< 1 சாமுவேல் 31 >
1 ௧ பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு இறந்தார்கள்.
A Filisteji se pobiše s Izrailjcima, i pobjegoše Izrailjci ispred Filisteja, i padahu mrtvi na gori Gelvuji.
2 ௨ பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகனாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள்.
I stigoše Filisteji Saula i sinove njegove; i pogubiše Filisteji Jonatana i Avinadava i Melhi-Suva, sinove Saulove.
3 ௩ சவுலுக்கு விரோதமாக யுத்தம் பலத்தது; வில்வீரர்கள் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களால் மிகவும் காயப்பட்டு,
I boj posta žešæi oko Saula, i naðoše ga strijelci, i on se vrlo uplaši od strijelaca.
4 ௪ தன்னுடைய ஆயுததாரியைப் பார்த்து: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன்னுடைய பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நிலத்திலே குத்தி வைத்து அதின்மேல் விழுந்தான்.
I reèe Saul momku koji mu nošaše oružje: izvadi maè svoj i probodi me, da ne doðu ti neobrezani i probodu me i narugaju mi se. Ali ne htje momak što mu nošaše oružje, jer ga bješe vrlo strah. Tada Saul uze maè, i baci se na nj.
5 ௫ சவுல் இறந்துபோனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன்னுடைய பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடு இறந்துபோனான்.
A kad momak koji nošaše oružje vidje Saula mrtva, baci se i on na svoj maè i umrije s njim.
6 ௬ அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று மகன்களும், அவனுடைய ஆயுதம் ஏந்துபவனும், அவனுடைய எல்லா மனிதர்களும் ஒன்றாக இறந்துபோனார்கள்.
Tako pogibe Saul i tri sina njegova i momak koji mu nošaše oružje i svi ljudi njegovi zajedno onoga dana.
7 ௭ இஸ்ரவேலர்கள் பயந்தோடினார்கள் என்றும், சவுலும் அவனுடைய மகன்களும் இறந்துவிட்டார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்புறத்திலும் யோர்தானுக்கு இப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலர்கள் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.
A Izrailjci koji bijahu s ovu stranu potoka i s ovu stranu Jordana kad vidješe gdje Izrailjci pobjegoše i gdje pogibe Saul i njegovi sinovi, ostaviše gradove i pobjegoše, te doðoše Filisteji i ostaše u njima.
8 ௮ வெட்டுண்டவர்களை கொள்ளையிட, பெலிஸ்தர்கள் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,
A sjutradan doðoše Filisteji da svlaèe mrtve; i naðoše Saula i tri sina njegova gdje leže na gori Gelvuji.
9 ௯ அவனுடைய தலையை வெட்டி, அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களின் கோவில்களிலும் மக்களுக்குள்ளும் செய்தியைப் பரப்பும்படி, அவைகளைப் பெலிஸ்தர்கள் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,
I otsjekoše mu glavu, i skidoše oružje s njega, i poslaše u zemlju Filistejsku na sve strane da se objavi u kuæi njihovijeh lažnijeh bogova i po narodu.
10 ௧0 அவனுடைய ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவனுடைய உடலைப் பெத்சானின் சுவற்றிலே தூக்கிப்போட்டார்கள்.
I ostaviše oružje njegovo u kuæi Astarotinoj, a tijelo njegovo objesiše na zid Vet-sanski.
11 ௧௧ பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் கேட்டபோது,
A èuše stanovnici u Javisu Galadovu šta uèiniše Filisteji od Saula.
12 ௧௨ அவர்களிலே பலசாலிகள் எல்லோரும் எழுந்து இரவு முழுவதும் நடந்துபோய், பெத்சானின் சுவற்றிலிருந்த சவுலின் உடலையும் அவன் மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்செய்து,
I podigoše se svi ljudi hrabri, i išavši svu noæ skidoše tijelo Saulovo i tjelesa sinova njegovijeh sa zida Vet-sanskoga, pa se vratiše u Javis, i ondje ih spališe.
13 ௧௩ அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்செய்து, ஏழுநாள் உபவாசம்செய்தார்கள்.
I uzeše kosti njihove i pogreboše ih pod drvetom u Javisu, i postiše sedam dana.