವೀಶ್ವರೋ ಜಾನಾತಿ|
3 ௩ அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன்.
ಸ ಮಾನವಃ ಸ್ವರ್ಗಂ ನೀತಃ ಸನ್ ಅಕಥ್ಯಾನಿ ಮರ್ತ್ತ್ಯವಾಗತೀತಾನಿ ಚ ವಾಕ್ಯಾನಿ ಶ್ರುತವಾನ್|
4 ௪ அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
ಕಿನ್ತು ತದಾನೀಂ ಸ ಸಶರೀರೋ ನಿಃಶರೀರೋ ವಾಸೀತ್ ತನ್ಮಯಾ ನ ಜ್ಞಾಯತೇ ತದ್ ಈಶ್ವರೇಣೈವ ಜ್ಞಾಯತೇ|
5 ௫ இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
ತಮಧ್ಯಹಂ ಶ್ಲಾಘಿಷ್ಯೇ ಮಾಮಧಿ ನಾನ್ಯೇನ ಕೇನಚಿದ್ ವಿಷಯೇಣ ಶ್ಲಾಘಿಷ್ಯೇ ಕೇವಲಂ ಸ್ವದೌರ್ಬ್ಬಲ್ಯೇನ ಶ್ಲಾಘಿಷ್ಯೇ|
6 ௬ சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன்.
ಯದ್ಯಹಮ್ ಆತ್ಮಶ್ಲಾಘಾಂ ಕರ್ತ್ತುಮ್ ಇಚ್ಛೇಯಂ ತಥಾಪಿ ನಿರ್ಬ್ಬೋಧ ಇವ ನ ಭವಿಷ್ಯಾಮಿ ಯತಃ ಸತ್ಯಮೇವ ಕಥಯಿಷ್ಯಾಮಿ, ಕಿನ್ತು ಲೋಕಾ ಮಾಂ ಯಾದೃಶಂ ಪಶ್ಯನ್ತಿ ಮಮ ವಾಕ್ಯಂ ಶ್ರುತ್ವಾ ವಾ ಯಾದೃಶಂ ಮಾಂ ಮನ್ಯತೇ ತಸ್ಮಾತ್ ಶ್ರೇಷ್ಠಂ ಮಾಂ ಯನ್ನ ಗಣಯನ್ತಿ ತದರ್ಥಮಹಂ ತತೋ ವಿರಂಸ್ಯಾಮಿ|
7 ௭ அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது.
ಅಪರಮ್ ಉತ್ಕೃಷ್ಟದರ್ಶನಪ್ರಾಪ್ತಿತೋ ಯದಹಮ್ ಆತ್ಮಾಭಿಮಾನೀ ನ ಭವಾಮಿ ತದರ್ಥಂ ಶರೀರವೇಧಕಮ್ ಏಕಂ ಶೂಲಂ ಮಹ್ಯಮ್ ಅದಾಯಿ ತತ್ ಮದೀಯಾತ್ಮಾಭಿಮಾನನಿವಾರಣಾರ್ಥಂ ಮಮ ತಾಡಯಿತಾ ಶಯತಾನೋ ದೂತಃ|
8 ௮ அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.
ಮತ್ತಸ್ತಸ್ಯ ಪ್ರಸ್ಥಾನಂ ಯಾಚಿತುಮಹಂ ತ್ರಿಸ್ತಮಧಿ ಪ್ರಭುಮುದ್ದಿಶ್ಯ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕೃತವಾನ್|
9 ௯ அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன்.
ತತಃ ಸ ಮಾಮುಕ್ತವಾನ್ ಮಮಾನುಗ್ರಹಸ್ತವ ಸರ್ವ್ವಸಾಧಕಃ, ಯತೋ ದೌರ್ಬ್ಬಲ್ಯಾತ್ ಮಮ ಶಕ್ತಿಃ ಪೂರ್ಣತಾಂ ಗಚ್ಛತೀತಿ| ಅತಃ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಶಕ್ತಿ ರ್ಯನ್ಮಾಮ್ ಆಶ್ರಯತಿ ತದರ್ಥಂ ಸ್ವದೌರ್ಬ್ಬಲ್ಯೇನ ಮಮ ಶ್ಲಾಘನಂ ಸುಖದಂ|
10 ௧0 அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
ತಸ್ಮಾತ್ ಖ್ರೀಷ್ಟಹೇತೋ ರ್ದೌರ್ಬ್ಬಲ್ಯನಿನ್ದಾದರಿದ್ರತಾವಿಪಕ್ಷತಾಕಷ್ಟಾದಿಷು ಸನ್ತುಷ್ಯಾಮ್ಯಹಂ| ಯದಾಹಂ ದುರ್ಬ್ಬಲೋಽಸ್ಮಿ ತದೈವ ಸಬಲೋ ಭವಾಮಿ|
11 ௧௧ மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.
