< 1 தீமோத்தேயு 3 >
1 ௧ கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
యది కశ్చిద్ అధ్యక్షపదమ్ ఆకాఙ్క్షతే తర్హి స ఉత్తమం కర్మ్మ లిప్సత ఇతి సత్యం|
2 ௨ எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.
అతోఽధ్యక్షేణానిన్దితేనైకస్యా యోషితో భర్త్రా పరిమితభోగేన సంయతమనసా సభ్యేనాతిథిసేవకేన శిక్షణే నిపుణేన
3 ௩ அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து,
న మద్యపేన న ప్రహారకేణ కిన్తు మృదుభావేన నిర్వ్వివాదేన నిర్లోభేన
4 ௪ தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும்.
స్వపరివారాణామ్ ఉత్తమశాసకేన పూర్ణవినీతత్వాద్ వశ్యానాం సన్తానానాం నియన్త్రా చ భవితవ్యం|
5 ௫ ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
యత ఆత్మపరివారాన్ శాసితుం యో న శక్నోతి తేనేశ్వరస్య సమితేస్తత్త్వావధారణం కథం కారిష్యతే?
6 ௬ அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புதிய சீடனாக இருக்கக்கூடாது.
అపరం స గర్వ్వితో భూత్వా యత్ శయతాన ఇవ దణ్డయోగ్యో న భవేత్ తదర్థం తేన నవశిష్యేణ న భవితవ్యం|
7 ௭ அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.
యచ్చ నిన్దాయాం శయతానస్య జాలే చ న పతేత్ తదర్థం తేన బహిఃస్థలోకానామపి మధ్యే సుఖ్యాతియుక్తేన భవితవ్యం|
8 ௮ அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும்,
తద్వత్ పరిచారకైరపి వినీతై ర్ద్వివిధవాక్యరహితై ర్బహుమద్యపానే ఽనాసక్తై ర్నిర్లోభైశ్చ భవితవ్యం,
9 ௯ விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
నిర్మ్మలసంవేదేన చ విశ్వాసస్య నిగూఢవాక్యం ధాతివ్యఞ్చ|
10 ௧0 மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்றால் உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம்.
అగ్రే తేషాం పరీక్షా క్రియతాం తతః పరమ్ అనిన్దితా భూత్వా తే పరిచర్య్యాం కుర్వ్వన్తు|
11 ௧௧ அப்படியே பெண்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.
అపరం యోషిద్భిరపి వినీతాభిరనపవాదికాభిః సతర్కాభిః సర్వ్వత్ర విశ్వాస్యాభిశ్చ భవితవ్యం|
12 ௧௨ மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும்.
పరిచారకా ఏకైకయోషితో భర్త్తారో భవేయుః, నిజసన్తానానాం పరిజనానాఞ్చ సుశాసనం కుర్య్యుశ్చ|
13 ௧௩ இப்படி உதவிக்காரர்களுடைய ஊழியத்தை நன்றாகச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
యతః సా పరిచర్య్యా యై ర్భద్రరూపేణ సాధ్యతే తే శ్రేష్ఠపదం ప్రాప్నువన్తి ఖ్రీష్టే యీశౌ విశ్వాసేన మహోత్సుకా భవన్తి చ|
14 ௧௪ நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன்.
త్వాం ప్రత్యేతత్పత్రలేఖనసమయే శీఘ్రం త్వత్సమీపగమనస్య ప్రత్యాశా మమ విద్యతే|
15 ௧௫ தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது.
యది వా విలమ్బేయ తర్హీశ్వరస్య గృహే ఽర్థతః సత్యధర్మ్మస్య స్తమ్భభిత్తిమూలస్వరూపాయామ్ అమరేశ్వరస్య సమితౌ త్వయా కీదృశ ఆచారః కర్త్తవ్యస్తత్ జ్ఞాతుం శక్ష్యతే|
16 ௧௬ அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
అపరం యస్య మహత్త్వం సర్వ్వస్వీకృతమ్ ఈశ్వరభక్తేస్తత్ నిగూఢవాక్యమిదమ్ ఈశ్వరో మానవదేహే ప్రకాశిత ఆత్మనా సపుణ్యీకృతో దూతైః సన్దృష్టః సర్వ్వజాతీయానాం నికటే ఘోషితో జగతో విశ్వాసపాత్రీభూతస్తేజఃప్రాప్తయే స్వర్గం నీతశ్చేతి|