< 1 இராஜாக்கள் 20 >

1 சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன்னுடைய படையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றுகையிட்டு அதின்மேல் யுத்தம்செய்தான்; அவனோடு முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.
Tedy Benadad, król Syryjski, zebrał wszystko wojsko swoje, mając z sobą trzydzieści i dwóch królów, przytem jezdne i wozy; a przyciągnąwszy obległ Samaryję i dobywał jej.
2 அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் தூதுவர்களை அனுப்பி:
I wyprawił posły do Achaba, króla Izraelskiego, do onego miasta;
3 உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய பெண்களும் உன்னுடைய மகன்களுக்குள் சிறந்தவர்களாக இருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.
I rzekł mu: Tak mówi Benadad: Srebro twoje i złoto twoje mojeć jest; także żony twoje i synowie twoi najcudniejsi moi są.
4 இஸ்ரவேலின் ராஜா அதற்கு மறுமொழியாக: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.
I odpowiedział król Izraelski a rzekł: Według słowa twego królu, panie mój, twojem ja, i wszystko, co mam.
5 அந்த தூதுவர்கள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய வெள்ளியையும், பொன்னையும், பெண்களையும், மகன்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.
A wróciwszy się posłowie do niego, rzekli: Tak powiedział Benadad, mówiąc: Posłałem do ciebie, abyć rzeczono: Srebro twoje, i złoto twoje, i żony twoje, i syny twoje dasz mi.
6 ஆனாலும் நாளை இந்த நேரத்தில் என்னுடைய வேலைக்காரர்களை உன்னிடம் அனுப்புவேன்; அவர்கள் உன்னுடைய வீட்டையும் உன்னுடைய வேலைக்காரர்களின் வீடுகளையும் சோதித்து, உன்னுடைய கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.
Ale wiedz, że jutro o tym czasie poślę sługi moje do ciebie, którzy wyszperają dom twój, i domy sług twoich, i wszystko, w czem się kochasz, w ręce swe wezmą, i rozbiorą.
7 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பர்களையெல்லாம் அழைத்து: இவன் ஆபத்தைத் தேடுகிற விதத்தைக் கவனித்துப் பாருங்கள்; என்னுடைய பெண்களையும், என்னுடைய மகன்களையும், என்னுடைய வெள்ளியையும், என்னுடைய பொன்னையும் கேட்க, இவன் என்னிடம் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான்.
A tak wezwał król Izraelski wszystkich starszych ziemi onej, i rzekł im: Uważcież proszę, a obaczcie, żeć ten złego szuka; albowiem posłał do mnie po żony moje, i po syny moje, i po srebro moje, i po złoto moje, a nie odmówiłem mu.
8 அப்பொழுது எல்லா மூப்பர்களும் எல்லா மக்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள்.
I rzekli do niego oni wszyscy starsi, i wszystek lud: Nie słuchaj ani przyzwalaj.
9 அதினால் அவன் பெனாதாத்தின் தூதுவர்களை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல்முறை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; தூதுவர்கள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.
Przetoż odpowiedział posłom Benadadowym: Powiedzcie królowi, panu memu: wszystko, o coś posłał do sługi twego przedtem, uczynię: ale tej rzeczy uczynić nie mogę. A tak posłowie odeszli, i odnieśli mu odpowiedź.
10 ௧0 அப்பொழுது பெனாதாத் அவனிடம் ஆள் அனுப்பி: எனக்குப் பின்னே செல்லுகிற மக்கள் எல்லோரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாக இருந்தால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.
Znowu posłał do niego Benadad i rzekł: Niech mi to uczynią bogowie, i to niech przyczynią, jeźli się dostanie prochu Samaryi po garści wszystkiemu ludowi, który za mną idzie.
11 ௧௧ அதற்கு இஸ்ரவேலின் ராஜா மறுமொழியாக; ஆயுதம் அணிந்திருக்கிறவன், ஆயுதம் பிடுங்கிப் போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டக்கூடாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்.
I odpowiedział król Izraelski, a rzekł: Powiedzcie mu: Niech się nie chlubi zbrojny, jako ten, który złożył zbroję.
