< 1 சாமுவேல் 6 >

1 யெகோவாவுடைய பெட்டி பெலிஸ்தர்களின் தேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது.
Så var Herrans ark i sju månader uti de Philisteers land.
2 பின்பு பெலிஸ்தர்கள் ஆசாரியர்களையும் குறிசொல்கிறவர்களையும் அழைத்து: யெகோவாவுடைய பெட்டியை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாக அதனுடைய இடத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.
Och de Philisteer kallade sina Prester och spåmän, och sade: Hvad skole vi göra med Herrans ark? Säger oss före, hvarmed vi skole sända honom till sitt rum.
3 அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாக அனுப்பாமல், குற்றநிவாரணக் காணிக்கையை எப்படியாவது அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சுகமடைவதும் மட்டுமில்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த காரணம் என்ன என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.
De sade: Viljen I sända Israels Guds ark, så sänder honom icke allstinges blottan, utan betaler honom ett skuldoffer; så varden I helbregda, och eder skall varda kunnigt, hvarföre hans hand icke återvänder af eder.
4 அதற்கு அவர்கள்: குற்றநிவாரணக் காணிக்கையாக நாங்கள் அவருக்கு எதைச் செலுத்தவேண்டும் என்று கேட்டதற்கு, அவர்கள்: உங்கள் எல்லோருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதை உண்டானதினால், பெலிஸ்தர்களுடைய அதிபதிகளின் எண்ணிக்கைக்குச் சரியாக மூலவியாதியின் சாயலின்படி செய்த ஐந்து பொன் சிலைகளும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.
Men de sade: Hvilket är det skuldoffret, det vi honom gifva skole? De svarade: Fem gyldene ardsar, och fem gyldene möss, efter de fem Philisteers Förstars tal; förty det hafver varit allt enahanda plåga öfver eder alla, och öfver edra Förstar.
5 ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சிலைகளையும் நீங்கள் உண்டாக்கி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்களுடைய தேவர்கள்மேலும், உங்களுடைய தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.
Så må I nu göra liknelse efter edra ardsar, och efter edra möss, som edart land förderfvat hafva, så att I hedren Israels Gud; tilläfventyrs hans hand varder lättare öfver eder, och öfver edar gud, och öfver edart land.
6 எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தை ஏன் கடினப்படுத்துகிறீர்கள்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, மக்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?
Hvi förhärden I edor hjerta, såsom de Egyptier och Pharao förhärde sin hjerta? Skedde det icke så, att då han beviste sig på dem, läto de fara dem, att de gingo sin väg?
7 இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டி செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப் பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,
Så tager nu till, och görer en ny vagn; och tager två unga däggande kor, på hvilka intet ok kommet är, och spänner dem för vagnen, och låter deras kalfvar blifva qvara hemma efter dem.
8 பின்பு யெகோவாவுடைய பெட்டியை எடுத்து, அதை வண்டியின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணக் காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன் உருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
Och tager Herrans ark, och sätter honom på vagnen; och de gyldene klenodier, som I honom till skuldoffer gifven, lägger i ett skrin utmed hans sido, och sänder honom åstad, och låter gån.
9 அப்பொழுது பாருங்கள்; அது தன்னுடைய எல்லைக்குப் போகிறவழியாக பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாக நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
Och ser I till, går han upp den vägen åt sina gränsor emot BethSemes, så hafver han gjort oss allt detta stora onda; hvar ock icke, så måge vi veta, att hans hand icke hafver rört oss, utan det är oss eljest af en olycko påkommet.
10 ௧0 அந்த மனிதர்கள் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,
Folket gjorde ock så, och togo två unga däggande kor, och spände dem för en vagn, och behöllo deras kalfvar hemma;
11 ௧௧ யெகோவாவுடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டியின்மேல் வைத்தார்கள்.
Och satte Herrans ark på vagnen, och det skrinet med de gyldene möss, och med deras ardsars liknelse.
