< 1 பேதுரு 3 >
1 ௧ அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
ဟေ ယောၐိတး, ယူယမပိ နိဇသွာမိနာံ ဝၑျာ ဘဝတ တထာ သတိ ယဒိ ကေစိဒ် ဝါကျေ ဝိၑွာသိနော န သန္တိ တရှိ
2 ௨ போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
တေ ဝိနာဝါကျံ ယောၐိတာမ် အာစာရေဏာရ္ထတသ္တေၐာံ ပြတျက္ၐေဏ ယုၐ္မာကံ သဘယသတီတွာစာရေဏာကြၐ္ဋုံ ၑက္ၐျန္တေ၊
3 ௩ முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல்,
အပရံ ကေၑရစနယာ သွရ္ဏာလင်္ကာရဓာရဏောန ပရိစ္ဆဒပရိဓာနေန ဝါ ယုၐ္မာကံ ဝါဟျဘူၐာ န ဘဝတု,
4 ௪ அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது.
ကိန္တွီၑွရသျ သာက္ၐာဒ် ဗဟုမူလျက္ၐမာၑာန္တိဘာဝါက္ၐယရတ္နေန ယုက္တော ဂုပ္တ အာန္တရိကမာနဝ ဧဝ၊
5 ௫ இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
ယတး ပူရွွကာလေ ယား ပဝိတြသ္တြိယ ဤၑွရေ ပြတျာၑာမကုရွွန် တာ အပိ တာဒၖၑီမေဝ ဘူၐာံ ဓာရယန္တျော နိဇသွာမိနာံ ဝၑျာ အဘဝန်၊
6 ௬ அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.
တထဲဝ သာရာ ဣဗြာဟီမော ဝၑျာ သတီ တံ ပတိမာချာတဝတီ ယူယဉ္စ ယဒိ သဒါစာရိဏျော ဘဝထ ဝျာကုလတယာ စ ဘီတာ န ဘဝထ တရှိ တသျား ကနျာ အာဓွေ၊
7 ௭ அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்.
ဟေ ပုရုၐား, ယူယံ ဇ္ဉာနတော ဒုရ္ဗ္ဗလတရဘာဇနဲရိဝ ယောၐိဒ္ဘိး သဟဝါသံ ကုရုတ, ဧကသျ ဇီဝနဝရသျ သဟဘာဂိနီဘျတာဘျး သမာဒရံ ဝိတရတ စ န စေဒ် ယုၐ္မာကံ ပြာရ္ထနာနာံ ဗာဓာ ဇနိၐျတေ၊
8 ௮ மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து,
ဝိၑေၐတော ယူယံ သရွွ ဧကမနသး ပရဒုးခဲ ရ္ဒုးခိတာ ဘြာတၖပြမိဏး ကၖပါဝန္တး ပြီတိဘာဝါၑ္စ ဘဝတ၊
9 ௯ தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள்.
အနိၐ္ဋသျ ပရိၑောဓေနာနိၐ္ဋံ နိန္ဒာယာ ဝါ ပရိၑောဓေန နိန္ဒာံ န ကုရွွန္တ အာၑိၐံ ဒတ္တ ယတော ယူယမ် အာၑိရဓိကာရိဏော ဘဝိတုမာဟူတာ ဣတိ ဇာနီထ၊
10 ௧0 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
အပရဉ္စ, ဇီဝနေ ပြီယမာဏော ယး သုဒိနာနိ ဒိဒၖက္ၐတေ၊ ပါပါတ် ဇိဟွာံ မၖၐာဝါကျာတ် သွာဓရော် သ နိဝရ္တ္တယေတ်၊
11 ௧௧ தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும்.
သ တျဇေဒ် ဒုၐ္ဋတာမာရ္ဂံ သတ္ကြိယာဉ္စ သမာစရေတ်၊ မၖဂယာဏၑ္စ ၑာန္တိံ သ နိတျမေဝါနုဓာဝတု၊
12 ௧௨ கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”
လောစနေ ပရမေၑသျောန္မီလိတေ ဓာရ္မ္မိကာန် ပြတိ၊ ပြာရ္ထနာယား ကၖတေ တေၐား တစ္ဆြောတြေ သုဂမေ သဒါ၊ ကြောဓာသျဉ္စ ပရေၑသျ ကဒါစာရိၐု ဝရ္တ္တတေ၊
13 ௧௩ நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?