12 ௧௨ பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய ஆட்களை நோக்கி: யுத்தம் செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் யுத்தம்செய்ய ஆயத்தம்செய்தார்கள்.
A gdy Benadad usłyszał to słowo, (a on w tenczas z królmi pił w namiotach, ) rzekł do sług swych: Ruszcie się. I ruszyli się ku miastu.
13 ௧௩ அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் வந்து: அந்த ஏராளமான மக்கள்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே யெகோவா என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
A oto, niektóry prorok przyszedł do Achaba, króla Izraelskiego, i rzekł: Tak powiada Pan: Izażeś nie wiedział tego wszystkiego wielkiego mnóstwa? Oto Ja je dam w rękę twoję dzisiaj, abyś wiedział, żem Ja Pan.
14 ௧௪ யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களைக்கொண்டு என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.
Tedy rzekł Achab: Przez kogoż? A on odpowiedział: Tak mówi Pan: przez sługi książąt powiatowych. I rzekł: Którz pocznie bitwę? Tedy mu on odpowiedział: Ty.
15 ௧௫ அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களை எண்ணிப்பார்த்தான், அவர்கள் 232 பேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் மக்களாகிய எல்லா மக்களின் எண்ணிக்கையும் பார்த்து 7,000 பேர் என்று கண்டான்.
Obliczył tedy sługi książąt powiatowych, których było dwieście trzydzieści i dwa; a po nich policzył wszystek lud, wszystkich synów Izraelskich siedm tysięcy.
16 ௧௬ அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த 32 ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடிவெறி கொண்டிருந்தார்கள்.
I wyszli o południu. A Benadad pił, i upił się w namiotach, sam i trzydzieści i dwóch królów, pomocników jego.
17 ௧௭ மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்கள் முதலில் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனிதர்கள்: சமாரியாவிலிருந்து மனிதர்கள் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.
A tak wyszli słudzy książąt powiatowych naprzód. Tedy posłał Benadad, (gdy mu powiedziano, mówiąc: Mężowie wyszli z Samaryi, )
18 ௧௮ அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள் என்றான்.
I rzekł: Chociażby o pokój szli prosić, pojmajcie je żywo; chociażby też ku bitwie wyszli, żywo je pojmajcie.
19 ௧௯ மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது,
A gdy oni słudzy książąt powiatowych wyszli z miasta, i inne wojsko za nimi,
20 ௨0 அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டினார்கள்; சீரியர்கள் பயந்தோடிப் போனார்கள்; இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின்மேல் ஏறிச் சில குதிரை வீரர்களோடு தப்பியோடிப்போனான்.
Poraził każdy męża swego, tak, że uciekli Syryjczycy, i gonił je Izrael; uciekł też Benadad, król Syryjski, na koniu i z jezdnymi.
21 ௨௧ இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும், இரதங்களையும் தாக்கி, சீரியர்களில் பெரிய அழிவு உண்டாக வெட்டினான்.
Potem wyciągnął król Izraelski, i pobił konie i wozy, a poraził Syryjczyka porażką wielką.
22 ௨௨ பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யவேண்டியது என்னவென்று கவனித்துப்பாரும்; அடுத்த வருடத்திலே சீரியாவின் ராஜா உமக்கு எதிராக வருவான் என்றான்.
Znowu przyszedł prorok do króla Izraelskiego, i rzekł mu: Idź, zmacniaj się, a wiedz i bacz, co masz czynić; albowiem po roku król Syryjski wyciągnie przeciwko tobie.
23 ௨௩ சீரியாவின் ராஜாவுடைய வேலைக்காரர்கள் அவனைப் பார்த்து: அவர்களுடைய தெய்வங்கள் மலைத்தெய்வங்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடு சமபூமியிலே யுத்தம்செய்தால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.
Tedy słudzy króla Syryjskiego rzekli do niego: Bogowie ich są bogowie górni, przetoż nas przemogli; a wszakże zwiedźmy z nimi bitwę w polu a ujrzysz, jeźli ich nie przemożemy.