12 ௧௨ அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாகப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கத்திக்கொண்டே நடந்தது; பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் பெத்ஷிமேசின் எல்லைவரை அவைகளின் பின்னாகவே போனார்கள்.
Och korna gingo rättfram den vägen, som drog till BethSemes, på enom väg, och gingo och råmade, och veko hvarken på den högra sidona eller på den venstra; och de Philisteers Förstar gingo efter dem, allt intill BethSemes gränso.
13 ௧௩ பெத்ஷிமேசின் மனிதர்கள் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களினால் ஏறெடுத்துப்பார்க்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.
Men de BethSemiter gingo och skåro i hveteandene i dalenom, och de hofvo sin ögon upp, och fingo se arken, och vordo glade att de fingo se honom.
14 ௧௪ அந்த வண்டி பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல் இருந்தது; அப்பொழுது வண்டியின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.
Men vagnen kom uppå Josua den BethSemitens åker, och stadnade der. Och der var en stor sten; och de höggo sönder trät af vagnenom, och offrade de kor Herranom till bränneoffer.
15 ௧௫ லேவியர்கள் யெகோவாவுடைய பெட்டியையும், அதனோடு இருந்த பொன் உருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனிதர்கள், அன்றையதினம் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளையிட்டார்கள்.
Och Leviterna lyfte Herrans ark neder, och det skrinet, som der bredovid låg, der de gyldene klenodier uti voro, och satte på den stora stenen. Och det folket i BethSemes offrade på den dagen Herranom bränneoffer och annor offer.
16 ௧௬ பெலிஸ்தரின் ஐந்து ஆளுநர்களும் இவைகளைப் பார்த்து, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.
När nu de fem Philisteers Förstar hade detta sett, foro de tillbaka igen på samma dagen till Ekron.
17 ௧௭ பெலிஸ்தர்கள் குற்றநிவாரணத்திற்காக, யெகோவாவுக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சிலைகளாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.
Och detta äro de gyldene ardsar, som de Philisteer offrade Herranom till skuldoffer: Asdod en, Gasa en, Askelon en, Gath en, och Ekron en;
18 ௧௮ பொன்னால் செய்த சுண்டெலிகளோ, அரணான பட்டணங்கள் துவங்கி நாட்டிலுள்ள கிராமங்கள் வரை, யெகோவாவுடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்வரை, ஐந்து ஆளுநர்களுக்கும் அதிகாரத்தில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய எல்லா ஊர்களின் எண்ணிக்கைக்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்த நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானான யோசுவாவின் வயலில் இருக்கிறது.
Och gyldene möss efter talet af alla de Philisteers städer, under de fem Förstar, både murade städer och byar; och intill det stora sorgerummet, der de läto Herrans ark uppå, intill denna dag, på Josua den BethSemitens åker.
19 ௧௯ ஆனாலும் பெத்ஷிமேசின் மனிதர்கள் யெகோவாவுடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், யெகோவா மக்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது யெகோவா மக்களைப் பேரழிவாக அடித்ததினால், மக்கள் துக்கமாக இருந்தார்கள்.
Och somlige af de BethSemiter vordo slagne, derföre att de hade sett Herrans ark; och han slog af folket femtiotusend och sjutio män. Då jämrade sig folket, att Herren hade med så stor plågo slagit folket.
20 ௨0 இந்தப் பரிசுத்தமான தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கக்கூடியவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்திற்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனிதர்கள் சொல்லி,
Och det folket i BethSemes sade: Ho kan blifva ståndandes för Herranom, en sådana helig Gud? Och till hvem skall han fara ifrån oss?
21 ௨௧ கீரியாத்யாரீமின் குடியிருப்புகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர்கள் யெகோவாவுடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்திற்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.
Och de sände bådskap till de borgare af KiriathJearim, och läto säga dem: De Philisteer hafva fört igen Herrans ark; kommer hitneder, och hemter honom upp till eder.

< 1 சாமுவேல் 6 >