< 1 இராஜாக்கள் 16 >
1 ௧ பாஷாவுக்கு எதிராகக் யெகோவாவுடைய வார்த்தை அனானியின் மகனாகிய யெகூவுக்கு உண்டானது, அவர்:
Chúa Hằng Hữu có lời khiển trách Ba-ê-sa, và lời này được phán qua Tiên tri Giê-hu, con Ha-na-ni:
2 ௨ நான் உன்னைத் குப்பையிலிருந்து உயர்த்தி, உன்னை என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கும்போது, நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேல் தங்களுடைய பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவம் செய்யச்செய்கிறபடியால்,
“Ta đã cất nhắc ngươi từ trong đất bụi, cho ngươi lãnh đạo dân tộc Ít-ra-ên. Ngược lại, ngươi theo gót Giê-rô-bô-am, lôi kéo người Ít-ra-ên của Ta phạm tội, chọc giận Ta,
3 ௩ இதோ, நான் பாஷாவுக்கு பின்பு வருபவர்களையும் அவனுடைய வீட்டாருக்கு பின்பு வருபவர்களையும் அழித்துப்போட்டு, உன்னுடைய வீட்டை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.
nên Ta sẽ tận diệt ngươi và cả gia đình ngươi. Nhà ngươi sẽ như nhà Giê-rô-bô-am, con Nê-bát;
4 ௪ பாஷாவின் சந்ததியிலே பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் சாப்பிடும் என்றார்.
ai chết trong thành sẽ bị chó ăn, ai chết ngoài đồng sẽ bị chim ăn.”
5 ௫ பாஷாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Các công việc khác của Ba-ê-sa và quyền lực vua đều được chép trong Sách Lịch Sử Các Vua Ít-ra-ên.
6 ௬ பாஷா இறந்து தன்னுடைய பிதாக்களோடு திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஏலா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Ba-ê-sa an nghỉ với các tổ tiên, được chôn trong thành Tia-xa. Ê-la, con trai vua, lên kế vị.
7 ௭ பாஷா தன்னுடைய கைகளின் செய்கையால் யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கி, அவருடைய பார்வைக்குச் செய்த எல்லாத் தீமையினால், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதால், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும், அவனுடைய வீட்டுக்கும் எதிராக அனானியின் மகனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் யெகோவாவுடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.
Như vậy, Chúa Hằng Hữu dùng Tiên tri Giê-hu, con Ha-na-ni, khiển trách Ba-ê-sa và gia đình vì các điều ác vua làm, chọc giận Chúa Hằng Hữu, giống như nhà Giê-rô-bô-am, dù chính tay vua đã tiêu diệt nhà ấy.
8 ௮ யூதாவின் ராஜாவான ஆசாவின் 26 ஆம் வருடத்திலே பாஷாவின் மகனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான்.
Vào năm thứ hai mươi sáu đời A-sa, Ê-la, con Ba-ê-sa, lên ngôi làm vua Ít-ra-ên xứ Giu-đa hai năm tại Tia-xa.
9 ௯ இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவனுடைய வேலைக்காரன் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் திர்சாவிலே அந்த இடத்தின் அரண்மனைப் பொறுப்பாளன் அர்சாவின் வீட்டிலே குடிவெறியில் இருக்கும்போது,
Trong số bầy tôi vua, có Xim-ri mưu phản. Một hôm, Ê-la đến nhà Ạt-sa, quản đốc hoàng cung tại Tia-xa uống rượu say sưa.
10 ௧0 சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 27 ஆம் வருடத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Xim-ri bước vào đánh Ê-la ngã xuống, giết chết, và cướp ngôi. Việc này xảy ra vào năm thứ hai mươi bảy đời A-sa, vua Giu-đa.
11 ௧௧ அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டார்களையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவனுடைய உறவினர்களையோ, நண்பர்களையோ, சுவரில் நீர்விடும் ஒரு நாயையோ, அவன் உயிரோடு வைக்கவில்லை.
