< 1 இராஜாக்கள் 17 >
1 ௧ கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என்னுடைய வார்த்தை இல்லாமல் இந்த வருடங்களிலே பனியும் மழையும் பெய்யாமல் இருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
Тада рече Ахаву Илија Тесвићанин, један од насељеника галадских: Тако да је жив Господ Бог Израиљев, пред којим стојим, ових година неће бити росе ни дажда докле ја не кажем.
2 ௨ பின்பு யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்:
Потом дође њему реч Господња говорећи:
3 ௩ நீ இந்த இடத்தைவிட்டுக் கிழக்குத்திசையை நோக்கிப் போய், யோர்தான் நதிக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் ஒளிந்துகொள்.
Иди одавде, и обрати се на исток, и сакриј се код потока Хората према Јордану.
4 ௪ அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவளிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
И из оног потока пиј, а гавранима сам заповедио да те хране онде.
5 ௫ அவன் போய், யெகோவாவுடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் தங்கியிருந்தான்.
И он отиде и учини по речи Господњој, и отишавши стани се код потока Хората, који је према Јордану.
6 ௬ காகங்கள் அவனுக்கு காலையில் அப்பமும் இறைச்சியும், மாலையில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
И онде му гаврани доношаху хлеба и меса јутром и вечером, а из потока пијаше.
7 ௭ தேசத்தில் மழை பெய்யாததால், சில நாட்களுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போனது.
Али после годину дана пресахну поток, јер не беше дажда у земљи.
8 ௮ அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்:
Тада дође њему реч Господња говорећи:
9 ௯ நீ எழுந்து, சீதோனைச்சேர்ந்த சாரிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
Устани, иди у Сарепту сидонску, и седи онде; ево заповедио сам онде жени удовици да те храни.
10 ௧0 அப்படியே அவன் எழுந்து, சாரிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் வாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
И уставши отиде у Сарепту; и кад дође на врата градска, гле, жена удовица купљаше онде дрва; и он је дозва и рече јој: Донеси ми мало воде у суду да се напијем.
11 ௧௧ கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன்னுடைய கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
И она пође да донесе; а он је викну и рече: Донеси ми и хлеба мало.
12 ௧௨ அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயையும் தவிர, என்னிடத்தில் ஒரு அப்பமும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என்னுடைய மகனும் சாப்பிட்டு, சாப்பிட ஒன்றுமில்லாமையால் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்த இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
А она рече: Тако да је жив Господ Бог твој, немам печеног хлеба до грст брашна у здели и мало уља у крчагу; и ето купим дрваца да отидем и зготовим себи и сину свом, да поједемо, па онда да умремо.
13 ௧௩ அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன்னுடைய வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அப்பத்தைச் செய்து என்னிடம் கொண்டுவா; பின்பு உனக்கும் உன்னுடைய மகனுக்கும் செய்யலாம்.
А Илија рече јој: Не бој се, иди, зготови како си рекла; али умеси прво мени један колачић од тога, и донеси ми, па после готови себи и сину свом.
14 ௧௪ யெகோவா தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்வரையும் பானையில் இருந்த மாவு தீர்ந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Јер овако вели Господ Бог Израиљев: Брашно се из зделе неће потрошити нити ће уља у крчагу нестати докле не пусти Господ дажда на земљу.
15 ௧௫ அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவளுடைய வீட்டாரும் அநேகநாட்கள் சாப்பிட்டார்கள்.
И она отиде и учини како рече Илија; и једе и она и он и дом њен годину дана;
16 ௧௬ யெகோவா எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மாவு தீர்ந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.
Брашно се из зделе не потроши нити уља у крчагу неста по речи Господњој, коју рече преко Илије.
17 ௧௭ இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த பெண்ணின் மகன் வியாதிப்பட்டுப் படுத்தான்; அவனுடைய உயிர்போகும்வரை அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.
А после тога разболе се син жени домаћици, и болест његова би врло тешка, тако да издахну.
18 ௧௮ அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனிதனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்யவும், என்னுடைய மகனைச் சாகச்செய்யவுமா என்னிடம் வந்தீர் என்றாள்.
И она рече Илији: Шта је теби до мене, човече Божји? Јеси ли дошао к мени да споменеш безакоње моје и да ми умориш сина?
19 ௧௯ அதற்கு அவன்: உன்னுடைய மகனை என்னிடத்தில் கொடு என்று சொல்லி, அவனை அவளுடைய மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன்னுடைய கட்டிலின்மேல் வைத்து:
А он јој рече: Дај ми сина свог. И узевши га из наручја њеног однесе га у горњу клет, где он сеђаше, и положи га на постељу своју.
20 ௨0 என்னுடைய தேவனாகிய யெகோவாவே, நான் தங்கியிருக்க இடம்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகச்செய்ததால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு;
Тада завапи ка Господу и рече: Господе Боже мој, зар си и ову удовицу код које сам гост тако уцвелио уморивши јој сина?
21 ௨௧ அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுமுறை குப்புறவிழுந்து: என்னுடைய தேவனாகிய யெகோவாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரச்செய்யும் என்று யெகோவா வை நோக்கி விண்ணப்பம் செய்தான்.
И пруживши се над дететом три пута завапи ка Господу говорећи: Господе Боже мој, нека се поврати у дете душа његова.
22 ௨௨ யெகோவா எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.
И Господ услиши глас Илијин, те се поврати у дете душа његова, и оживе.
23 ௨௩ அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவனுடைய தாயினிடம் கொடுத்து: பார் உன்னுடைய பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்று சொன்னான்.
А Илија узевши дете снесе га из горње клети у кућу, и даде га матери његовој, и рече Илија: Види, жив је твој син.
24 ௨௪ அப்பொழுது அந்தப் பெண் எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிருந்து வரும் யெகோவாவுடைய வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.
А жена рече Илији: Сада знам да си човек Божји и да је реч Господња у твојим устима истина.