< 1 தீமோத்தேயு 1 >
1 ௧ நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல்,
អស្មាកំ ត្រាណកត៌្តុរីឝ្វរស្យាស្មាកំ ប្រត្យាឝាភូមេះ ប្រភោ រ្យីឝុខ្រីឞ្ដស្យ ចាជ្ញានុសារតោ យីឝុខ្រីឞ្ដស្យ ប្រេរិតះ បៅលះ ស្វកីយំ សត្យំ ធម៌្មបុត្រំ តីមថិយំ ប្រតិ បត្រំ លិខតិ។
2 ௨ விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
អស្មាកំ តាត ឦឝ្វរោៜស្មាកំ ប្រភុ រ្យីឝុខ្រីឞ្ដឝ្ច ត្វយិ អនុគ្រហំ ទយាំ ឝាន្តិញ្ច កុយ៌្យាស្តាំ។
3 ௩ மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி,
មាកិទនិយាទេឝេ មម គមនកាលេ ត្វម៑ ឥផិឞនគរេ តិឞ្ឋន៑ ឥតរឝិក្ឞា ន គ្រហីតវ្យា, អនន្តេឞូបាខ្យានេឞុ វំឝាវលិឞុ ច យុឞ្មាភិ រ្មនោ ន និវេឝិតវ្យម្
4 ௪ நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய்.
ឥតិ កាំឝ្ចិត៑ លោកាន៑ យទ៑ ឧបទិឝេរេតត៑ មយាទិឞ្ដោៜភវះ, យតះ សវ៌្វៃរេតៃ រ្វិឝ្វាសយុក្តេឝ្វរីយនិឞ្ឋា ន ជាយតេ កិន្តុ វិវាទោ ជាយតេ។
5 ௫ இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
ឧបទេឝស្យ ត្វភិប្រេតំ ផលំ និម៌្មលាន្តះករណេន សត្សំវេទេន និឞ្កបដវិឝ្វាសេន ច យុក្តំ ប្រេម។
6 ௬ இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள்.
កេចិត៑ ជនាឝ្ច សវ៌្វាណ្យេតានិ វិហាយ និរត៌្ហកកថានាម៑ អនុគមនេន វិបថគាមិនោៜភវន៑,
7 ௭ தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.
យទ៑ ភាឞន្តេ យច្ច និឝ្ចិន្វន្តិ តន្ន ពុធ្យមានា វ្យវស្ថោបទេឞ្ដារោ ភវិតុម៑ ឥច្ឆន្តិ។
8 ௮ ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம்.
សា វ្យវស្ថា យទិ យោគ្យរូបេណ គ្ឫហ្យតេ តហ៌្យុត្តមា ភវតីតិ វយំ ជានីមះ។
9 ௯ எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும் தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும்,
អបរំ សា វ្យវស្ថា ធាម៌្មិកស្យ វិរុទ្ធា ន ភវតិ កិន្ត្វធាម៌្មិកោ ៜវាធ្យោ ទុឞ្ដះ បាបិឞ្ឋោ ៜបវិត្រោ ៜឝុចិះ បិត្ឫហន្តា មាត្ឫហន្តា នរហន្តា
10 ௧0 வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும்,
វេឝ្យាគាមី បុំមៃថុនី មនុឞ្យវិក្រេតា មិថ្យាវាទី មិថ្យាឝបថការី ច សវ៌្វេឞាមេតេឞាំ វិរុទ្ធា,
11 ௧௧ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.
តថា សច្ចិទានន្ទេឝ្វរស្យ យោ វិភវយុក្តះ សុសំវាទោ មយិ សមប៌ិតស្តទនុយាយិហិតោបទេឝស្យ វិបរីតំ យត៑ កិញ្ចិទ៑ ភវតិ តទ្វិរុទ្ធា សា វ្យវស្ថេតិ តទ្គ្រាហិណា ជ្ញាតវ្យំ។
12 ௧௨ என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
មហ្យំ ឝក្តិទាតា យោៜស្មាកំ ប្រភុះ ខ្រីឞ្ដយីឝុស្តមហំ ធន្យំ វទាមិ។
13 ௧௩ கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன்.
យតះ បុរា និន្ទក ឧបទ្រាវី ហិំសកឝ្ច ភូត្វាប្យហំ តេន វិឝ្វាស្យោ ៜមន្យេ បរិចារកត្វេ ន្យយុជ្យេ ច។ តទ៑ អវិឝ្វាសាចរណម៑ អជ្ញានេន មយា ក្ឫតមិតិ ហេតោរហំ តេនានុកម្បិតោៜភវំ។
14 ௧௪ நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது.
អបរំ ខ្រីឞ្ដេ យីឝៅ វិឝ្វាសប្រេមភ្យាំ សហិតោៜស្មត្ប្រភោរនុគ្រហោ ៜតីវ ប្រចុរោៜភត៑។
15 ௧௫ பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான்.
បាបិនះ បរិត្រាតុំ ខ្រីឞ្ដោ យីឝុ រ្ជគតិ សមវតីណ៌ោៜភវត៑, ឯឞា កថា វិឝ្វាសនីយា សវ៌្វៃ គ្រហណីយា ច។
16 ௧௬ அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios )
តេឞាំ បាបិនាំ មធ្យេៜហំ ប្រថម អាសំ កិន្តុ យេ មានវា អនន្តជីវនប្រាប្ត្យត៌្ហំ តស្មិន៑ វិឝ្វសិឞ្យន្តិ តេឞាំ ទ្ឫឞ្ដាន្តេ មយិ ប្រថមេ យីឝុនា ខ្រីឞ្ដេន ស្វកីយា ក្ឫត្ស្នា ចិរសហិឞ្ណុតា យត៑ ប្រកាឝ្យតេ តទត៌្ហមេវាហម៑ អនុកម្បាំ ប្រាប្តវាន៑។ (aiōnios )
17 ௧௭ நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
អនាទិរក្ឞយោៜទ្ឫឝ្យោ រាជា យោៜទ្វិតីយះ សវ៌្វជ្ញ ឦឝ្វរស្តស្យ គៅរវំ មហិមា ចានន្តកាលំ យាវទ៑ ភូយាត៑។ អាមេន៑។ (aiōn )
18 ௧௮ என் குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன்னமே சொன்ன தீர்க்கதரிசனங்களின்படியே, நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்.
ហេ បុត្រ តីមថិយ ត្វយិ យានិ ភវិឞ្យទ្វាក្យានិ បុរា កថិតានិ តទនុសារាទ៑ អហម៑ ឯនមាទេឝំ ត្វយិ សមប៌យាមិ, តស្យាភិប្រាយោៜយំ យត្ត្វំ តៃ រ្វាក្យៃរុត្តមយុទ្ធំ ករោឞិ
19 ௧௯ இந்த நல்ல மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
វិឝ្វាសំ សត្សំវេទញ្ច ធារយសិ ច។ អនយោះ បរិត្យាគាត៑ កេឞាញ្ចិទ៑ វិឝ្វាសតរី ភគ្នាភវត៑។
20 ௨0 இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
ហុមិនាយសិកន្ទរៅ តេឞាំ យៅ ទ្វៅ ជនៅ, តៅ យទ៑ ធម៌្មនិន្ទាំ បុន រ្ន កត៌្តុំ ឝិក្ឞេតេ តទត៌្ហំ មយា ឝយតានស្យ ករេ សមប៌ិតៅ។