< 1 பேதுரு 4 >
1 ௧ இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
Кад, дакле, Христос пострада за нас телом, и ви се том мисли наоружајте: јер који пострада телом, престаје од греха,
2 ௨ ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
Да остало време живота у телу не живи више жељама човечијим, него вољи Божијој.
3 ௩ கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
Јер је доста што смо протекло време живота провели по вољи незнабожачкој, живећи у нечистотама, у сластима, у пијењу и богомрским незнабоштвима.
4 ௪ அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
Зато се чуде што ви не трчите с њима у то исто неуредно живљење, и хуле на вас.
5 ௫ உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
Они ће дати одговор Ономе који је готов да суди живима и мртвима.
6 ௬ இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
Зато се и мртвима проповеди јеванђеље, да приме суд по човеку телом, а по Богу да живе духом.
7 ௭ எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
А свему се крај приближи. Будите дакле мудри и трезни у молитвама.
8 ௮ எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
А пре свега имајте непрестану љубав међу собом; јер љубав покрива мноштво греха,
9 ௯ முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
Будите гостољубиви међу собом без мрмљања;
10 ௧0 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
И служите се међу собом, сваки даром који је примио, као добри пристави различне благодати Божије.
11 ௧௧ ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
Ако ко говори, нека говори као речи Божије; ако ко служи нека служи као по моћи коју Бог даје: да се у свачему слави Бог кроз Исуса Христа, коме је слава и држава ва век века. Амин. (aiōn )
12 ௧௨ பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
Љубазни! Не чудите се врућини која вам се догађа за кушање ваше, као да вам се шта ново догађа;
13 ௧௩ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
Него се радујте што страдате с Христом, да бисте, и кад се јави слава Његова, имали радост и весеље.
14 ௧௪ நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
Ако бивате укорени за име Христово, благо вама! Јер Дух славе и Бога почива на вама: они дакле хуле на Њ, а ви Га прослављате.
15 ௧௫ ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
Само да не пострада који од вас као крвник, или као лупеж, или као злочинац, или као онај који се меша у туђе послове;
16 ௧௬ ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
А ако ли као хришћанин, нека се не стиди, већ нека слави Бога у овом догађају.
17 ௧௭ நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
Јер је време да се почне суд од куће Божије; ако ли се најпре од вас почне, какав ће бити последак онима што се противе Божијем јеванђељу?
18 ௧௮ “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
И кад се праведник једва спасе, безбожник и грешник где ће се јавити?
19 ௧௯ ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
Зато и који страдају по вољи Божијој нека Му као верном Творцу предаду душе своје у добрим делима.