< 2 நாளாகமம் 22 >
1 ௧ எருசலேமின் குடிமக்கள், அவனுடைய இளையமகனாகிய அகசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடு கூடவந்து முகாமிட்ட படையிலிருந்தவர்கள், மூத்தமகன்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள்; இந்தவிதமாக அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் ஆட்சிசெய்தான்.
Поставиша же царем обитающии во Иерусалиме Охозию сына его меншаго вместо его: всех бо старших избиша нашедшии на них разбойницы Арави и Алимазоняне, и воцарися Охозиа сын Иорамов царь Иудин:
2 ௨ அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருடம் எருசலேமில் ஆட்சிசெய்தான்; ஒம்ரியின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்.
двадесяти дву лет сый Охозиа царствовати нача, и едино лето царствова во Иерусалиме. И имя матери его Гофолиа дщи Амвриина.
3 ௩ அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாக நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாக இருந்தாள்.
И сей ходил есть по пути дому Ахаавля, мати бо его бе советница, да грешит:
4 ௪ அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவனுடைய தகப்பன் இறந்தபிறகு, அவர்கள் அவனுடைய அழிவிற்கு ஆலோசனைக்காரர்களாக இருந்தார்கள்.
и сотвори лукавое пред Господем якоже дом Ахаавов, сии бо быша ему советницы по смерти отца его, в погубление ему,
5 ௫ அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்பட்டு, அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் மகன்களோடு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக போர்செய்யப்போனான்; அங்கே சீரியர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
и в советех их хождаше: и пойде со Иорамом сыном Ахаава царя Израилева на брань противу Азаила царя Сирска в Рамоф Галаадский. И поразиша стрелцы Иорама.
6 ௬ அப்பொழுது, தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கப் போனான்.
И возвратися Иорам изцелитися во Иезраель от ран, имиже раниша его Сиряне в Рамофе, внегда братися ему со Азаилем царем Сирским. Охозиа же сын Иорамль царь Иудин сниде посетити Иорама сына Ахаавля во Иезраель, разболеся бо.
7 ௭ அகசியா யோராமிடத்திற்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக மாறினது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, யெகோவா ஆகாபின் குடும்பத்தாரை அழிக்க அபிஷேகம்செய்யப்பட்ட நிம்சியின் மகனாகிய யெகூவை நோக்கி வெளியே போனான்.
И от Бога бысть превращение Охозии, да приидет ко Иораму: и внегда приити ему, изыде с ним Иорам противу Ииуа сына Намессиина, егоже помаза Господь на дом Ахаавль.
8 ௮ யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது, அவன் அகசியாவுக்கு சேவை செய்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரர்களின் மகன்களையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.
И бысть егда отмсти Ииуй дому Ахаавлю, и обрете началники Иудины и братию Охозиину, служащих Охозии, и уби их: и уби Ииуй Иорама, и убежа Охозиа.
9 ௯ பின்பு, அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளிந்துகொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் யெகோவாவை தேடின யோசபாத்தின் மகன் என்று சொல்லி, அவனை அடக்கம்செய்தார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குத் திறமையுள்ள ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போனது.
И рече Ииуй, еже взыскати Охозию: и яша его врачующася в Самарии и приведоша его ко Ииуеви, и уби его, и погребоша его: реша бо, яко сын Иосафатов есть, иже взыска Господа всем сердцем своим. И не бысть в дому Охозиине восприяти силу о царстве.
10 ௧0 அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சத்தார் அனைவரையும் கொன்றுபோட்டாள்.
И Гофолиа мати Охозиина виде, яко умре сын ея, и воста и погуби все семя царское в дому Иудине.
11 ௧௧ ராஜாவின் மகளாகிய யோசேபியாத், கொன்று போடப்படுகிற ராஜகுமாரர்களுக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசை ஒருவருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு, அவனையும் அவன் வேலைக்காரியையும் படுக்கையறையில் வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாமலிருக்க, ராஜாவாகிய யோராமின் மகளும் ஆசாரியனாகிய யோய்தாவின் மனைவியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள்; அவள் அகசியாவின் சகோதரியாக இருந்தாள்.
И взя Иосавееф дщи царева Иоаса сына Охозиина, и украде его от среды сынов царевых, егда убиваху их, и даде его и кормилицу его в храмину постельнюю, и скры его Иосавееф дщерь царя Иорама, сестра Охозиина, жена Иодаа архиереа, и скры его от лица Гофолиина, и не уби его.
12 ௧௨ இவர்களோடு அவன் ஆறுவருடங்களாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ஆட்சிசெய்தாள்.
И бысть с ними в дому Божии сокрыт шесть лет, и царствова Гофолиа на земли.