ಏತೇನಾತ್ಮಶ್ಲಾಘನೇನಾಹಂ ನಿರ್ಬ್ಬೋಧ ಇವಾಭವಂ ಕಿನ್ತು ಯೂಯಂ ತಸ್ಯ ಕಾರಣಂ ಯತೋ ಮಮ ಪ್ರಶಂಸಾ ಯುಷ್ಮಾಭಿರೇವ ಕರ್ತ್ತವ್ಯಾಸೀತ್| ಯದ್ಯಪ್ಯಮ್ ಅಗಣ್ಯೋ ಭವೇಯಂ ತಥಾಪಿ ಮುಖ್ಯತಮೇಭ್ಯಃ ಪ್ರೇರಿತೇಭ್ಯಃ ಕೇನಾಪಿ ಪ್ರಕಾರೇಣ ನಾಹಂ ನ್ಯೂನೋಽಸ್ಮಿ|
12 ௧௨ அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே.
ಸರ್ವ್ವಥಾದ್ಭುತಕ್ರಿಯಾಶಕ್ತಿಲಕ್ಷಣೈಃ ಪ್ರೇರಿತಸ್ಯ ಚಿಹ್ನಾನಿ ಯುಷ್ಮಾಕಂ ಮಧ್ಯೇ ಸಧೈರ್ಯ್ಯಂ ಮಯಾ ಪ್ರಕಾಶಿತಾನಿ|
13 ௧௩ எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள்.
ಮಮ ಪಾಲನಾರ್ಥಂ ಯೂಯಂ ಮಯಾ ಭಾರಾಕ್ರಾನ್ತಾ ನಾಭವತೈತದ್ ಏಕಂ ನ್ಯೂನತ್ವಂ ವಿನಾಪರಾಭ್ಯಃ ಸಮಿತಿಭ್ಯೋ ಯುಷ್ಮಾಕಂ ಕಿಂ ನ್ಯೂನತ್ವಂ ಜಾತಂ? ಅನೇನ ಮಮ ದೋಷಂ ಕ್ಷಮಧ್ವಂ|
14 ௧௪ இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
ಪಶ್ಯತ ತೃತೀಯವಾರಂ ಯುಷ್ಮತ್ಸಮೀಪಂ ಗನ್ತುಮುದ್ಯತೋಽಸ್ಮಿ ತತ್ರಾಪ್ಯಹಂ ಯುಷ್ಮಾನ್ ಭಾರಾಕ್ರಾನ್ತಾನ್ ನ ಕರಿಷ್ಯಾಮಿ| ಯುಷ್ಮಾಕಂ ಸಮ್ಪತ್ತಿಮಹಂ ನ ಮೃಗಯೇ ಕಿನ್ತು ಯುಷ್ಮಾನೇವ, ಯತಃ ಪಿತ್ರೋಃ ಕೃತೇ ಸನ್ತಾನಾನಾಂ ಧನಸಞ್ಚಯೋಽನುಪಯುಕ್ತಃ ಕಿನ್ತು ಸನ್ತಾನಾನಾಂ ಕೃತೇ ಪಿತ್ರೋ ರ್ಧನಸಞ್ಚಯ ಉಪಯುಕ್ತಃ|
15 ௧௫ எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
ಅಪರಞ್ಚ ಯುಷ್ಮಾಸು ಬಹು ಪ್ರೀಯಮಾಣೋಽಪ್ಯಹಂ ಯದಿ ಯುಷ್ಮತ್ತೋಽಲ್ಪಂ ಪ್ರಮ ಲಭೇ ತಥಾಪಿ ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರಾಣರಕ್ಷಾರ್ಥಂ ಸಾನನ್ದಂ ಬಹು ವ್ಯಯಂ ಸರ್ವ್ವವ್ಯಯಞ್ಚ ಕರಿಷ್ಯಾಮಿ|
16 ௧௬ அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
ಯೂಯಂ ಮಯಾ ಕಿಞ್ಚಿದಪಿ ನ ಭಾರಾಕ್ರಾನ್ತಾ ಇತಿ ಸತ್ಯಂ, ಕಿನ್ತ್ವಹಂ ಧೂರ್ತ್ತಃ ಸನ್ ಛಲೇನ ಯುಷ್ಮಾನ್ ವಞ್ಚಿತವಾನ್ ಏತತ್ ಕಿಂ ಕೇನಚಿದ್ ವಕ್ತವ್ಯಂ?
