< 1 சாமுவேல் 6 >
1 ௧ யெகோவாவுடைய பெட்டி பெலிஸ்தர்களின் தேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது.
И беше ковчег Господњи у земљи филистејској седам месеци.
2 ௨ பின்பு பெலிஸ்தர்கள் ஆசாரியர்களையும் குறிசொல்கிறவர்களையும் அழைத்து: யெகோவாவுடைய பெட்டியை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாக அதனுடைய இடத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.
Тада дозваше Филистеји свештенике и враче, па им рекоше: Шта ћемо чинити с ковчегом Господњим? Научите нас како ћемо га послати натраг на његово место.
3 ௩ அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாக அனுப்பாமல், குற்றநிவாரணக் காணிக்கையை எப்படியாவது அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சுகமடைவதும் மட்டுமில்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த காரணம் என்ன என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.
А они рекоше: Ако ћете натраг послати ковчег Бога Израиљевог, не шаљите га празног, него уза њ подајте принос за грех; тада ћете оздравити и дознаћете зашто се рука Његова није одмакла од вас.
4 ௪ அதற்கு அவர்கள்: குற்றநிவாரணக் காணிக்கையாக நாங்கள் அவருக்கு எதைச் செலுத்தவேண்டும் என்று கேட்டதற்கு, அவர்கள்: உங்கள் எல்லோருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதை உண்டானதினால், பெலிஸ்தர்களுடைய அதிபதிகளின் எண்ணிக்கைக்குச் சரியாக மூலவியாதியின் சாயலின்படி செய்த ஐந்து பொன் சிலைகளும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.
А они рекоше: Какав ћемо му дати принос за грех? А они рекоше: Према броју кнежевина филистејских пет златних шуљева и пет златних мишева; јер је зло једнако на свима вама и на кнезовима вашим.
5 ௫ ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சிலைகளையும் நீங்கள் உண்டாக்கி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்களுடைய தேவர்கள்மேலும், உங்களுடைய தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.
Начините дакле слике од својих шуљева и слике од мишева који кваре земљу, и подајте славу Богу Израиљевом. Може бити да ће олакшати руку своју над вама и над боговима вашим и над земљом вашом.
6 ௬ எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தை ஏன் கடினப்படுத்துகிறீர்கள்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, மக்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?
И зашто бисте били упорног срца као што беху упорног срца Мисирци и Фараон? И пошто учини чудеса на њима, еда ли их тада не пустише, те отидоше?
7 ௭ இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டி செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப் பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,
Зато начините једна кола нова, и узмите две краве дојилице, на којима још није био јарам, па упрегните краве у кола, а телад њихову одведите од њих кући.
8 ௮ பின்பு யெகோவாவுடைய பெட்டியை எடுத்து, அதை வண்டியின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணக் காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன் உருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
Па узмите ковчег Господњи и метните га на кола; а закладе златне што ћете му дати за грех метните у ковчежић покрај њега, и пустите га нека иде.
9 ௯ அப்பொழுது பாருங்கள்; அது தன்னுடைய எல்லைக்குப் போகிறவழியாக பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாக நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
И гледајте: ако пође путем к међи својој у Вет-Семес, Он нам је учинио ово велико зло; ако ли не пође тако, онда ћемо знати да нас се није дохватила рука Његова, него нам се догодило случајно.
10 ௧0 அந்த மனிதர்கள் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,
И учинише тако они људи; и узевши две краве дојилице упрегоше их у кола, а телад њихову затворише код куће.
11 ௧௧ யெகோவாவுடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டியின்மேல் வைத்தார்கள்.
И метнуше ковчег Господњи на кола, и мали ковчежић с мишима златним и са сликама својих шуљева.
12 ௧௨ அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாகப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கத்திக்கொண்டே நடந்தது; பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் பெத்ஷிமேசின் எல்லைவரை அவைகளின் பின்னாகவே போனார்கள்.
И пођоше краве право путем у Вет-Семес, и једнако иђаху истим путем мучући и не сврћући ни на десно ни на лево; а кнезови филистејски иђаху за њима до међе вет-семешке.
13 ௧௩ பெத்ஷிமேசின் மனிதர்கள் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களினால் ஏறெடுத்துப்பார்க்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.
А Вет-Семешани жњаху пшеницу у долини, и подигавши очи своје видеше ковчег, и обрадоваше се видевши га.
14 ௧௪ அந்த வண்டி பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல் இருந்தது; அப்பொழுது வண்டியின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.
И дођоше кола на њиву Исуса Вет-Семешанина, и стадоше онде. А беше онде велик камен; и исцепаше дрва од кола, и принесоше оне краве на жртву паљеницу Господу.
15 ௧௫ லேவியர்கள் யெகோவாவுடைய பெட்டியையும், அதனோடு இருந்த பொன் உருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனிதர்கள், அன்றையதினம் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளையிட்டார்கள்.
А Левити снимивши ковчег Господњи и ковчежић што беше покрај њега, у коме беху заклади златни, метнуше на онај велики камен; а људи из Вет-Семеса готовише жртве паљенице и принесоше жртве Господу онај дан.
16 ௧௬ பெலிஸ்தரின் ஐந்து ஆளுநர்களும் இவைகளைப் பார்த்து, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.
А то видевши пет кнезова филистејских вратише се у Акарон исти дан.
17 ௧௭ பெலிஸ்தர்கள் குற்றநிவாரணத்திற்காக, யெகோவாவுக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சிலைகளாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.
А ово беху златни шуљеви које дадоше Филистеји Господу за грех: за Азот један, за Газу један, за Аскалон један, за Гат један, за Акарон један.
18 ௧௮ பொன்னால் செய்த சுண்டெலிகளோ, அரணான பட்டணங்கள் துவங்கி நாட்டிலுள்ள கிராமங்கள் வரை, யெகோவாவுடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்வரை, ஐந்து ஆளுநர்களுக்கும் அதிகாரத்தில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய எல்லா ஊர்களின் எண்ணிக்கைக்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்த நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானான யோசுவாவின் வயலில் இருக்கிறது.
И миши златни беху према броју свих градова филистејских, у пет кнежевина, свих зиданих градова и села неограђених до великог камена, на који метнуше ковчег Господњи, и који је и данас у пољу Исуса Вет-Семешанина.
19 ௧௯ ஆனாலும் பெத்ஷிமேசின் மனிதர்கள் யெகோவாவுடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், யெகோவா மக்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது யெகோவா மக்களைப் பேரழிவாக அடித்ததினால், மக்கள் துக்கமாக இருந்தார்கள்.
Али поби Господ неке између Вет-Семешана који загледаше у ковчег Господњи, и поби из народа педесет хиљада и седамдесет људи. И плака народ што га Господ удари великом погибљу.
20 ௨0 இந்தப் பரிசுத்தமான தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கக்கூடியவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்திற்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனிதர்கள் சொல்லி,
И људи из Вет-Семеса рекоше: Ко може остати пред тим Господом Богом Светим? И ка коме ће отићи од нас?
21 ௨௧ கீரியாத்யாரீமின் குடியிருப்புகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர்கள் யெகோவாவுடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்திற்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.
И послаше посланике к становницима киријат-јаримским говорећи: Донесоше натраг Филистеји ковчег Господњи, ходите, однесите га к себи.