Vừa lên ngôi, Xim-ri giết hết nhà Ba-ê-sa, không sót một người đàn ông, cùng những người họ hàng và quen biết với gia đình này.
12 ௧௨ அப்படியே பாஷாவும், அவனுடைய மகனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யவைத்ததுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினால்,
Như vậy, Xim-ri tiêu diệt nhà Ba-ê-sa, đúng như lời Chúa Hằng Hữu dùng Tiên tri Giê-hu phán trước.
13 ௧௩ யெகோவா தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.
Vì tội của Ba-ê-sa và của Ê-la, con vua, và vì họ lôi kéo Ít-ra-ên vào đường cúng thờ thần tượng, chọc giận Chúa Hằng Hữu, Đức Chúa Trời của Ít-ra-ên.
14 ௧௪ ஏலாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Các công việc khác của Ê-la đều được chép trong Sách Lịch Sử Các Vua Ít-ra-ên.
15 ௧௫ யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருடத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாட்கள் ராஜாவாக இருந்தான்; மக்கள் அப்பொழுது பெலிஸ்தர்களுக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராக முகாமிட்டிருந்தார்கள்.
Xim-ri lên ngôi làm vua Ít-ra-ên vào năm thứ hai mươi bảy đời A-sa, vua Giu-đa, và làm vua bảy ngày tại Tia-xa. Lúc ấy, quân Ít-ra-ên đang tấn công thành Ghi-bê-thôn của người Phi-li-tin.
16 ௧௬ சிம்ரி சதிசெய்து, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே முகாமிட்டிருந்த மக்கள் கேட்டபோது, இஸ்ரவேலர்களெல்லாம் அந்த நாளிலே முகாமிலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார்கள்.
Nghe tin Xim-ri phản loạn, ám sát vua, toàn thể quân sĩ trong trại hôm ấy tôn Ôm-ri, tướng chỉ huy quân đội, lên làm vua Ít-ra-ên.
17 ௧௭ அப்பொழுது உம்ரியும் அவனோடு இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றுகை போட்டார்கள்.
Ôm-ri bỏ Ghi-bê-thôn, kéo quân về vây Tia-xa.
18 ௧௮ பட்டணம் பிடிபட்டதை சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரண்மனைக்குள் நுழைந்து, தான் இருக்கிற ராஜ அரண்மனையைத் தீயிட்டுகொளுத்தி, அதிலே செத்தான்.
Khi Xim-ri thấy kinh thành bị chiếm, liền chạy vào thành, phóng hỏa đốt hoàng cung và chết theo trong đó.
19 ௧௯ அவன் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்ததால், அப்படி நடந்தது.
Xim-ri nhận lấy hậu quả vì làm điều ác trước mặt Chúa Hằng Hữu, theo gót Giê-rô-bô-am phạm tội và lôi kéo Ít-ra-ên phạm tội theo.
20 ௨0 சிம்ரியின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அவனுடைய சதியும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Các công việc khác của Xim-ri, việc phản loạn của vua đều được chép trong Sách Lịch Sử Các Vua Ít-ra-ên.
21 ௨௧ அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் இரண்டு வகுப்பாகப் பிரிந்து, பாதி மக்கள் கீனாத்தின் மகனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி மக்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள்.
Bấy giờ, dân chúng Ít-ra-ên chia làm hai nhóm. Phân nửa theo Ôm-ri, phân nửa theo Típ-ni, con Ghi-nát.
22 ௨௨ ஆனாலும் கீனாத்தின் மகனாகிய திப்னியைப் பின்பற்றின மக்களைவிட, உம்ரியைப் பின்பற்றின மக்கள் பலப்பட்டார்கள்; திப்னி இறந்துபோனான்; உம்ரி அரசாட்சி செய்தான்.
Phe Ôm-ri đánh bại phe Tip-ni. Vậy, Típ-ni chết và Ôm-ri lên làm vua.
