< 1 இராஜாக்கள் 18 >

1 அநேகநாட்கள் சென்று, மூன்றாம் வருடமாகும்போது, யெகோவாவுடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
And the days are many, and the word of YHWH has been to Elijah in the third year, saying, “Go, appear to Ahab, and I give rain on the face of the ground”;
2 அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோ சமாரியாவிலே கொடியதாக இருந்தது.
and Elijah goes to appear to Ahab. And the famine is severe in Samaria,
3 ஆனபடியால் ஆகாப் அரண்மனைப் பொருப்பாளனாகிய ஒபதியாவை அழைத்தான்; ஒபதியா யெகோவாவுக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாக இருந்தான்.
and Ahab calls to Obadiah, who [is] over the house—and Obadiah has been fearing YHWH greatly,
4 யேசபேல் யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொல்லுகிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக மறைத்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.
and it comes to pass, in Jezebel’s cutting off the prophets of YHWH, that Obadiah takes one hundred prophets, and hides them, fifty men in a cave, and has sustained them with bread and water—
5 ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் எல்லா மிருகஜீவன்களையும் சாகவிடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடு காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் கிடைக்குமா என்று பார் என்றான்.
and Ahab says to Obadiah, “Go through the land, to all fountains of waters, and to all the brooks, perhaps we find hay, and keep alive horse and mule, and do not cut off any of the livestock.”
6 அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பிரித்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாகவும், ஒபதியா வேறொரு வழியாகவும் போனார்கள்.
And they apportion the land to themselves, to pass over into it; Ahab has gone in one way by himself, and Obadiah has gone in another way by himself;
7 ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிராக வந்தான்; அவன் எலியாவை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என்னுடைய எஜமானாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;
and Obadiah [is] in the way, and behold, Elijah [is there] to meet him; and he discerns him, and falls on his face and says, “Are you he—my lord Elijah?”
8 அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன்னுடைய எஜமானுக்குச் சொல் என்றான்.
And he says to him, “I [am]; go, say to your lord, Behold, Elijah.”
9 அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படி, நீர் உமது அடியானை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
And he says, “What have I sinned, that you are giving your servant into the hand of Ahab—to put me to death?
10 ௧0 உம்மைத் தேடும்படி என்னுடைய எஜமான் மனிதர்களை அனுப்பாத தேசமும் ராஜ்ஜியமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்ஜியத்திலும் அந்த தேசத்திலும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.
Your God YHWH lives, if there is a nation and kingdom to where my lord has not sent to seek [for] you; and they said, He is not, then he caused the kingdom and the nation to swear, that it does not find you;
11 ௧௧ இப்போதும் நீ போய், உன்னுடைய எஜமானுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
and now, you are saying, Go, say to your lord, Behold, Elijah;
12 ௧௨ நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை யெகோவாவுடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடம் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் பார்க்காவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயது முதல் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன்.
and it has been, I go from you, and the Spirit of YHWH lifts you up to where I do not know, and I have come to declare to Ahab, and he does not find you, and he has slain me; and your servant is fearing YHWH from my youth.
13 ௧௩ யேசபேல் யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் யெகோவாவுடைய தீர்க்கதரிசிகளில் நூறுபேரை ஒவ்வொரு குகையிலே ஐம்பது ஐம்பதுபேராக மறைத்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செயல் என்னுடைய எஜமானுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
Has it not been declared to my lord that which I have done in Jezebel’s slaying the prophets of YHWH, that I hide one hundred men of the prophets of YHWH, fifty by fifty in a cave, and sustained them with bread and water?
14 ௧௪ இப்போதும் என்னுடைய எஜமான் என்னைக் கொன்றுபோட, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.
And now you are saying, Go, say to my lord, Behold, Elijah—and he has slain me!”
15 ௧௫ அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் யெகோவாவுக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
And Elijah says, “YHWH of Hosts lives, before whom I have stood, surely I appear to him today.”
16 ௧௬ அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடன், ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
Obadiah goes to meet Ahab, and declares [it] to him, and Ahab goes to meet Elijah.
17 ௧௭ ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நீயல்லவா என்றான்.
[And it] comes to pass at Ahab’s seeing Elijah that Ahab says to him, “Are you he—the troubler of Israel?”