အပရံ ယဒိ ယူယမ် ဥတ္တမသျာနုဂါမိနော ဘဝထ တရှိ ကော ယုၐ္မာန် ဟိံသိၐျတေ?
14 ௧௪ நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;
ယဒိ စ ဓရ္မ္မာရ္ထံ က္လိၑျဓွံ တရှိ ဓနျာ ဘဝိၐျထ၊ တေၐာမ် အာၑင်္ကယာ ယူယံ န ဗိဘီတ န ဝိင်္က္တ ဝါ၊
15 ௧௫ கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள்.
မနောဘိး ကိန္တု မနျဓွံ ပဝိတြံ ပြဘုမီၑွရံ၊ အပရဉ္စ ယုၐ္မာကမ် အာန္တရိကပြတျာၑာယာသ္တတ္တွံ ယး ကၑ္စိတ် ပၖစ္ဆတိ တသ္မဲ ၑာန္တိဘီတိဘျာမ် ဥတ္တရံ ဒါတုံ သဒါ သုသဇ္ဇာ ဘဝတ၊
16 ௧௬ கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள்.
ယေ စ ခြီၐ္ဋဓရ္မ္မေ ယုၐ္မာကံ သဒါစာရံ ဒူၐယန္တိ တေ ဒုၐ္ကရ္မ္မကာရိဏာမိဝ ယုၐ္မာကမ် အပဝါဒေန ယတ် လဇ္ဇိတာ ဘဝေယုသ္တဒရ္ထံ ယုၐ္မာကမ် ဥတ္တမး သံဝေဒေါ ဘဝတု၊
17 ௧௭ தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும்.
ဤၑွရသျာဘိမတာဒ် ယဒိ ယုၐ္မာဘိး က္လေၑး သောဎဝျသ္တရှိ သဒါစာရိဘိး က္လေၑသဟနံ ဝရံ န စ ကဒါစာရိဘိး၊
18 ௧௮ ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
ယသ္မာဒ် ဤၑွရသျ သန္နိဓိမ် အသ္မာန် အာနေတုမ် အဓာရ္မ္မိကာဏာံ ဝိနိမယေန ဓာရ္မ္မိကး ခြီၐ္ဋော 'ပျေကကၖတွး ပါပါနာံ ဒဏ္ဍံ ဘုက္တဝါန်, သ စ ၑရီရသမ္ဗန္ဓေ မာရိတး ကိန္တွာတ္မနး သမ္ဗန္ဓေ ပုန ရ္ဇီဝိတော 'ဘဝတ်၊
19 ௧௯ அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார்.
တတ္သမ္ဗန္ဓေ စ သ ယာတြာံ ဝိဓာယ ကာရာဗဒ္ဓါနာမ် အာတ္မနာံ သမီပေ ဝါကျံ ဃောၐိတဝါန်၊
20 ௨0 அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள்.
ပုရာ နောဟသျ သမယေ ယာဝတ် ပေါတော နိရမီယတ တာဝဒ် ဤၑွရသျ ဒီရ္ဃသဟိၐ္ဏုတာ ယဒါ ဝျလမ္ဗတ တဒါ တေ'နာဇ္ဉာဂြာဟိဏော'ဘဝန်၊ တေန ပေါတောနာလ္ပေ'ရ္ထာဒ် အၐ္ဋာဝေဝ ပြာဏိနသ္တောယမ် ဥတ္တီရ္ဏား၊
21 ௨௧ அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
တန္နိဒရ္ၑနဉ္စာဝဂါဟနံ (အရ္ထတး ၑာရီရိကမလိနတာယာ ယသ္တျာဂး သ နဟိ ကိန္တွီၑွရာယောတ္တမသံဝေဒသျ ယာ ပြတဇ္ဉာ သဲဝ) ယီၑုခြီၐ္ဋသျ ပုနရုတ္ထာနေနေဒါနီမ် အသ္မာန် ဥတ္တာရယတိ,
22 ௨௨ அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
ယတး သ သွရ္ဂံ ဂတွေၑွရသျ ဒက္ၐိဏေ ဝိဒျတေ သွရ္ဂီယဒူတား ၑာသကာ ဗလာနိ စ တသျ ဝၑီဘူတာ အဘဝန်၊