23 ௨௩ யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருடத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்தான்; அவன் திர்சாவிலே ஆறு வருடங்கள் அரசாட்சி செய்து,
Ôm-ri bắt đầu làm vua vào năm thứ ba mươi mốt đời A-sa, vua Giu-đa. Ông làm vua mười hai năm, sáu năm đầu tại Tia-xa.
24 ௨௪ பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாக இருந்த சேமேருடைய பெயரின்படியே சமாரியா என்னும் பெயரை வைத்தான்.
Sau đó, Ôm-ri mua ngọn đồi của Sê-me với giá 68 ký bạc và xây trên ấy một thành, đặt tên là Sa-ma-ri, theo tên chủ đất.
25 ௨௫ உம்ரி யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட கேடாக நடந்து,
Nhưng Ôm-ri làm điều ác trước mặt Chúa Hằng Hữu, còn hơn những vua trước.
26 ௨௬ நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் எல்லா வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குத் தங்களுடைய வீணான விக்கிரகங்களாலே கோபம் ஏற்படுத்தும்படியாக இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவங்களிலும் நடந்தான்.
Vua theo gót Giê-rô-bô-am, con Nê-bát, phạm tội và lôi kéo Ít-ra-ên cùng phạm tội. Vua thờ hình tượng, chọc giận Chúa Hằng Hữu, Đức Chúa Trời của Ít-ra-ên.
27 ௨௭ உம்ரி செய்த அவனுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Các công việc khác của Ôm-ri và quyền lực của vua đều được chép trong Sách Lịch Sử Các Vua Ít-ra-ên.
28 ௨௮ உம்ரி இறந்து தன்னுடைய முன்னோர்களோடு, சமாரியாவிலே அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Ôm-ri an giấc với tổ tiên mình, được chôn tại Sa-ma-ri. Con vua là A-háp lên kế vị.
29 ௨௯ யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 38 ஆம் வருடத்தில் உம்ரியின் மகனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் 22 வருடங்கள் அரசாட்சி செய்தான்.
A-háp, con Ôm-ri lên ngôi làm vua Ít-ra-ên vào năm thứ ba mươi tám đời A-sa, vua Giu-đa, và A-háp làm vua hai mươi hai năm tại Sa-ma-ri.
30 ௩0 உம்ரியின் மகனாகிய ஆகாப், தனக்கு முன்னே இருந்த எல்லோரையும் விட யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்தான்.
A-háp con trai Ôm-ri làm điều ác trước mặt Chúa Hằng Hữu, còn hơn những vua trước.
31 ௩௧ நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்ததைப்போல அவன் சீதோனியர்களின் ராஜாவாகிய ஏத்பாகாலின் மகள் யேசபேலை திருமணம் செய்ததுமல்லாமல், அவன் போய் பாகாலையும் தொழுது அதைப் பணிந்துகொண்டு,
Cho rằng việc theo gót Giê-rô-bô-am phạm tội vẫn còn chưa đủ, nên A-háp cưới Giê-sa-bên, con gái Ết-ba-an, vua Si-đôn, làm vợ, phụng sự và thờ lạy thần Ba-anh.
32 ௩௨ தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தைக் கட்டினான்.
Vua cất miếu và bàn thờ cho Ba-anh tại Sa-ma-ri,
33 ௩௩ ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கும்படி தனக்கு முன்னே இருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைவிட அதிகமாகச் செய்துவந்தான்.
và dựng tượng A-sê-ra. Vậy, vua chọc giận Chúa Hằng Hữu, Đức Chúa Trời của Ít-ra-ên hơn cả các vua Ít-ra-ên trước.
34 ௩௪ அவனுடைய நாட்களிலே பெத்தேல் ஊரைச்சேர்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான்; யெகோவா நூனின் மகனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன்னுடைய இளைய மகனையும் சாகக்கொடுத்தான்.
Vào đời A-háp, Hi-ên, người Bê-tên, xây lại thành Giê-ri-cô. Khi ông đặt nền, con trưởng là A-bi-ram chết; lúc dựng cổng, con út là Sê-gúp chết, đúng như lời Chúa Hằng Hữu dùng Giô-suê con của Nun đã báo trước.