< 1 சாமுவேல் 30 >
1 ௧ தாவீதும் அவனுடைய மனிதர்களும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருவதற்குள்ளே, அமலேக்கியர்கள் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,
౧దావీదు, అతనితో ఉన్నవారు మూడవ రోజున సిక్లగు వచ్చారు. అంతలో అమాలేకీయులు దండెత్తి దక్షిణ దేశం మీదా సిక్లగు మీదా దాడిచేసి, దోచుకుని సిక్లగు ప్రజలను ఓడించి, ఊరు తగలబెట్టి,
2 ௨ அதிலிருந்த பெண்களையும், சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்களுடைய வழியே போய்விட்டார்கள்.
౨పెద్దలనూ పిల్లలనూ అందులో ఉన్న స్త్రీలతో సహా చంపకుండా చెరబట్టి తీసుకుపోయారు.
3 ௩ தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்களுடைய மனைவிகளும் தங்களுடைய மகன்களும் தங்களுடைய மகள்களும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
౩దావీదు, అతని మనుషులు అ ఊరికి వచ్చి అది కాలిపోయి ఉండడం, తమ భార్యలూ, కొడుకులూ కూతుర్లూ చెరలోకి పోయి ఉండడం చూసి
4 ௪ அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகும் வரை சத்தமிட்டு அழுதார்கள்.
౪ఇక ఏడవడానికి ఓపిక లేనంత గట్టిగా ఏడ్చారు.
5 ௫ தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாக இருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
౫యజ్రెయేలీయురాలు అహీనోయము, కర్మెలు వాడైన నాబాలు భార్యగా ఉన్న అబీగయీలు అనే దావీదు ఇద్దరు భార్యలు కూడా చెరలోకి పోవడం చూసి
6 ௬ தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; எல்லா மக்களும் தங்கள் மகன்கள், மகள்களினிமித்தம் மனவருத்தமானதால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
౬దావీదు చాలా దుఃఖపడ్డాడు. తమ తమ కొడుకులూ కూతుర్లను బట్టి వారందరికీ ప్రాణం విసికి పోయి దావీదును రాళ్లు రువ్వి చంపాలని చెప్పుకున్నారు. దావీదు తన దేవుడు, యెహోవాను బట్టి ధైర్యం తెచ్చుకున్నాడు.
7 ௭ தாவீது அகிமெலேக்கின் மகனான அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
౭అప్పుడు దావీదు ఏఫోదు తెమ్మని యాజకుడైన అహీమెలెకు కుమారుడు అబ్యాతారుతో చెప్పాడు. అబ్యాతారు ఏఫోదును దావీదు దగ్గరికి తీసుకు వచ్చాడు.
8 ௮ தாவீது யெகோவாவை நோக்கி: நான் அந்தப் படையைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்ந்து போ; அதை நீ பிடித்து, எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.
౮“నేను ఈ సేనను తరిమితే దాని కలుసుకోగలుగుతానా?” అని యెహోవా దగ్గర దావీదు విచారణ చేశాడు. అందుకు యెహోవా “తరుము, తప్పకుండా నీవు వాళ్ళని కలుసుకుని నీవారినందరినీ విడిపించుకుంటావు” అని చెప్పాడు.
9 ௯ அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த 600 பேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றின் அருகில் வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.
౯కాబట్టి దావీదు, అతనితో ఉన్న 600 మంది బయలుదేరి, బెసోరు వాగు గట్టుకు వస్తే వారిలో 200 మంది ఆగిపోయారు.
10 ௧0 தாவீதோ, 400 பேரோடுத் தொடர்ந்து போனான்; 200 பேர் களைத்துப்போனபடியால் பேசோர் ஆற்றைக் கடக்கமுடியாமல் நின்றுபோனார்கள்.
౧౦దావీదు, ఇంకా 400 మంది తరుముతూ పోయారు గానీ ఆ 200 మంది అలిసి పోయి బెసోరు వాగు దాటలేక ఆగిపోయారు. ఆ 400 మంది పోతుంటే
11 ௧௧ ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, சாப்பிட அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
౧౧ఒక పొలంలో ఒక ఐగుప్తీయుడు తారసపడ్డాడు. వారు దావీదు దగ్గరికి అతణ్ణి తీసుకు వచ్చి భోజనం పెడితే, తిన్నాడు. దాహానికి నీరిస్తే, తాగాడు.
