< 2 நாளாகமம் 15 >
1 ௧ அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் மகனாகிய அசரியாவின்மேல் இறங்கினதால்,
Азариа же сын Ададов, бысть на нем Дух Божий:
2 ௨ அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனிதரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடு இருந்தால், அவர் உங்களோடு இருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை நீங்கள் விட்டுவிட்டால், அவர் உங்களை விட்டுவிடுவார்.
и изыде во сретение Асе и всему Иуде и Вениамину и рече ему: услышите мя, Аса и весь Иуда и Вениамин: Господь с вами, яко бысте с Ним: и аще взыщете Его, обрящется вам, аще же оставите Его, оставит вас:
3 ௩ இஸ்ரவேலிலே அநேக நாட்களாக உண்மையான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.
мнози дние (будут) во Израили без Бога истиннаго и без священника учащаго и без закона:
4 ௪ தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
егда же обратятся в печали ко Господу Богу Израилеву и взыщут Его, и обрящется им:
5 ௫ அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிமக்கள் எல்லோருக்குள்ளும் பெரும் குழப்பம் உண்டாயிருந்து,
и во время оно не будет мир исходящему и входящему, яко ужас Господень на всех обитающих на земли
6 ௬ தேசம் தேசத்தையும், பட்டணம் பட்டணத்தையும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித துன்பத்தினாலும் கலங்கச்செய்தார்.
и ополчится язык на язык и град противу града, яко Господь смутит их во всяцей печали:
7 ௭ நீங்களோ உங்கள் கைகளைத் தளரவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் செயல்களுக்குப் பலன் உண்டு என்றான்.
и вы укрепитеся, и да не ослабеют руки вашя, есть бо мзда делу вашему.
8 ௮ ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் தைரியம் கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, யெகோவாவுடைய மண்டபத்தின் முன்னிருந்த யெகோவாவுடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,
И егда услыша Аса словеса сия и пророчество Азарии пророка, укрепися и отя вся идолы от всея земли Иудины и Вениамини и от градов, ихже содержаше Иеровоам в горе Ефремли, и освяти олтарь Господень, иже бе пред храмом Господним:
9 ௯ அவன் யூதா பென்யமீன் மக்களையும், அவர்களோடுகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலுமிருந்து வந்து அவர்களோடு வசித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான மக்கள் அவனுடன் சேர்ந்தார்கள்.
собра же (всего) Иуду и Вениамина и пришелцев обитающих с ним от Ефрема и от Манассии и от Симеона, мнози бо к нему прибегоша от Израиля, егда увидеша, яко Господь Бог его с ним.
10 ௧0 ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருடம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,
И собрашася во Иерусалим в месяц третий, в лето пятоенадесять царства Асы,
11 ௧௧ தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் யெகோவாவுக்கு பலியிட்டு,
и пожроша Господу в день той от корыстей, ихже приведоша, волов седмь сот и овец седмь тысящ,
12 ௧௨ தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;
и поидоша в завете, еже искати Господа Бога отец своих всем сердцем и всею душею своею:
13 ௧௩ சிறியோர் பெரியோர் ஆண் பெண் எல்லோரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை செய்து,
и (рече): всяк, иже аще не взыщет Господа Бога Израилева, да умрет от юнаго даже до старейшаго, от мужа даже до жены.
14 ௧௪ மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் யெகோவாவுக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.
И кляшася Господу гласом великим в восклицании и в трубах и в рожаных.
15 ௧௫ இந்த ஆணைக்காக யூதா மக்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; யெகோவா அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரிடமிருந்து போர் எதுவும் இல்லாமல் அவர்களை இளைப்பாறச்செய்தார்.
И возрадовася весь Иуда о клятве, яко от всея души кляшася, и всею волею взыскаша Его, и обретеся им, и даде им Господь покой окрест.
16 ௧௬ தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டாக்கிய ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாக இராமல் ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் முற்றிலும் அழித்து, கீதரோன் ஆற்றினருகில் சுட்டெரித்துப்போட்டான்.
И Мааху матерь свою отлучи, да не служит Астарту, и сокруши идола и сожже в потоце Кедрстем.
17 ௧௭ மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது.
Токмо высоких не отстави, еще бо бяху во Израили, но сердце Асы бе совершенно во всех днех его:
18 ௧௮ தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்செய்ய பொருத்தனை செய்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
и внесе святая Давида отца своего и святая своя в дом Божий, сребро и злато и сосуды.
19 ௧௯ ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருடம்வரை போர் இல்லாதிருந்தது.
И брань не бысть ему даже до тридесять пятаго лета царства Асина.