< 1 சாமுவேல் 20 >
1 ௧ தாவீது ராமாவிலிருந்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என்னுடைய ஜீவனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என்னுடைய அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
Eka Daudi noringo koa Nayoth e gwengʼ Rama mine odhi ir Jonathan mopenje niya, “Angʼo masetimo? Ere kethona? Rach mane ma asetimo ne wuonu, momiyo odwaro kawo ngimana?”
2 ௨ அதற்கு அவன்: அப்படி ஒருபோதும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என்னுடைய தகப்பன் பெரிய காரியமானாலும், சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்வதில்லை; இந்தக் காரியத்தை என்னுடைய தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்காது என்றான்.
Jonathan nodwoke niya, “Onge. Ok ibi tho! Winji, wuonwa ok tim gimoro amora, bedni oduongʼ kata otin, ma ok onyisa. Angʼo madimi opandna wachni? Ok en kamano!”
3 ௩ அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாக அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனவருத்தம் உண்டாகாதபடி அவன் இதை அறியக்கூடாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரம் இருக்கிறது என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று பதில் சொல்லி ஆணையிட்டான்.
Daudi to nowacho ka kwongʼore niya, “Wuoru ongʼeyo malongʼo kaka igena mi osewacho e chunye ni, ‘Jonathan ok onego ngʼe wachni nikech chunye nyalo bedo gi lit.’ Kata kamano akwongʼora gi nying Jehova Nyasaye mangima to gi nyingi ni kinda gi tho odongʼ mana ondamo achiel.”
4 ௪ அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் என்ன என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.
Jonathan nowacho ni Daudi niya, “Gimoro amora midwaro ni atim abiro timoni.”
5 ௫ தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசை, நான் ராஜாவோடு பந்தியில் சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலம் வரை வெளியிலே ஒளிந்திருக்கும்படி எனக்கு உத்திரவு கொடும்.
Omiyo Daudi nowacho niya, “Winji, kiny en Sawo mar Dwe manyien kendo nitie budho ma onego bed ni achiemo gi ruoth, to we adhi apondi oko nyaka chop odhiambo mar orucha.
6 ௬ உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன்னுடைய ஊராகிய பெத்லெகேமிலே தன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை பலியிட வருகிறபடியால் தாவீது அந்த இடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும்.
Ka wuonu ok onena e nyasini, to nyise ni, ‘Daudi nokwaya mondo amiye thuolo odhi dalagi Bethlehem mapiyo piyo, nikech anywolagi duto nigi misango mar higa ka higa.’
7 ௭ அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே தீமை உறுதிப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்கள்.
Ka owacho ni, ‘Mano ber,’ eka anabed gi adieri ni jatichni nigi kwe. To ka mirima omake, to ibiro bedo gi adiera ni oseketo chunye ni nyaka to onega.
8 ௮ ஆகவே, உம்முடைய அடியானுக்குத் தயை செய்யவேண்டும்; யெகோவாவுக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை செய்திருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்தால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்திற்குக் கொண்டு போகவேண்டியது என்ன என்றான்.
In to koro bed ja-adiera ne jatichni, nikech isekwongʼori kode e nyim Jehova Nyasaye. To ka an jaketho to nega in iwuon! Angʼo ma dimi iketa e lwet wuonu?”
9 ௯ அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்கு தீமை செய்ய என் தகப்பனாலே உறுதிப்பட்டிருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான்.
Jonathan nowachone niya, “Mano ok nyal timore! Ka dine angʼeyo kata mana matin ni wuora dwaro timoni marach, donge danyisi?”
10 ௧0 தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான பதில் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.
Daudi nopenje niya, “Ngʼa mabiro wachona ka wuonu odwoki gi gero?”
11 ௧௧ அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
Jonathan nowacho niya, “Bi wadhi kuma opondo.” Omiyo negidhi giduto.
12 ௧௨ அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை முன்னிட்டு தாவீதைப் பார்த்து: நான் நாளையோ மறுநாளிலோ என்னுடைய தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாக இருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படி, உமக்குச் சொல்லியனுப்பாமலிருந்தால்,
Eka Jonathan nowachone Daudi niya, “Gi nying Jehova Nyasaye ma Nyasach Israel, abiro wuoyo gi wuora e sa maka ma orucha! Ka en gi paro maber kuomi, to donge abiro anyisi?
13 ௧௩ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும்; ஆனாலும் உமக்குத் தீங்குசெய்ய என்னுடைய தகப்பனுக்குப் பிரியமாக இருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடு போகும்படி உம்மை அனுப்பிவிடுவேன்; யெகோவா என்னுடைய தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.
