< 1 சாமுவேல் 16 >

1 யெகோவா சாமுவேலைப் பார்த்து: இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எதுவரை துக்கப்பட்டுக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்திற்கு உன்னை அனுப்புவேன்; அவனுடைய மகன்களில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
И рече Господь к Самуилу: доколе ты плачеши о Сауле, Аз же уничижих его, не царствовати во Израили? Наполни рог твой елеа и прииди, послю тя ко Иессею до Вифлеема, яко узрех в сынех его Себе царя.
2 அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது யெகோவா: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், யெகோவாவுக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,
И рече Самуил: како пойду? И услышит Саул, и убиет мя. И рече Господь: юницу от волов возми в руце твои и речеши: пожрети Господеви иду:
3 ஈசாயைப் பலிவிருந்திற்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்கிறவனை எனக்காக அபிஷேகம்செய்வாயாக என்றார்.
и призовеши Иессеа и сыны его к жертве: и Аз ти покажу, яже сотвориши, и помажеши Ми, егоже ти реку.
4 யெகோவா சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அந்த ஊரின் மூப்பர்கள் நடுக்கத்தோடு அவனுக்கு எதிராக வந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
И сотвори Самуил вся, елика рече ему Господь: и прииде в Вифлеем, и ужасошася старейшины града о пришествии его и реша: мир ли вход твой, о, прозорливче?
5 அதற்கு அவன்: சமாதானம் தான்; யெகோவாவுக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, என்னோடு பலிவிருந்திற்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தம்செய்து, அவர்களைப் பலிவிருந்திற்கு அழைத்தான்.
И рече: мир: пожрети Господу приидох: освятитеся и возвеселитеся днесь со мною. И освяти Иессеа и сыны его, и призва я к жертве.
6 அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: யெகோவாவால் அபிஷேகம் செய்யப்படுபவன் இவன்தானோ என்றான்.
И бысть внегда внити им, и виде Елиава и рече: сей ли пред Господем помазанник Его?
7 யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
И рече Господь Самуилу: не зри на лице его, ниже на возраст величества его, яко уничижих его: понеже не тако зрит человек, яко зрит Бог: яко человек зрит на лице, Бог же зрит на сердце.
8 அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் யெகோவா தெரிந்து கொள்ளவில்லை என்றான்.
И призва Иессей Аминадава и представи его пред лице Самуила. И рече (Самуил): ниже сего избра Господь.
9 ஈசாய் சம்மாவையும் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் யெகோவா தெரிந்துகொள்ளவில்லை என்றான்.
И приведе Иессей Саммаа. И рече: и сего не избра Господь.
10 ௧0 இப்படி ஈசாய் தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: யெகோவா இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;
И приведе Иессей седмь сынов своих пред Самуила. И рече Самуил ко Иессею: не избра Господь от сих.
11 ௧௧ உன்னுடைய பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லோருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயைப் பார்த்து: ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; அவன் இங்கே வரும்வரை நான் சாப்பிடாமல் இருப்பேன் என்றான்.
И рече Самуил ко Иессею: не достало ли уже детей? И рече Иессей: еще есть един мал, и сей пасет на пажити. И рече Самуил ко Иессею: посли и приведи его, яко не возляжем, дондеже приидет той семо.
12 ௧௨ ஆள் அனுப்பி அவனை வரவழைத்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல அழகுள்ளவனாக இருந்தான்; அப்பொழுது யெகோவா இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்செய் என்றார்.
И посла, и введе его: и той чермен, добрыма очима, и благ взором Господеви. И рече Господь к Самуилу: востани и помажи Давида, яко сей благ есть.
13 ௧௩ அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர்கள் நடுவிலே அபிஷேகம்செய்தான்; அந்த நாள் முதற்கொண்டு, யெகோவாவுடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.
И прия Самуил рог со елеем и помаза его посреде братии его. И ношашеся Дух Господень над Давидом от того дне и потом. И воста Самуил и отиде во Армафем.
14 ௧௪ யெகோவாவுடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு தீய ஆவி அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.
И Дух Господень отступи от Саула, и давляше его дух лукавый от Господа.
15 ௧௫ அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்கள் அவனை பார்த்து: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு தீய ஆவி உம்மை அலைக்கழிக்கிறதே.
И реша отроцы Сауловы к нему: се, ныне дух лукавый от Господа давит тя:
16 ௧௬ சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட தீய ஆவி உம்மேல் இறங்கும்போது, அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சுகமுண்டாகும் என்றார்கள்.
да рекут раби твои ныне пред тобою, и взыщут господину нашему мужа знающа пети в гусли: и внегда будет дух лукавый на тебе, и тогда да поет в гусли своя, и благо ти будет, и упокоит тя.
17 ௧௭ சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: நன்றாக வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
И рече Саул ко отроком своим: посмотрите ми мужа добре поюща и введите его ко мне.
18 ௧௮ அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பதிலாக: இதோ, பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை பார்த்திருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பலசாலி, யுத்தவீரன், பேச்சு திறமை உள்ளவன், அழகானவன்; யெகோவா அவனோடு இருக்கிறார் என்றான்.
И отвеща един от отрок его и рече: се, видех сына Иессеова из Вифлеема, и той весть пение, и муж разумен, и борец, и мудр в словеси, и муж благ видом, и Господь с ним.
19 ௧௯ அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் மகனான தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
И посла Саул вестники ко Иессею, глаголя: отпусти ко мне Давида сына твоего, иже у стада твоего.
20 ௨0 அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் மகனான தாவீதின் மூலமாக சவுலுக்கு அனுப்பினான்.
И взя Иессей бремя хлебов и мех вина и козля от коз едино, и посла к Саулу рукою Давида сына своего.
21 ௨௧ அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் நேசித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.
И вниде Давид к Саулу, и предстояше пред ним, и возлюби его зело Саул, и бысть ему носяй оружие его.
22 ௨௨ சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என்னுடைய கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான்.
И посла Саул ко Иессею, глаголя: да предстоит Давид предо мною, яко обрете благодать пред очима моима.
23 ௨௩ அப்படியே தேவனால் விடப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன்னுடைய கையினால் வாசிப்பான்; அதினாலே தீய ஆவி சவுலை விட்டு நீங்கி, ஆறுதலடைந்து, சுகமடைவான்.
И бысть внегда быти духу лукаву на Сауле, и взимаше Давид гусли и играше рукою своею, и отдыхаше Саул, и благо ему бяше, и отступаше от него дух лукавый.

< 1 சாமுவேல் 16 >