< 1 சாமுவேல் 19 >
1 ௧ தாவீதைக் கொன்றுபோடும்படி, சவுல் தன்னுடைய மகனான யோனத்தானோடும் தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரோடும் பேசினான்.
И глагола Саул к Ионафану сыну своему и ко всем отроком своим, да умертвят Давида. Ионафан же сын Саулов любяше Давида зело.
2 ௨ சவுலின் மகனான யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என்னுடைய தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகை தேடுகிறார்; இப்போதும் நாளைக்காலை நீர் எச்சரிக்கையாக இருந்து, மறைவான இடத்தில் ஒளிந்துகொண்டிரும்.
И возвести Ионафан Давиду, глаголя: отец мой Саул ищет тя убити: сохранися убо заутра рано, и скрыйся, и сяди втайне:
3 ௩ நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என்னுடைய தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என்னுடைய தகப்பனோடு பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.
и аз изыду, и стану при отце моем на селе, идеже еси ты: и аз возглаголю отцу моему о тебе, и узрю, что будет, и возвещу тебе.
4 ௪ அப்படியே யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலோடு தாவீதுக்காக நலமாகப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாகப் பாவம் செய்யாமல் இருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவம் செய்யவில்லை; அவனுடைய செய்கைகள் உமக்கு அதிக உபயோகமாக இருக்கிறதே.
И глагола Ионафан о Давиде благая к Саулу отцу своему, и рече к нему: да не согрешает царь на раба своего Давида, яко не согреши пред тобою, и дела его блага суть зело:
5 ௫ அவன் தன்னுடைய உயிரைத் தன்னுடைய கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினால், யெகோவா இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் காரணமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் ஏன் பாவம் செய்கிறீர் என்றான்.
и положи душу свою в руце своей и победи иноплеменника, и сотвори Господь спасение велико всему Израилю, и вси видеша и возрадовашася: и почто согрешаеши в кровь неповинну, еже убити Давида туне?
6 ௬ சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.
И послуша Саул гласа Ионафаня: и клятся Саул, глаголя: жив Господь, яко не умрет (Давид).
7 ௭ பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலினிடத்தில் கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்புபோலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.
И призва Ионафан Давида и возвести ему вся глаголы сия, и введе Ионафан Давида к Саулу, и бе пред ним яко вчера и третияго дне.
8 ௮ மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களை பயங்கரமாக வெட்டியதால் அவர்கள் அவனுக்கு முன்பாக சிதறி ஓடிப்போனார்கள்.
И приложися брань быти на Саула, и укрепися Давид, и победи иноплеменники, и изби язвою великою зело, и бежаша от лица его.
9 ௯ யெகோவாவால் விடப்பட்ட தீய ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து, தன்னுடைய ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன்னுடைய கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.
И бысть от Бога дух лукавый на Сауле, и той в дому своем седяше, и копие в руце его, Давид же играше руками своими:
10 ௧0 அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இரவு ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.
и искаше Саул копием поразити Давида, и отступи Давид от лица Сауля, и удари Саул копием в стену: Давид же отшед спасеся в нощь ту.
11 ௧௧ தாவீதைக் காவல்செய்து, மறுநாள் காலையில் அவனைக் கொன்று போடும்படி, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இரவில் உம்முடைய ஜீவனை தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்று போடப்படுவீர் என்று சொல்லி,
И посла Саул вестники в дом Давидов стрещи его, еже убити его рано. И возвести Давиду Мелхола жена его, глаголющи: аще ты не спасеши души твоея в нощь сию, заутра умреши.
12 ௧௨ மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.
И свеси Мелхола Давида оконцем, и отиде, и убежа, и спасеся:
13 ௧௩ மீகாளோ ஒரு சிலையை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத் தோலைப் போட்டு, போர்வையினால் மூடி வைத்தாள்.
и прият Мелхола тщепогребалная, и положи на одре, и печень козию положи на возглавии его, и покры я ризами.
14 ௧௪ தாவீதைக் கொண்டுவரச் சவுல் காவலர்களை அனுப்பினபோது, அவர் வியாதியாக இருக்கிறார் என்றாள்.
И посла Саул вестники, да имут Давида, и рекоша, яко болен есть.
15 ௧௫ அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் காவலரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படி, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
И посла Саул, да оглядают Давида, глаголя: принесите его на одре ко мне, еже умертвити его.
16 ௧௬ காவலர்கள் வந்தபோது, இதோ, சிலை கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.
И приидоша слуги, и се, тщепогребалная на одре и козия печень при возглавии его.
17 ௧௭ அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏமாற்றி, என்னுடைய எதிரியைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
И рече Саул к Мелхоле: почто тако обманула мя еси, и отпустила еси врага моего, и гонзе мене? И рече Мелхола Саулу: сам ми рече: отпусти мя: аще же ни, погублю тя.
18 ௧௮ தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
И Давид убежа и спасеся, и иде к Самуилу во Армафем и поведа ему вся, елика сотвори ему Саул. И идоста Давид и Самуил и седоста в Навафе в Раме.
19 ௧௯ தாவீது ராமாவில் உள்ள நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.
И возвестиша Саулу, глаголюще: се, Давид в Навафе в Раме.
20 ௨0 அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவர காவலரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய காவலர்களின்மேல் தேவனுடைய ஆவி இறங்கியதால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
И посла слуги Саул яти Давида, и видеша собор пророков, и Самуил стояше настоятель над ними: и бысть Дух Божий на слугах Саулих, и начаша прорицати.
21 ௨௧ இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே காவலரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாம் முறையும் சவுல் காவலரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
И возвестиша Саулу, и посла другия слуги, и прорицати начаша и тии. И приложи Саул послати слуги третия, и начаша и тии прорицати.
22 ௨௨ அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றின் அருகே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவிலுள்ள நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
И разгневася гневом Саул, и иде и сам во Армафем, и прииде даже до кладязя гумна, еже есть в Сефе, и вопроси и рече: где есть Самуил и Давид? И реша: се, в Навафе в Раме.
23 ௨௩ அப்பொழுது ராமாவிலுள்ள நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கியதால் அவன் ராமாவிலுள்ள நாயோதிலே சேரும் வரை, தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,
И иде оттуду в Наваф (иже) в Раме: и бысть и на нем Дух Божий, и идяше идый и прорицая, дондеже приити ему в Наваф иже в Раме.
24 ௨௪ தானும் தன்னுடைய உடைகளை கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் உடை இல்லாமல் விழுந்துகிடந்தான்; எனவே, சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
И совлече ризы своя и прорицаше пред ними: и паде наг весь день той и всю нощь. Того ради глаголаху: еда и Саул во пророцех?