To ka wuora nigi chuny mar hinyi, to aweyo ma ok anyisi kendo konyi mondo itony idhi gi kwe, to mondo Jehova Nyasaye ochwada malit. Mad Jehova Nyasaye obed kodi mana kaka osebedo gi wuora.
14 ௧௪ மேலும், நான் உயிரோடிருக்கும்போது, நான் சாகாதபடி நீர் யெகோவாவின் நிமித்தமாக எனக்குத் தயை செய்யவேண்டியதும் அன்றி,
To yie itimna ngʼwono mana machal gi ngʼwono mosiko mar Jehova Nyasaye e ndalo duto mag ngimana, mondo kik nega,
15 ௧௫ யெகோவா தாவீதின் எதிரிகள் ஒருவரையும் பூமியின்மேல் இல்லாதபடி, வேர் அறுக்கும்போதும், நீர் என்றென்றைக்கும் உமது தயவை என்னுடைய வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.
kendo kik iwe timo ngʼwono ni jooda kata mana ka Jehova Nyasaye osetieko wasik Daudi e wangʼ piny.”
16 ௧௬ இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடு உடன்படிக்கைசெய்து, தாவீதுடைய எதிரிகளின் கையிலே யெகோவா கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,
Omiyo Jonathan nokwongʼore gi joka Daudi, kowacho niya, “Mad Jehova Nyasaye mondo ongʼad bura ne wasik Daudi.”
17 ௧௭ யோனத்தான் தாவீதை மிகவும் நேசித்தபடியால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன்னுடைய உயிரை நேசித்ததுபோல அவனை நேசித்தான்.
Omiyo Jonathan noketo Daudi mochako ojiwo kwongʼruokne nikech nohere, nimar nohere mana kaka oherore owuon.
18 ௧௮ பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசை, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாக இருப்பதால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
Eka Jonathan nowachone Daudi niya, “Kiny en Sawo mar dwe manyien kendo kiny nongʼere ni ionge nikech komi nobed nono.
19 ௧௯ காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளிந்திருக்கும் இடத்திற்கு விரைவாக வந்து, ஏசேல் என்னும் கல்லின் அருகில் உட்கார்ந்திரும்.
To kochopo orucha kar odhiambo kanyo to idhi kama ne ipondoe mokwongo ka wechegi nochakore kendo irit but kit Ezel.
20 ௨0 அப்பொழுது நான் குறிப்பு வைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:
Abiro diro aserni adek e bathe kanyo, ka gima atemo lengʼo gimoro.
21 ௨௧ நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு சிறுவனை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று சிறுவனிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Eka abiro oro rawera kawachone ni, ‘Dhi idwar aserni.’ To kawachone ni, ‘Ne, aserni ni e bathi koni; kelgi ka, eka ibi, nikech akwongʼora gi nying Jehova Nyasaye mangima ni onge gima biro hinyi kendo onge gima rach.’
22 ௨௨ இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த சிறுவனிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது யெகோவா உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறிந்துகொள்.
To ka awachone rawera ni, ‘Ne, aserni ni nyimi,’ eka nyaka idhi nikech Jehova Nyasaye dwaro ni idhi adhiya.
23 ௨௩ நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, யெகோவா எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.
To kuom weche mawasewuoyoe to ipar, nimar Jehova Nyasaye en janeno e kindwa nyaka chiengʼ.”
24 ௨௪ அப்படியே தாவீது வெளியிலே ஒளிந்துகொண்டிருந்தான்; அமாவாசையானபோது ராஜா சாப்பிட உட்கார்ந்தான்.
Omiyo Daudi nopondo oko kendo kane Sawo mar Dwe manyien ochopo, to ruoth nobet piny mondo ochiem.
25 ௨௫ ராஜா சுவரின் அருகிலிருக்கிற தன்னுடைய இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது.
Nobet kare mane ojabetie but kor ot, ka gimanyore gi Jonathan, Abner to nobet bath Saulo, kom Daudi to ne ninono.
26 ௨௬ ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானா, அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
Saulo ne ok owacho gimoro chiengʼno, nikech noparo e chunye niya, “Nyaka bed ni Daudi osetimo gimoro marach, omiyo ok oler adiera emomiyo ok obiro e nyasi.”
27 ௨௭ அமாவாசைக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் சாப்பாட்டிற்கு வராமல்போனது என்ன என்று தன்னுடைய மகனான யோனத்தானைக் கேட்டான்.
To kata mana kinyne, ma en chiengʼ mar ariyo mar dwe, kom Daudi ne pod ninono. Eka Saulo nowachone Jonathan wuode niya, “Angʼo momiyo wuod Jesse ok obiro e chiemo, chakre nyoro nyaka kawuono?”
28 ௨௮ யோனத்தான் சவுலுக்குப் பதிலாக: பெத்லெகேம்வரை போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
Jonathan nodwoko niya, “Daudi nohomba kokwaya thuolo mondo odhi Bethlehem.”