18 ௧௮ அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நான் அல்ல; யெகோவாவின் கட்டளைகளைவிட்டு பாகால்களைப் பின்பற்றியதால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவர்கள்.
And he says, “I have not troubled Israel, but you and the house of your father, in your forsaking the commands of YHWH, and you go after the Ba‘alim;
19 ௧௯ இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்புவிக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் 400 பேரையும் என்னிடம் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
and now, send, gather all Israel to me, to the Mount of Carmel, and the four hundred and fifty prophets of Ba‘al, and the four hundred prophets of Asherah who are eating at the table of Jezebel.”
20 ௨0 அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.
And Ahab sends among all the sons of Israel, and gathers the prophets to the Mount of Carmel;
21 ௨௧ அப்பொழுது எலியா எல்லா மக்களுக்கும் அருகில் வந்து: நீங்கள் எதுவரைக்கும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; யெகோவா தெய்வம் என்றால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வம் என்றால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், மக்கள் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
and Elijah comes near to all the people and says, “Until when are you leaping on the two branches? If YHWH [is] God, go after Him; and if Ba‘al, go after him”; and the people have not answered him a word.
22 ௨௨ அப்பொழுது எலியா மக்களை நோக்கி: யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் மீதியாக இருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ 450 பேர்.
And Elijah says to the people, “I have been left, by myself, a prophet of YHWH; and the prophets of Ba‘al [are] four hundred and fifty men;
23 ௨௩ அவர்கள் இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதை துண்டுத் துண்டாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கட்டும்; நான் மற்றக் காளையையும் அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.
and let them give two bullocks to us, and they choose one bullock for themselves, and cut it in pieces, and place [it] on the wood, and place no fire; and I prepare the other bullock, and have put [it] on the wood, and I do not place fire—
24 ௨௪ நீங்கள் உங்களுடைய தெய்வத்தின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியால் பதில் சொல்லும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு மக்களெல்லோரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.
and you have called in the name of your god, and I call in the Name of YHWH, and it has been, the god who answers by fire—He [is] the God.” And all the people answer and say, “The word [is] good.”
25 ௨௫ அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகராக இருப்பதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்செய்து, நெருப்புப்போடாமல் உங்கள் தெய்வத்தினுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
And Elijah says to the prophets of Ba‘al, “Choose one bullock for yourselves, and prepare [it] first, for you [are] the multitude, and call in the name of your god, and place no fire.”
26 ௨௬ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்செய்து: பாகாலே, எங்களுக்கு பதில் சொல்லும் என்று காலைதுவங்கி மத்தியானம்வரை பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் வரவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
And they take the bullock that [one] gave to them, and prepare [it], and call in the name of Ba‘al from the morning even until the noon, saying, “O Ba‘al, answer us!” And there is no voice, and there is none answering; and they leap on the altar that one had made.
27 ௨௭ மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான்.
And it comes to pass, at noon, that Elijah mocks at them and says, “Call with a loud voice, for he [is] a god, for he is meditating, or pursuing, or on a journey; it may be he is asleep, and awakes.”
28 ௨௮ அவர்கள் உரத்தசத்தமாகக் கூப்பிட்டு, தங்களுடைய வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியும்வரை கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
And they call with a loud voice, and cut themselves, according to their ordinance, with swords and with spears, until a flowing of blood [is] on them;
29 ௨௯ மத்தியானவேளை சென்றபின்பு, மாலைபலி செலுத்தும் நேரம்வரை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை, கவனிப்பவர்களும் இல்லை.
and it comes to pass, at the passing by of the noon, that they feign themselves prophets until the going up of the present, and there is no voice, and there is none answering, and there is none attending.
30 ௩0 அப்பொழுது எலியா எல்லா மக்களையும் நோக்கி: என் அருகில் வாருங்கள் என்றான்; எல்லா மக்களும் அவன் அருகில் வந்தபோது, தகர்க்கப்பட்ட யெகோவாவுடைய பலிபீடத்தை அவன் பழுதுபார்த்து:
And Elijah says to all the people, “Come near to me”; and all the people come near to him, and he repairs the altar of YHWH that is broken down;
31 ௩௧ உனக்கு இஸ்ரவேல் என்னும் பெயர் இருப்பதாக என்று சொல்லி, யெகோவாவுடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய மகன்களால் உண்டான கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
and Elijah takes twelve stones, according to the number of the tribes of the sons of Jacob, to whom the word of YHWH was, saying, “Israel is your name”;
32 ௩௨ அந்தக் கற்களால் யெகோவாவுடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடம் இருக்கும்படி ஒரு வாய்க்காலை உண்டாக்கி,
and he builds an altar with the stones, in the Name of YHWH, and makes a trench, as about the space of two measures of seed, around the altar.
