< 1 தெசலோனிக்கேயர் 4 >
1 ௧ அன்றியும், சகோதரர்களே, நீங்கள் இந்தவிதமாக நடக்கவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
As to the rest, then, brothers, we request, and call on you in the Lord Jesus, as you received from us how it is necessary for you to walk and to please God, that you may abound the more,
2 ௨ கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே.
for you have known what commands we gave you through the Lord Jesus;
3 ௩ நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருந்து,
for this is the will of God—your sanctification: that you abstain from the whoredom,
4 ௪ தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
that each of you know to possess his own vessel in sanctification and honor,
5 ௫ உங்களில் அவனவன் தன்தன் சரீரத்தைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
not in the affection of desire, as also the nations that were not knowing God,
6 ௬ இந்தக் காரியத்தில் ஒருவனும் தன் சகோதரனை ஏமாற்றாமலும் கெடுதல் செய்யாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்டக் காரியங்கள் எல்லாவற்றையும்குறித்துக் கர்த்தர் நீதியை நிலைநாட்டுகிறவராக இருக்கிறார்.
that no one goes beyond and defrauds his brother in the matter, because the LORD [is] an avenger of all these, as we also spoke to you before and testified,
7 ௭ தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
for God did not call us to uncleanness, but in sanctification.
8 ௮ ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான்.
He, therefore, who is despising, does not despise man, but God, who also gave His Holy Spirit to us.
9 ௯ சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே.
And concerning the brotherly love, you have no need of [my] writing to you, for you yourselves are God-taught to love one another,
10 ௧0 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்;
for you do it also to all the brothers who [are] in all Macedonia; and we call on you, brothers, to abound still more,
11 ௧௧ அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
and to study to be quiet, and to do your own business, and to work with your own hands, as we commanded you,
12 ௧௨ நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும், உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
that you may walk properly to those outside, and may have lack of nothing.
13 ௧௩ அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை.
And I do not wish you to be ignorant, brothers, concerning those who have fallen asleep, that you may not sorrow, as also the rest who have no hope,
14 ௧௪ இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார்.
for if we believe that Jesus died and rose again, so also God will bring with Him those asleep through Jesus,
15 ௧௫ கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
for we say this to you in the word of the LORD, that we who are living—who remain over to the coming of the LORD—may not precede those asleep,
16 ௧௬ ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
because the LORD Himself, with a shout, with the voice of a chief-messenger, and with the trumpet of God, will come down from Heaven, and the dead in Christ will rise first;
17 ௧௭ பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.
then we who are living, who are remaining over, will be snatched up together with them in [the] clouds to meet the LORD in [the] air, and so we will always be with the LORD;
18 ௧௮ ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
so, then, comfort one another with these words.