< 1 சாமுவேல் 29 >
1 ௧ பெலிஸ்தர்கள் தங்கள் இராணுவங்ளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் யெஸ்ரயேலிலிருக்கிற நீரூற்றின் அருகே முகாமிட்டார்கள்.
И собраша иноплеменницы вся полки своя во Афек, Израилтяне же ополчишася во Аендоре иже во Иезраели.
2 ௨ அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள் நூறும் ஆயிரமுமான படைகளோடு போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் ஆகீசோடே பின் சென்றார்கள்.
И воеводы иноплеменничи предидяху со стами и тысящами, Давид же и мужие его идяху в последних со Агхусом.
3 ௩ அப்பொழுது பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: இந்த எபிரெயர்கள் எதற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருடங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.
И реша воеводы иноплеменничи кто суть идущии сии? И рече Агхус к воеводам иноплеменничим: не сей ли Давид раб Саула царя Израилева, иже бысть с нами дний сие второе лето? И не обретох в нем ничтоже, от дне в оньже прииде ко мне даже до сего дне.
4 ௪ அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனிதன் நீர் குறித்த தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போகும்படி, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்கு எதிரியாய் மாறாதபடி, இவன் நம்மோடு யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனிதர்களுடைய தலைகளினால் அல்லவா?
И прискорбни быша о нем воеводы иноплеменничи и глаголаша ему: возврати мужа, и да возвратится на место свое, идеже поставил еси его тамо, и да не идет с нами на брань, и да не будет наветник в полцех: и чим примирится сей господину своему? Не главами ли мужей сих?
5 ௫ சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று இந்த தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
Не сей ли есть Давид, емуже изыдоша с лики, глаголюще: победи Саул с тысящами своими, и Давид со тмами своими?
6 ௬ அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ முகாமில் என்னோடே போக்கும் வரத்துமாக இருக்கிறது என்னுடைய பார்வைக்கு நல்லது என்றும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரை நான் உன்னில் ஒரு தீங்கும் காணவில்லை; ஆனாலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.
И призва Агхус Давида и рече ему: жив Господь, яко прав ты и благ пред очима моима, и вход твой и исход твой со мною в полце, и яко не обретох в тебе злобы, отнележе еси пришел ко мне до днешняго дне, но пред очима воевод не благ еси ты:
7 ௭ ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான்.
и ныне возвратися и иди с миром, и да не сотвориши зла пред очима воевод иноплеменничих.
8 ௮ தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய எதிரிகளோடு யுத்தம்செய்யாதபடி, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதல் இன்றுவரை உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.
И рече Давид ко Агхусу: что сотворих ти? И что обрел еси в рабе твоем, от негоже дне бех пред тобою, и даже до сего дне, да не иду воевати врагов господина моего царя?
9 ௯ ஆகீஸ் தாவீதுக்குப் பதிலாக: நான் அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என்னுடைய பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடு யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தர்களின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
И отвеща Агхус Давиду: вем, яко благ ты пред очима моима яко Ангел Божий, но воеводы иноплеменничи глаголют: да не идет с нами на брань:
10 ௧0 இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடு வந்த உன்னுடைய ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலை வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.
и ныне востани рано ты и отроцы господина твоего ходящии с тобою и идите на место, идеже поставих вас, и словесе пагубна да не положиши на сердцы твоем, яко благ еси ты предо мною: и востаните рано в путь, егда разсветает вам, и идите.
11 ௧௧ அப்படியே தாவீது அதிகாலையில் தன்னுடைய மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தர்களின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.
И урани Давид сам и мужие его отити и стрещи земли иноплеменничи, и иноплеменницы взыдоша на брань во Иезраель.