< 1 பேதுரு 2 >

1 இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,
Seepärast pange maha kogu kurjus, kogu kavalus, teesklemine, kadedus ja tagarääkimine!
2 எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
Nagu vastsündinud lapsed janunege puhast vaimulikku piima, et te selle varal kasvaksite ja jõuaksite päästmisele,
3 நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
nüüd kui te olete maitsnud, et Issanda on hea.
4 மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
Kui tulete tema, elava kivi juurde, kes on inimeste poolt välja praagitud, ent Jumala silmis valitud ja väärtuslik,
5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
siis ehitatakse teidki üles kui elavad kivid vaimulikuks hooneks, pühaks preesterkonnaks, tooma vaimulikke ohvreid, mis on Jumalale vastuvõetavad Jeesuse Kristuse kaudu.
6 அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
Seepärast seisab Pühakirjas: „Vaata, ma panen Siionisse kivi, valitud ja väärtusliku nurgakivi, ja kes temasse usub, ei jää häbisse.“
7 ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;”
Teile, kes usute, on ta kallihinnaline, uskmatuile aga – „Kivi, mille ehitajad pidasid kõlbmatuks, on saanud nurgakiviks, “
8 அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
ning „Kivi, mis paneb inimesed komistama ja kalju, mis paneb nad kukkuma“. Uskmatud komistavad, sest nad ei kuuletu sõnumile, nagu oligi neile seatud.
9 நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
Teie aga olete valitud sugu, kuninglik preesterkond, püha rahvas, Jumala eriline omand, et te kuulutaksite tema võrratuid tegusid, kes teid on kutsunud pimedusest oma imelisse valgusse.
10 ௧0 முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.
Teid, kes te kunagi polnud rahvas, nüüd olete aga Jumala rahvas. Kes ei olnud armu saanud, aga nüüd olete armu saanud!
11 ௧௧ பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,
Armsad, ma anun teid kui võõraid ja läbirändajaid, hoiduge lihalikest himudest, mis sõdivad hinge vastu.
12 ௧௨ யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
Käituge hästi paganate keskel, et kuigi nad teid kuritegudes süüdistavad, võiksid nad näha teie häid tegusid ja kiita Jumalat tema tulemise päeval.
13 ௧௩ நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.
Alistuge Issanda pärast kogu inimlikule korrale, olgu kuningale kui kõrgeimale võimukandjale,
14 ௧௪ மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
olgu asevalitsejale, kui tema poolt saadetule, et kurjategijaid karistada ja kiita häid kodanikke.
15 ௧௫ நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
Selline on Jumala tahtmine, et te head tehes vaigistaksite rumalate inimeste teadmatuse.
16 ௧௬ சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள்.
Elage kui vabad, ent ärge kasutage oma vabadust kurjuse kattevarjuks, vaid olge kui Jumala sulased.
17 ௧௭ எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
Austage kõiki, armastage vendi ja õdesid, kartke Jumalat, austage kuningat!
18 ௧௮ வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
Orjad, alistuge täie aukartusega peremeestele, mitte ainult headele ja leebetele, vaid ka ebaõiglastele.
19 ௧௯ ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.
See on ju arm, kui keegi südametunnistuse pärast Jumala ees talub valu ülekohtuselt kannatades.
20 ௨0 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும்.
Mis au sellest on, kui teid pekstakse patu pärast? Aga kui te head tehes kannatate, siis olete Jumala silmis leidnud armu.
21 ௨௧ இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.
Selleks te olete kutsutud, sest ka Kristus kannatas teie eest, jättes teile eeskuju, et käiksite tema jälgedes.
22 ௨௨ அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
„Tema ei teinud pattu ega leitud pettust tema suust“.
23 ௨௩ அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
Ta ei sõimanud vastu, kui teda sõimati; kui ta kannatas, ei ähvardanud ta kedagi, vaid usaldas end sellele, kes mõistab kohut õiglaselt.
24 ௨௪ நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
Ta kandis ise meie patud üles ristipuule, et meie pattudele ära sureksime ja elaksime tema õigusele. Tema vermete tõttu te olete saanud terveks.
25 ௨௫ சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.
Te olite ju otsekui lambad ekslemas, nüüd aga olete pöördunud oma hinge Karjase ja Hoidja poole.

< 1 பேதுரு 2 >