17 ௧௭ நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா?
ಯುಷ್ಮತ್ಸಮೀಪಂ ಮಯಾ ಯೇ ಲೋಕಾಃ ಪ್ರಹಿತಾಸ್ತೇಷಾಮೇಕೇನ ಕಿಂ ಮಮ ಕೋಽಪ್ಯರ್ಥಲಾಭೋ ಜಾತಃ?
18 ௧௮ தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா?
ಅಹಂ ತೀತಂ ವಿನೀಯ ತೇನ ಸಾರ್ದ್ಧಂ ಭ್ರಾತರಮೇಕಂ ಪ್ರೇಷಿತವಾನ್ ಯುಷ್ಮತ್ತಸ್ತೀತೇನ ಕಿಮ್ ಅರ್ಥೋ ಲಬ್ಧಃ? ಏಕಸ್ಮಿನ್ ಭಾವ ಏಕಸ್ಯ ಪದಚಿಹ್ನೇಷು ಚಾವಾಂ ಕಿಂ ನ ಚರಿತವನ್ತೌ?
19 ௧௯ நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம்.
ಯುಷ್ಮಾಕಂ ಸಮೀಪೇ ವಯಂ ಪುನ ರ್ದೋಷಕ್ಷಾಲನಕಥಾಂ ಕಥಯಾಮ ಇತಿ ಕಿಂ ಬುಧ್ಯಧ್ವೇ? ಹೇ ಪ್ರಿಯತಮಾಃ, ಯುಷ್ಮಾಕಂ ನಿಷ್ಠಾರ್ಥಂ ವಯಮೀಶ್ವರಸ್ಯ ಸಮಕ್ಷಂ ಖ್ರೀಷ್ಟೇನ ಸರ್ವ್ವಾಣ್ಯೇತಾನಿ ಕಥಯಾಮಃ|
20 ௨0 ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்;
ಅಹಂ ಯದಾಗಮಿಷ್ಯಾಮಿ, ತದಾ ಯುಷ್ಮಾನ್ ಯಾದೃಶಾನ್ ದ್ರಷ್ಟುಂ ನೇಚ್ಛಾಮಿ ತಾದೃಶಾನ್ ದ್ರಕ್ಷ್ಯಾಮಿ, ಯೂಯಮಪಿ ಮಾಂ ಯಾದೃಶಂ ದ್ರಷ್ಟುಂ ನೇಚ್ಛಥ ತಾದೃಶಂ ದ್ರಕ್ಷ್ಯಥ, ಯುಷ್ಮನ್ಮಧ್ಯೇ ವಿವಾದ ಈರ್ಷ್ಯಾ ಕ್ರೋಧೋ ವಿಪಕ್ಷತಾ ಪರಾಪವಾದಃ ಕರ್ಣೇಜಪನಂ ದರ್ಪಃ ಕಲಹಶ್ಚೈತೇ ಭವಿಷ್ಯನ್ತಿ;
21 ௨௧ மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன்.
ತೇನಾಹಂ ಯುಷ್ಮತ್ಸಮೀಪಂ ಪುನರಾಗತ್ಯ ಮದೀಯೇಶ್ವರೇಣ ನಮಯಿಷ್ಯೇ, ಪೂರ್ವ್ವಂ ಕೃತಪಾಪಾನ್ ಲೋಕಾನ್ ಸ್ವೀಯಾಶುಚಿತಾವೇಶ್ಯಾಗಮನಲಮ್ಪಟತಾಚರಣಾದ್ ಅನುತಾಪಮ್ ಅಕೃತವನ್ತೋ ದೃಷ್ಟ್ವಾ ಚ ತಾನಧಿ ಮಮ ಶೋಕೋ ಜನಿಷ್ಯತ ಇತಿ ಬಿಭೇಮಿ|