< 2 நாளாகமம் 14 >

1 அபியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருடங்கள்வரை அமைதலாயிருந்தது.
И успе Авиа со отцы своими, и погребоша его во граде Давидове. И воцарися Аса сын его вместо его во дни же Асы почи земля Иудина лет десять.
2 ஆசா தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.
И сотвори Аса благое и правое пред Господем Богом своим:
3 அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,
и отверже олтари чуждых и высокая, и сокруши идолы и посече дубравы:
4 தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்றுக்கொடுத்து,
и повеле Иуде, да взыщет Господа Бога отец своих и да сотворит закон Его и заповеди:
5 யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்ஜியம் அமைதலாயிருந்தது.
и изверже из всех градов Иудиных олтари и идолы, и царствова в мире.
6 யெகோவா அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதால், அந்த வருடங்களில் அவனுக்கு விரோதமான போர் இல்லாமலிருந்தது; தேசம் அமைதலாயிருந்ததால் யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.
И созда грады крепки в земли Иудине, зане в покои бысть земля, и не бе ему брани в лета сия, мир во Господь даде ему.
7 அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமைதலாயிருக்கும்போது, நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டாக்கி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய யெகோவாவை தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
Рече же Иуде: созиждем грады сия, и сотворим стены и столпы, и врата и вереи, дондеже землею господствуем: зане якоже взыскахом Господа Бога нашего, взыска и нас, и воздаде нам мир окрест, и благопоспешствова нам.
8 யூதாவிலே கேடகத்தையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேருமான படை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லோரும் பலசாலிகள்.
И бысть сила Асе оруженосцев носящих щиты и копия в земли Иудине триста тысящ, в земли же Вениамини щитников и стрелцев двести осмьдесят тысящ: вси сии воини сильнии.
9 அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர் சேர்ந்த படையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேஷாவரை வந்தான்.
Изыде же противу их Зарай Ефиоплянин с силою в тысящы тысящей, и колесниц триста, и прииде даже до Мариса.
10 ௧0 அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேஷாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.
И изыде Аса противу ему и устрои брань в дебри на север Мариса.
11 ௧௧ ஆசா தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
И возопи Аса ко Господу Богу своему и рече: Господи, не изнеможет у Тебе спасати во многих и в малых, укрепи нас, Господи Боже наш, яко на Тя уповахом и о имени Твоем изыдохом на множество многое сие: Господи Боже наш, Ты еси Бог, да не превозможет противу Тебе человек.
12 ௧௨ அப்பொழுது யெகோவா அந்த எத்தியோப்பியர்களை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்ததால் எத்தியோப்பியர்கள் ஓடிப்போனார்கள்.
И порази Господь Ефиопы пред Асою и Иудою и бежаша Ефиопи:
13 ௧௩ அவர்களை ஆசாவும் அவனோடிருந்த மக்களும் கேரார்வரை துரத்தினார்கள்; எத்தியோப்பியர்கள் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முற்றிலும் அழிக்கப்பட்டார்கள்; யெகோவாவுக்கும் அவருடைய படைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளையடித்து,
и погна их Аса и людие его даже до Гедора: и падоша Ефиопи, даже не быти в них останку, яко сотрени быша пред Господем и пред силою Его, и плениша корысти многи:
14 ௧௪ கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் தோற்கடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டானது; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாக அகப்பட்டது.
и изсекоша веси их окрест Гедора, велик бо страх Господень объят их, и плениша вся грады их, зане многи корысти быша в них:
15 ௧௫ மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
и кущы скотския и амазонов изсекоша, и взяша скота множество и велблюды, и возвратишася во Иерусалим.

< 2 நாளாகமம் 14 >