29 ௨௯ அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என்னுடைய சகோதரர்களில் ஒருவன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரர்களைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்திரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
Nokwayo niya, “Yiena mondo adhi nikech joodwa timo misango e dala kendo owadwa nochika matek ni nyaka achop kuno. Koro akwayi ni yie ingʼwon-na mondo adhi ane owetena. Mano ema omiyo ok osebiro e mesa ruoth.”
30 ௩0 அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபப்பட்டு, அவனைப் பார்த்து: கலகமும் முரட்டாட்டமும் உள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
Saulo notoyo mirimbe kuom Jonathan mowachone niya, “In wuod dhako ma wiye tek kendo ma ja-mahundu! Donge angʼeyo ni isebedo jakor wuod Jesse makelo wichkuot ne in iwuon kendo ne minu monywoli?
31 ௩௧ ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் அரசாட்சியானாலும் நிலைப்பதில்லை; இப்போதே அவனை அழைத்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.
Ka wuod Jesse pod ngima e pinyni to in kata pinyruodhi ok nyal gurore. Koro or wach mondo okelnago nikech nyaka otho!”
32 ௩௨ யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலுக்குப் பதிலாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.
Jonathan nopenjo wuon-gi niya, “Angʼo momiyo nyaka otho? Angʼo mosetimo?”
33 ௩௩ அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன்னுடைய தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு,
To Saulo nobaye gi tongʼ mondo onege. Eka Jonathan nongʼeyo ni kare wuon-gi dwaro nego Daudi.
34 ௩௪ கோபத்தோடு பந்தியைவிட்டு எழுந்துபோய், அமாவாசையின் மறுநாளாகிய அன்றையதினம் சாப்பிடாமல் இருந்தான்; தன்னுடைய தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனவருத்தமாக இருந்தது.
Jonathan nochungʼ moa e mesa ka mirima mager omake chiengʼ mar ariyo mar dwe mane ok ochiemo, nikech chunye ne lit kod timbe wuon-gi mag wichkuot mane otimone Daudi.
35 ௩௫ மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறுவனைகூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்:
Kinyne gokinyi Jonathan nodhi oko e kargi mar romo gi Daudi. Ne en-gi wuowi matin,
36 ௩௬ சிறுவனை பார்த்து: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் சிறுவன் ஓடும்போது, அவனுக்கு அப்பால் போகும்படி ஒரு அம்பை எய்தான்.
kendo nowachone wuowino niya, “Ringi mondo idwar aserni madirogi.” E sa ma wuowino ne ringo, nodiro asere mokadhe.
37 ௩௭ யோனத்தான் எய்த அம்பு இருக்கும் இடம்வரை சிறுவன் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் சிறுவனுக்கு பின்னால் இருந்து கூப்பிட்டான்.
Ka wuowino nochopo kama asech Jonathan ne olwarie, Jonathan noluonge gi dwol maduongʼ niya, “Donge asere ni nyimi kanyo?”
38 ௩௮ நீ நிற்காமல் விரைவாக சீக்கிரமாகப் போ என்றும் யோனத்தான் சிறுவனுக்குப் பின்னால் இருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி, தன்னுடைய எஜமானிடத்தில் கொண்டு வந்தான்.
Eka nokok kowacho niya, “Reti! Dhi piyo! Kik ichungʼ!” Wuowino nokwanyo asereno mi odok ir ruodhe.
39 ௩௯ அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்த சிறுவனுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
Wuowino ne ok ongʼeyo gimoro amora mane timore, makmana Jonathan gi Daudi kende ema nongʼeyo.
40 ௪0 அப்பொழுது யோனத்தான்: தன்னுடைய ஆயுதங்களை சிறுவனிடத்தில் கொடுத்து, இவைகளைப் கிபியா பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
Eka Jonathan nomiyo wuowino gige mag lweny mowachone niya, “Dhiyo idwokgi dala.”
41 ௪௧ சிறுவன் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று முறை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
Bangʼ ka wuowino nosedhi, Daudi nowuok yo milambo mar dir kidi, mi okulore piny e nyim Jonathan nyadidek ka lend wangʼe mulo piny. Eka ne gimosore ma giywak giduto to Daudi noywak moloyo.
42 ௪௨ அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், யெகோவா என்றைக்கும் எனக்கும் உமக்கும், என்னுடைய சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.
Jonathan nowachone Daudi niya, “Dhi gi kwe nimar wasesingore e nyim Jehova Nyasaye ni osiep man e kindwa kodi ka wakwongʼore niya, Jehova Nyasaye obed janeno e kindi koda kendo e kind nyikwayi kod nyikwaya nyaka chiengʼ” Eka Daudi nowuok to Jonathan bende nodok dala.