12 ௧௨ அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், உலர்ந்த இரண்டு திராட்சைப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இரவு பகல் மூன்று நாளாக அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.
౧౨వారు అతనికి అంజూరపు ముద్ద తుంచి ఇచ్చారు. రెండు ఎండు ద్రాక్ష ముద్దలు అతనికిచ్చారు. అతడు మూడు రోజులనుండి పస్తులున్నాడు. భోజనం చేసిన తరువాత అతడి ప్రాణం తెప్పరిల్లింది.
13 ௧௩ தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எந்த இடத்தை சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் வாலிபன்; மூன்று நாளைக்குமுன்பு நான் வியாதிப்பட்டபோது, என்னுடைய எஜமான் என்னைக் கைவிட்டான்.
౧౩అప్పుడు దావీదు “నీవు ఏ దేశం వాడివి? ఎక్కడనుండి వచ్చావు?” అని అడిగాడు. అందుకు వాడు “నేను ఐగుప్తు వాణ్ణి. ఒక అమాలేకీయుడికి బానిసనయ్యాను. మూడు రోజుల క్రితం నాకు జబ్బు చేసింది. నా యజమాని నన్ను వదిలి వెళ్ళిపోయాడు.
14 ௧௪ நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவைச்சார்ந்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான்.
౧౪మేము దండెత్తి కెరేతీ జాతి వారుండే దక్షిణ దేశానికి, యూదా దేశానికి, కాలేబు దక్షిణ దేశానికి వచ్చి వాటిని దోచుకుని సిక్లగును కాల్చివేశాం” అని చెప్పాడు.
15 ௧௫ தாவீது அவனை பார்த்து: நீ என்னை அந்த படையினிடத்திற்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என்னுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் படையினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.
౧౫“ఆ దోపిడీ గుంపును కలుసుకొనేందుకు నీవు నాకు దారి చూపుతావా” అని దావీదు అడిగితే అతడు “నేను నిన్ను చంపననీ నీ యజమాని వశం చేయననీ దేవుని పేరున నాకు మాట ఇస్తే ఆ గుంపును కలుసుకోవడానికి నీకు దారి చూపుతాను” అన్నాడు.
16 ௧௬ இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, சாப்பிட்டுக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர்கள் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
౧౬తరువాత వాడు వారి దగ్గరికి దావీదును తోడుకుని పోయాడు. ఆ దోపిడీ వారు ఫిలిష్తీయుల దేశంలోనుండి, యూదా దేశం లోనుండి తాము దోచి తెచ్చుకొన్న కొల్ల సొమ్ముతో, ఆ ప్రదేశమంతా చెల్లాచెదరుగా తింటూ, తాగుతూ ఆటపాటల్లో ఉన్నారు.
17 ௧௭ அவர்களைத் தாவீது அன்று மாலைதொடங்கி மறுநாள் மாலை வரை முறியடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன 400 வாலிபர்கள் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.
౧౭దావీదు అదను కనిపెట్టి సంధ్యవేళ మొదలు మరునాటి సాయంత్రం వరకూ వారిని చంపుతూ ఉంటే ఒంటెల మీద ఎక్కి పారిపోయిన 400 మంది యువకులు తప్ప ఒక్కడు కూడా తప్పించుకొన్నవాడు లేకపోయాడు.
18 ௧௮ அமலேக்கியர்கள் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
౧౮ఇలా దావీదు అమాలేకీయులు దోచుకు పోయిన దానంతటినీ తిరిగి తెచ్చుకున్నాడు. అంతేకాదు, అతడు తన ఇద్దరు భార్యలను కూడా రక్షించుకున్నాడు.
19 ௧௯ அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், மகன்களிலும், மகள்களிலும், ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
౧౯కొడుకులూ కూతుర్లూ దోపుడు సొమ్ము, ఇలా వారు ఎత్తుకుపోయిన దానంతటిలో ఏదీ తక్కువ కాకుండా మొత్తం దావీదు దక్కించుకున్నాడు.
20 ௨0 எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
౨౦దావీదు ఇంకా అమాలేకీయుల గొర్రెలన్నిటినీ గొడ్లన్నిటినీ చేజిక్కించుకున్నాడు. ఇవి దావీదుకు దోపుడు సొమ్ము అని భావించి తక్కిన వారు మిగిలిన తమ సొంత పశువులకు ముందుగా వీటిని తోలారు.
