< 2 நாளாகமம் 29 >
1 ௧ எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அபியாள்.
И Езекиа нача царствовати сый двадесяти и пяти лет, и двадесять девять лет царствова во Иерусалиме. Имя же матери его Авиа, дщерь Захариина.
2 ௨ அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
Сотвори же правое пред Господем по всем, яже сотвори Давид отец его.
3 ௩ அவன் தன் அரசாட்சியின் முதலாம் வருடம் முதலாம் மாதத்தில் யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
И бысть егда ста на царстве своем в месяц первый, отверзе двери дому Господня и обнови их,
4 ௪ ஆசாரியர்களையும் லேவியர்களையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
и введе священники и левиты, и постави их на стране яже к востоку,
5 ௫ அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்: நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, உங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைப் பரிசுத்தம்செய்து, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
и рече им: послушайте мя, левити, ныне очиститеся и очистите дом Господа Бога отец наших, и изрините нечистоту из святилища:
6 ௬ நம்முடைய முன்னோர்கள் துரோகம்செய்து, நம்முடைய தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரைவிட்டு விலகி, தங்கள் முகங்களைக் யெகோவாவுடைய வாசஸ்தலத்தைவிட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள்.
яко отступиша отцы наши и сотвориша лукавое пред Господем Богом нашим, и оставиша Его, и отвратиша лице свое от скинии Господни, и даша хребет,
7 ௭ அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்கு சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
и заключиша врата храма, и погасиша светилники, и фимиамом не кадиша, и всесожжений не принесоша во святилищи Богу Израилеву:
8 ௮ ஆகையால் யெகோவாவுடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் பார்க்கிறபடி, துயரத்திற்கும், திகைப்பிற்கும், கேலிக்கும் ஒப்புக்கொடுத்தார்.
и разгневася яростию Господь на Иуду и на Иерусалим, и предаде их во ужас и погубление и на звиздание, якоже вы видите очима вашима:
9 ௯ இதினிமித்தம் நம்முடைய முன்னோர்கள் பட்டயத்தால் விழுந்து, நம்முடைய மகன்களும், மகள்களும், மனைவிகளும் சிறையிருப்பில் பிடிபட்டார்கள்.
и се, поражени быша отцы наши мечем, и сынове наши и дщери нашя и жены нашя в пленении в земли не своей, якоже и ныне суть:
10 ௧0 இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடு உடன்படிக்கைசெய்ய என் மனதிலே தீர்மானித்துக்கொண்டேன்.
ныне убо положите на сердца ваша, еже завещати завет с Господем Богом Израилевым, и отвратит гнев ярости Своея от нас:
11 ௧௧ என் மகன்களே, இப்பொழுது அசதியாக இருக்கவேண்டாம்; நீங்கள் யெகோவாவுக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியம்செய்கிறவர்களும் தூபம்காட்டுகிறவர்களுமாக இருக்கவும் உங்களை அவர் தெரிந்து கொண்டார் என்றான்.
и ныне не пренебрегайте, яко вас избра Господь стояти пред Ним, служити Ему, и да будете Ему служаще и кадяще.
12 ௧௨ அப்பொழுது கோகாத் வம்சத்தாரில் அமாசாயின் மகன் மாகாத்தும், அசரியாவின் மகன் யோவேலும், மெராரியின் வம்சத்தாரில் அப்தியின் மகன் கீசும், எகலேலின் மகன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் மகன் யோவாகும், யோவாகின் மகன் ஏதேனும்,
И восташа левити, Маал сын Амасиев и Иоиль сын Захариев от сынов Каафовых, и от сынов Мерариных Кис сын Авдиев и Азариа сын Илаелилов, и от сынов Гедсоних Иоадад сын Земмань и Иоадам, сии сынове Иоахаини:
13 ௧௩ எலிசாபான் வம்சத்தாரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் வம்சத்தாரில் சகரியாவும், மத்தனியாவும்,
от сынов Елисафаних Самарий и Иеиил, и от сынов Асафовых Захариа и Матфаниа,
14 ௧௪ ஏமானின் வம்சத்தாரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் வம்சத்தாரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர்கள் எழும்பி,
и от сынов Еманих Иеиил и Семей, от сынов же Идифумлих Самафиа и Озиил:
15 ௧௫ தங்கள் சகோதரர்களைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்செய்துகொண்டு, யெகோவாவுடைய வசனங்களுக்கு ஏற்ற ராஜாவினுடைய கற்பனையின்படியே யெகோவாவுடைய ஆலயத்தை சுத்திகரிக்க வந்தார்கள்.
собраша же братию свою и освятишася по заповеди цареве повелением Господним, да очистят дом Божий:
16 ௧௬ ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்தை சுத்திகரிப்பதற்காக உள்ளே பிரவேசித்து, யெகோவாவுடைய ஆலயத்தில் கண்ட அனைத்து அசுத்தத்தையும் வெளியே யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டு வந்தார்கள்; அப்பொழுது லேவியர்கள் அதை எடுத்து வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டு போனார்கள்.
и внидоша священницы внутрь церкве Господни, да очистят ю, и извергоша всю нечистоту обретенную в дому Господни и во дворе дому Господня: и вземше левити, изнесоша к потоку Кедрску вон.
17 ௧௭ முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம் செய்யத்தொடங்கி, எட்டாம் தேதியிலே யெகோவாவுடைய மண்டபத்திலே பிரவேசித்து, யெகோவாவுடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்செய்து, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.
И начаша в первый день новомесячия перваго месяца очищати, и в день осмый того месяца внидоша во храм Господень, и очистиша церковь Господню во осми днех, и в день шестыйнадесять месяца перваго совершиша.
