< 1 தீமோத்தேயு 4 >

1 ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
pavitra ātmā spaṣṭam idaṁ vākyaṁ vadati caramakāle katipayalokā vahnināṅkitatvāt
2 திருமணம் செய்யக்கூடாது என்றும்,
kaṭhoramanasāṁ kāpaṭyād anṛtavādināṁ vivāhaniṣedhakānāṁ bhakṣyaviśeṣaniṣedhakānāñca
3 விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.
bhūtasvarūpāṇāṁ śikṣāyāṁ bhramakātmanāṁ vākyeṣu ca manāṁsi niveśya dharmmād bhraṁśiṣyante| tāni tu bhakṣyāṇi viśvāsināṁ svīkṛtasatyadharmmāṇāñca dhanyavādasahitāya bhogāyeśvareṇa sasṛjire|
4 தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை.
yata īśvareṇa yadyat sṛṣṭaṁ tat sarvvam uttamaṁ yadi ca dhanyavādena bhujyate tarhi tasya kimapi nāgrāhyaṁ bhavati,
5 அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
yata īśvarasya vākyena prārthanayā ca tat pavitrībhavati|
6 இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய்.
etāni vākyāni yadi tvaṁ bhrātṛn jñāpayestarhi yīśukhrīṣṭasyottamḥ paricārako bhaviṣyasi yo viśvāso hitopadeśaśca tvayā gṛhītastadīyavākyairāpyāyiṣyase ca|
7 சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு.
yānyupākhyānāni durbhāvāni vṛddhayoṣitāmeva yogyāni ca tāni tvayā visṛjyantām īśvarabhaktaye yatnaḥ kriyatāñca|
8 சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
yataḥ śārīriko yatnaḥ svalpaphalado bhavati kintvīśvarabhaktiraihikapāratrikajīvanayoḥ pratijñāyuktā satī sarvvatra phaladā bhavati|
9 இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.
vākyametad viśvasanīyaṁ sarvvai rgrahaṇīyañca vayañca tadarthameva śrāmyāmo nindāṁ bhuṁjmahe ca|
10 ௧0 இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
yato hetoḥ sarvvamānavānāṁ viśeṣato viśvāsināṁ trātā yo'mara īśvarastasmin vayaṁ viśvasāmaḥ|
11 ௧௧ இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
tvam etāni vākyāni pracāraya samupadiśa ca|
12 ௧௨ உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
alpavayaṣkatvāt kenāpyavajñeyo na bhava kintvālāpenācaraṇena premnā sadātmatvena viśvāsena śucitvena ca viśvāsinām ādarśo bhava|
13 ௧௩ நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு.
yāvannāham āgamiṣyāmi tāvat tva pāṭhe cetayane upadeśe ca mano nidhatsva|
14 ௧௪ சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.
prācīnagaṇahastārpaṇasahitena bhaviṣyadvākyena yaddānaṁ tubhyaṁ viśrāṇitaṁ tavāntaḥsthe tasmin dāne śithilamanā mā bhava|
15 ௧௫ உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு.
eteṣu mano niveśaya, eteṣu varttasva, itthañca sarvvaviṣaye tava guṇavṛddhiḥ prakāśatāṁ|
16 ௧௬ உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
svasmin upadeśe ca sāvadhāno bhūtvāvatiṣṭhasva tat kṛtvā tvayātmaparitrāṇaṁ śrotṛṇāñca paritrāṇaṁ sādhayiṣyate|

< 1 தீமோத்தேயு 4 >