21 ௨௧ களைத்துப்போனதால் தாவீதுக்குப் பின்னே செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த 200 பேரிடம் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த மக்களிடத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த மக்களிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
౨౧అలిసి పోయి దావీదుతో కలిసి రాలేక బెసోరు వాగు దగ్గర నిలిచిపోయిన ఆ 200 మంది దగ్గరకి దావీదు తిరిగి వెళ్ళాడు. వారు దావీదును అతనితో ఉన్నవారిని ఎదుర్కొనడానికి బయలుదేరి వచ్చారు. దావీదు వారి దగ్గరకి వచ్చి వారి యోగక్షేమాలు అడిగాడు.
22 ௨௨ அப்பொழுது தாவீதோடு நடந்து வந்த மனிதர்களில் துன்மார்க்கர்களும், பயனற்ற மக்களுமான எல்லோரும்: அவர்கள் எங்களோடே வராதபடியால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள்.
౨౨దావీదుతో కూడా వెళ్లిన వారిలో దుష్టులు, పనికిమాలిన వారు కొంతమంది “వీళ్ళు మనతో కూడా రాలేదు గనక వారి భార్యలనూ పిల్లలనూ తప్ప మనకు దక్కిన దోపుడు సొమ్ములో ఏమీ వీరికి ఇవ్వనక్కర లేదు. తమ భార్య పిల్లలను మాత్రం వారు తీసికోవచ్చు” అన్నారు.
23 ௨௩ அதற்குத் தாவீது: என்னுடைய சகோதரர்களே, யெகோவா நமக்கு கொடுத்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; யெகோவா நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாக வந்திருந்த அந்தப் படையை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
౨౩అందుకు దావీదు వారితో “నా సోదరులారా, యెహోవా మనలను కాపాడి మనమీదికి వచ్చిన ఈ దండును మన వశం చేసి, మనకు దయచేసిన కొల్ల సొమ్ము విషయంలో మీరు ఇలా చేయడం తగదు.
24 ௨௪ இந்தக் காரியத்தில் உங்கள் சொல் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அந்த அளவில் பொருட்களின் அருகே இருந்தவர்களுக்கும் பங்கு கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
౨౪మీరంటున్నది ఎవరు ఒప్పుకుంటారు? యుద్దానికి పోయినవాడికీ సామాను దగ్గర కావలి ఉన్న వాడికి ఒకటే భాగం కదా. అందరూ సమానంగానే పాలు పంచుకుంటారు గదా”
25 ௨௫ அப்படியே அந்தநாள்முதல் நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்த நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் ஆணையுமாக ஏற்படுத்தினான்.
౨౫ఆ విధంగా అప్పటి నుండి ఇప్పటి వరకూ దావీదు ఇశ్రాయేలీయుల్లో అలాటి పంపకం కట్టడగా న్యాయవిధిగా ఏర్పరచి నియమించాడు.
26 ௨௬ தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையடித்தவைகளிலே தன்னுடைய நண்பர்களாகிய யூதாவின் மூப்பர்களுக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, யெகோவாவுடைய எதிரிகளின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச் சொன்னான்.
౨౬దావీదు సిక్లగుకు చేరుకుని దోపుడు సొమ్ములో కొంత తన స్నేహితులైన యూదా పెద్దలకు పంపించాడు. యెహోవా శత్రువులనుండి నేను దోచుకొన్న సొమ్ములో కొంత కానుకగా మీకు ఇస్తున్నానని చెప్పి వారికి పంపించాడు.
27 ௨௭ யார் யாருக்கு அனுப்பினான் என்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
౨౭బేతేలులో, దక్షిణ రామోతులో, యత్తీరులో,
28 ௨௮ ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,
౨౮అరోయేరులో, షిప్మోతులో, ఎష్టేమోలో,
29 ௨௯ ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
౨౯రాకాలులో, యెరహ్మెయేలీయుల గ్రామాల్లో, కేనీయుల గ్రామాల్లో,
30 ௩0 ஓர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,
౩౦హోర్మాలో బోరాషానులో, అతాకులో
31 ௩௧ எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவனுடைய மனிதர்களும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.
౩౧హెబ్రోనులో దావీదూ అతని మనుషులూ తిరుగాడిన స్థలాలన్నిటిలో ఉన్న పెద్దలకు దావీదు ఇలా పంపించాడు.