24 ௨௪ அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்களுடைய இடத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாக வீரர்களை ஏற்படுத்தி;
Przetoż tak uczyń: Odpraw królów, każdego z miejsca swego, a postanów hetmanów miasto nich.
25 ௨௫ நீர் சாகக்கொடுத்த வீரர்களுக்குச் சரியாக வீரர்களையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாகக் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாக இரதங்களையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்செய்து, நிச்சயமாக அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
A ty nalicz sobie wojska z swoich, jako było wojsko onych, którzy polegli, a koni jako one konie, a wozów, jako one wozy, i stoczymy bitwę z nimi w polu, a ujrzysz, jeźli ich nie przemożemy. I usłuchał głosu ich, a uczynił tak.
26 ௨௬ அடுத்த வருடத்திலே பெனாதாத் சீரியர்களை எண்ணிப் பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய ஆப்பெக்குக்கு வந்தான்.
A gdy wyszedł rok, obliczył Benadad Syryjczyki, a ciągnął ku Afeku na wojnę przeciw Izraelitom.
27 ௨௭ இஸ்ரவேல் மக்களும் எண்ணிக்கை பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டு மந்தையைப்போல முகாமிட்டார்கள்; தேசம் சீரியர்களால் நிறைந்திருந்தது.
Synowie Izraelscy także są obliczeni, a nabrawszy z sobą żywności, ciągnęli przeciwko nim. I położyli się obozem synowie Izraelscy przeciwko nim, jakoby dwa małe stadka kóz; a Syryjczycy napełnili ziemię.
28 ௨௮ அப்பொழுது தேவனுடைய மனிதன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவா பள்ளத்தாக்குகளின் தேவனாக இல்லாமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர்கள் சொல்லியிருக்கிறபடியால், நான் இந்த ஏராளமான மக்கள் கூட்டத்தையெல்லாம் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே யெகோவா என்று நீங்கள் அறிவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Tedy przyszedł mąż Boży, i mówił do króla Izraelskiego, a rzekł: Tak mówi Pan: Przeto iż mówili Syryjczycy: Bogiem gór jest Pan, a nie jest Bogiem równim, podam to wszystko mnóstwo wielkie w ręce twoje, abyście wiedzeli, żem Ja Pan.
29 ௨௯ ஏழுநாட்கள்வரை அவர்கள் நேருக்கு நேராக முகாமிட்டிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் துவங்கி, இஸ்ரவேல் மக்கள் ஒரே நாளிலே சீரியர்களில் ஒரு 1,00,000 காலாட்களைக் கொன்றுபோட்டார்கள்.
A tak oni leżeli obozem przeciwko nim przez siedm dni. I stało się dnia siódmego, że stoczyli bitwę, i porazili synowie Izraelscy Syryjczyków sto tysięcy pieszych jednegoż dnia.
30 ௩0 மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாக இருந்த 27,000 பேரின்மேல் மதில் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையில் பதுங்கினான்.
A ostatek uciekli do Afeku miasta, i upadł mur na dwadzieścia i siedm tysięcy mężów, co byli pozostali. A Benadad uciekłszy przyszedł do miasta, i skrył się do najskrytszej komory.
31 ௩௧ அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் சணலாடைகளை எங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளை எங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடு வைப்பார் என்று சொல்லி,
Ale mu rzekli słudzy jego: Słychaliśmy za pewne, że królowie domu Izraelskiego są królowie miłosierni. Niech włożymy proszę wory na biodra nasze, i powrozy na głowy nasze, a wynijdziemy do króla Izraelskiego, snać żywo zostwi duszę twoję.
32 ௩௨ சணலாடைகளைத் தங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளைத் தங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் வந்து: என்னை உயிரோடு வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்செய்கிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடு இருக்கிறானா, அவன் என்னுடைய சகோதரன் என்றான்.
Tedy opasali wormi biodra swe, a włożyli powrozy na głowy swoje i przyszli do króla Izraelskiego, i rzekli: Benadad, sługa twój, mówi: Niech żyje proszę dusza moja! A on rzekł: a żywże jeszcze? Brat to mój.