33 ௩௩ விறகுகளை அடுக்கி, ஒரு காளையைத் துண்டு துண்டாக துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான்.
And he arranges the wood, and cuts the bullock in pieces, and places [it] on the wood, and says, “Fill four pitchers of water, and pour [them] on the burnt-offering, and on the wood”;
34 ௩௪ பிற்பாடு அவன்: நீங்கள் நான்கு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாவது முறையும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாவது முறையும் ஊற்றினார்கள்.
and he says, “Do [it] a second time”; and they do [it] a second time; and he says, “Do [it] a third time”; and they do [it] a third time;
35 ௩௫ அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
and the water goes around the altar, and he has also filled the trench with water.
36 ௩௬ மாலைபலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படிச்செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கச்செய்யும்.
And it comes to pass, at the going up of the [evening] present, that Elijah the prophet comes near and says, “YHWH, God of Abraham, Isaac, and Israel, let it be known today that You [are] God in Israel, and that I, Your servant, have done the whole of these things by Your word;
37 ௩௭ யெகோவாவே, நீர் தேவனாகிய யெகோவா என்றும், தேவரீர் தங்களுடைய இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த மக்கள் அறியும்படி, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
answer me, O YHWH, answer me, and this people [then] knows that You [are] YHWH God; and You have turned their heart backward.”
38 ௩௮ அப்பொழுது: யெகோவாவிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
And a fire falls [from] YHWH, and consumes the burnt-offering, and the wood, and the stones, and the dust, and it has licked up the water that [is] in the trench.
39 ௩௯ மக்களெல்லோரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: யெகோவாவே தெய்வம், யெகோவாவே தெய்வம் என்றார்கள்.
And all the people see, and fall on their faces, and say, “YHWH, He [is] the God! YHWH, He [is] the God!”
40 ௪0 அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடி அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
And Elijah says to them, “Catch the prophets of Ba‘al; do not let a man escape from them”; and they catch them, and Elijah brings them down to the Brook of Kishon, and slaughters them there.
41 ௪௧ பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
And Elijah says to Ahab, “Go up, eat and drink, because of the sound of the noise of the shower.”
42 ௪௨ ஆகாப் சாப்பிட்டு குடிக்கப்போனான்; பின்பு எலியா கர்மேல் மலையிலுள்ள சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன்னுடைய முகம் தன்னுடைய முழங்காலில் படும்படிக்குனிந்து,
And Ahab goes up to eat, and to drink, and Elijah has gone up to the top of Carmel, and he stretches himself out on the earth, and he places his face between his knees,
43 ௪௩ தன்னுடைய ஊழியக்காரனை நோக்கி: நீ போய் சமுத்திரத்தை நோக்கிப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுமுறை போய்ப் பார் என்றான்.
and says to his young man, “Now go up, look attentively [toward] the way of the sea”; and he goes up and looks attentively, and says, “There is nothing”; and he says, “Turn back,” seven times.
44 ௪௪ ஏழாவது முறை இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனிதனுடைய உள்ளங்கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடி இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.
And it comes to pass, at the seventh, that he says, “Behold, a little thickness as the palm of a man is coming up out of the sea.” And he says, “Go up, say to Ahab, Bind and go down, and the shower does not restrain you.”
45 ௪௫ அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் இருண்டு பெருமழை உண்டானது; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
And it comes to pass, in the meantime, that the heavens have become black—thick clouds and wind—and the shower is great; and Ahab rides, and goes to Jezreel,
46 ௪௬ யெகோவாவுடைய கை எலியாவின்மேல் இருந்ததால், அவன் தன்னுடைய அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வரும்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினான்.
and the hand of YHWH has been on Elijah, and he girds up his loins, and runs before Ahab, until your entering Jezreel.

< 1 இராஜாக்கள் 18 >