18 ௧௮ அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவிடம் போய்: நாங்கள் யெகோவாவின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதனுடைய அனைத்து தட்டுமுட்டுகளையும், சமுகத்து அப்பங்களின் மேஜையையும், அதின் அனைத்து தட்டுமுட்டுகளையும் தூய்மைப்படுத்தி,
И внидоша внутрь ко Езекии царю и рекоша: очистихом вся, яже в дому Господни, олтарь всесожжения и сосуды его, и трапезу предложения со всеми сосуды ея,
19 ௧௯ ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தால் எறிந்துபோட்ட அனைத்து தட்டுமுட்டுகளையும் ஒழுங்குபடுத்திப் பரிசுத்தம்செய்தோம்; இதோ, அவைகள் யெகோவாவின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.
и вся сосуды, яже оскверни царь Ахаз в царство свое во отступлении своем, уготовахом и очистихом, и се, суть пред олтарем Господним.
20 ௨0 அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலையிலேயே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, யெகோவாவின் ஆலயத்திற்குப் போனான்.
И воста рано Езекиа царь, и собра началники града, и взыде в дом Господень,
21 ௨௧ அப்பொழுது அரசாட்சிக்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் சந்ததியான மகன்களுக்குச் சொன்னான்.
и вознесе телцев седмь и овнов седмь, агнцев седмь и козлов от коз седмь за грех, за царство и за святилище и за Израиля, и рече сыном Аароним священником, да взыдут на олтарь Господень жрети телцев.
22 ௨௨ அப்படியே ஆசாரியர்கள் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்து பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்.
И заклаша телцев, и взяша кровь священницы и излияша на олтарь: и заклаша овнов и кровь на олтарь возлияша: и заклаша агнцев и облияша кровию олтарь:
23 ௨௩ பிறகு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
и приведоша козлов, иже за грех, пред царя и церковь, и возложиша руки своя на них,
24 ௨௪ இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர்கள் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பரிகாரம் செய்தார்கள்.
и пожроша их священницы, и покропиша кровию их пред олтарем, и помолишася о всем Израили: зане рече царь, о всем Израили всесожжение и яже о гресе.
25 ௨௫ அவன், தாவீதும், ராஜாவின் தரிசனம் காண்கிறவனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியர்களைக் யெகோவாவுடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படி செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது.
Постави же левиты в дому Господни с кимвалы и псалтирми и гусльми, по заповеди Давида царя и Гада провидца царю и Нафана пророка, яко по заповеди Господней повеление (бысть) рукою пророков Его.
26 ௨௬ அப்படியே லேவியர்கள் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர்கள் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.
Сташа же левити со органы Давидовы и священницы с трубами.
27 ௨௭ அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதை செலுத்த ஆரம்பித்த நேரத்தில் யெகோவாவை துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.
И повеле Езекиа, да вознесут всесожжение на олтарь: и егда начаша возносити всесожжение, начаша хвалы пети Господеви и трубити при органех Давида царя Израилева.
28 ௨௮ பாடலைப் பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கும்போது, சர்வாங்க தகனபலியைச் செலுத்தி முடியும்வரை சபையார் எல்லோரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
И вся церковь покланяшеся, и певцы пояху, и трубы трубяху, дондеже совершися всесожжение.
29 ௨௯ பலியிட்டு முடிந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
Егда же скончаша приношение, преклонися царь и вси иже бяху с ним и поклонишася Господеви.
30 ௩0 பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியர்களை நோக்கி: நீங்கள் தாவீதும் தரிசனம் காண்கிறவனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளால் யெகோவாவை துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடு துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
Повеле же Езекиа царь и князи левитом, да восхвалят Господа словесы Давидовыми и Асафа пророка: иже восхвалиша в веселии, и падоша, и поклонишася Господеви.
31 ௩௧ அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்செய்தீர்கள்; ஆகையால் அருகில் வந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்கு தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையாரில் விருப்பமுள்ளவர்கள் சர்வாங்க தகனபலிகளையும் மற்றவர்கள் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவந்தார்கள்.
И отвеща Езекиа и рече: ныне исполнисте руки вашя Господу, приведите и принесите жертвы хваления в дом Господень. И принесе (все) собрание жертвы и хвалы в дом Господень, и всяк усердный сердцем всесожжения.
32 ௩௨ சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் யெகோவாவுக்கு சர்வாங்க தகனமாயின.
И бысть число всесожжения, еже принесе собрание, телцев седмьдесят, овнов сто, агнцев двести, вся сия во всесожжение Господеви:
33 ௩௩ அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
освященных же телцев шестьсот, овец три тысящы.
34 ௩௪ ஆனாலும் ஆசாரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவர்களால் அந்த சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாமலிருந்தது; அதனால் அந்த வேலை முடியும்வரைக்கும், மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தம்செய்யும்வரைக்கும், அவர்களுடைய சகோதரர்களாகிய லேவியர்கள் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ள லேவியர்கள் ஆசாரியர்களைவிட மன உற்சாகமுள்ளவர்களாக இருந்தார்கள்.
Но священницы не мнози бяху и не можаху одирати кож всесожжения, и помогоша им братия их левити, дондеже исполнися дело и дондеже освятишася жерцы, левити бо усерднее освятишася, нежели священницы:
35 ௩௫ சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்கதகனங்களுக்குரிய பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இந்தவிதமாக யெகோவாவுடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம் செய்யப்பட்டது.
всесожжения же много в туках совершения спасения, и возлияний всесожжения: и исправися дело в дому Господни.
36 ௩௬ தேவன் மக்களை ஆயத்தப்படுத்தியதைக்குறித்து எசேக்கியாவும் மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்; இந்தக் காரியத்தை செய்வதற்கான யோசனை உடனடியாக உண்டானது.
Возвеселися же Езекиа и вси людие, яко уготова Бог людем, понеже внезапу бысть слово.