< 1 தெசலோனிக்கேயர் 3 >

1 ஆகவே, நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம்.
Portanto, quando não podíamos mais suportar, achamos bom ser deixado para trás apenas em Atenas,
2 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.
e enviamos Timothy, nosso irmão e servo de Deus na Boa Nova de Cristo, para estabelecê-lo e consolá-lo a respeito de sua fé,
3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
que ninguém se sentiria comovido por estas aflições. Pois você sabe que somos nomeados para esta tarefa.
4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே சம்பவித்ததென்றும் அறிந்திருக்கிறீர்கள்.
Pois com certeza, quando estivemos com você, lhe dissemos de antemão que sofreríamos aflições, mesmo que acontecesse, e você sabe disso.
5 ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், எங்களுடைய வேலை வீணாகப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினதுண்டோவென்று, உங்களுடைய விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன்.
Por esta razão eu também, quando não suportava mais, mandei que conhecesse sua fé, por medo de que de alguma forma o tentador o tivesse tentado, e que nosso trabalho tivesse sido em vão.
6 இப்பொழுது தீமோத்தேயு உங்களிடமிருந்து எங்களிடம் வந்து, உங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும்குறித்து, நீங்கள் எப்பொழுதும் எங்களை அன்பாக நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறீர்கள் என்பதைக்குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே,
Mas Timothy acaba de chegar de você, e nos trouxe boas notícias de sua fé e amor, e que você tem boas lembranças de nós sempre, desejando nos ver, assim como nós também desejamos vê-lo.
7 சகோதரர்களே, எங்களுக்குச் சம்பவித்த எல்லா நெருக்கத்திலும், உபத்திரவத்திலும் உங்களுடைய விசுவாசத்தினாலே உங்களால் ஆறுதல் அடைந்தோம்.
Por esta causa, irmãos, fomos consolados por vocês em toda nossa angústia e aflição através de sua fé.
8 நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம்.
Por enquanto, vivemos, se vocês permanecerem firmes no Senhor.
9 மேலும், நம்முடைய தேவனுக்குமுன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாக நன்றி செலுத்துவோம்?
Por que ação de graças podemos dar novamente a Deus por vocês, por toda a alegria com que nos regozijamos por vocês diante de nosso Deus,
10 ௧0 உங்களுடைய முகத்தைக் கண்டு, உங்களுடைய விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்படிக்கு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.
rezando noite e dia excessivamente para que possamos ver seu rosto e aperfeiçoar o que falta em sua fé?
11 ௧௧ நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.
Agora que nosso Deus e o próprio Pai, e nosso Senhor Jesus Cristo, dirijam nosso caminho até vós.
12 ௧௨ நாங்கள் உங்களிடம் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக, நீங்களும் ஒருவரிலொருவர் வைக்கும் அன்பிலும் மற்ற எல்லா மனிதர்களிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து,
Que o Senhor vos faça crescer e abundar em amor uns para com os outros e para com todos os homens, assim como nós também o fazemos para convosco,
13 ௧௩ இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக.
até o fim Ele pode estabelecer vossos corações em santidade diante de nosso Deus e Pai na vinda de nosso Senhor Jesus com todos os seus santos.

< 1 தெசலோனிக்கேயர் 3 >