33 ௩௩ அந்த மனிதர்கள் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின்சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடம் வந்தபோது, அவனைத் தன்னுடைய இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.
A oni mężowie wziąwszy to za dobry znak, i prędko uchwyciwszy to słowo od niego, rzekli: Bratci twój Benadad. I rzekł: Idźcież, przywiedźcie go. Przetoż wyszedł do niego Benadad, i kazał mu wsiąść na wóz.
34 ௩௪ அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என்னுடைய தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என்னுடைய தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைசெய்து அவனை அனுப்பிவிட்டான்.
I rzekł do niego Benadad: miasta, które wziął ojciec mój ojcu twemu, powrócę, a ty ulice sobie poczynisz w Damaszku, jako poczynił ojciec mój w Samaryi. I odpowiedzał: Ja według przymierza puszczę cię wolno. A tak z nim uczynił przmierze i puścił go wolno.
35 ௩௫ அப்பொழுது தீர்க்கதரிசிகளின் மகன்களில் ஒருவன் யெகோவாவுடைய வார்த்தையின்படி தன்னுடைய நண்பனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனிதன் அவனைப் பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.
Tedy niektóry mąż z synów prorockich rzekł do bliźniego swego z rozkazania Pańskiego: Uderz mię proszę; ale go nie chciał on mąż uderzyć.
36 ௩௬ அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல் போனதால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனைவிட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது.
I rzekł mu: Przeto iżeś nie usłuchał głosu Pańskiego, oto skoro odejdziesz odemnie, zabije cię lew. A gdy odszedł od niego, znalazł go lew, i zabił go.
37 ௩௭ அதின்பின்பு அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனிதன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
Potem znalazł drugiego męża, i rzekł mu: Uderz mię proszę; który mąż tak go uderzył, że go ranił.
38 ௩௮ அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன்னுடைய முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, மாறுவேடமிட்டு வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.
Szedł tedy on prorok, a zabieżał królowi na drodze, i odmienił się, zasłoniwszy oczy swoje.
39 ௩௯ ராஜா அவ்வழியாக வருகிறபோது, இவன் ராஜாவைப் பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனிதனைப் பாதுகாப்பாக வைத்திரு; இவன் தப்பிப்போனால் உன்னுடைய உயிர் அவன் உயிருக்குச்சமமாக இருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான்.
A gdy król mijał, zawołał na króla, i rzekł; sługa twój wyszedł w pośrodek bitwy, a oto mąż przyszedłszy przywiódł do mnie męża, i rzekł: Strzeż tego męża; bo jeźlibyś go opuścił, dusza twoja będzie za duszę jego, albo talent srebra odważysz.
40 ௪0 ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் வேலையாக இருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.
Wtem gdy się sługa twój zabawił tem i owem, oto on zniknął. Tedy rzekł do niego król Izraelski: Taki jest sąd twój, sameś się osądził.
41 ௪௧ அப்பொழுது அவன் சீக்கிரமாகத் தன்னுடைய முகத்தின் மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.
A on zaraz odjął zasłonę od oczu swych, i poznał go król Izraelski, że był prorokiem.
42 ௪௨ அப்பொழுது இவன் அவனை நோக்கி: கொலைசெய்வதற்கு நான் நியமித்த மனிதனை உன்னுடைய கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டதால், உன்னுடைய உயிர் அவனுடைய உயிருக்கு ஈடாகவும், உன்னுடைய மக்கள் அவனுடைய மக்களுக்கு இணையாகவும் இருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Zatem rzekł do niego: Tak mówi Pan: Ponieważeś wypuścił z ręki swej męża godnego śmierci, dusza twoja będzie za duszę jego, i lud twój za lud jego.
43 ௪௩ அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்குப் போகப்புறப்பட்டு சமாரியாவுக்கு வந்தான்.
Przetoż odszedł król Izraelski do domu swego smutny i zagniewany, i przyszedł do Samaryi.

< 1 இராஜாக்கள் 20 >