< 1 இராஜாக்கள் 14 >
1 ௧ அக்காலத்திலே யெரொபெயாமின் மகனாகிய அபியா வியாதியில் படுத்தான்.
У то време разболе се Авија, син Јеровоамов.
2 ௨ அப்பொழுது யெரொபெயாம் தன்னுடைய மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடி வேஷம் மாறி சீலோவுக்குப் போ; இந்த மக்களின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடு சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.
И Јеровоам рече жени својој: Устани и преобуци се да те не познаду да си жена Јеровоамова; па иди у Силом. Ето, онде је Ахија пророк, који ми је казао да ћу бити цар над овим народом.
3 ௩ நீ உன்னுடைய கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடம் போ; பிள்ளைக்கு நடக்கப்போகிறது என்னவென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.
И понеси десет хлебова и колача и жбан меда, па отиди к њему; он ће ти казати шта ће бити од детета.
4 ௪ யெரொபெயாமின் மனைவி அப்படியே செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்; அகியாவோ முதிர் வயதானதால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கமுடியாமல் இருந்தான்.
И учини тако жена Јеровоамова, и уставши отиде у Силом и уђе у кућу Ахијину. Ахија, пак, не могаше видети, јер му очи беху потамнеле од старости.
5 ௫ யெகோவா அகியாவினிடம்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாக இருக்கிற தன்னுடைய மகனுக்காக உன்னிடம் ஒரு ஆலோசனை கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்னபடியாகச் சொல்லவேண்டும்; அவள் உள்ளே நுழைகிறபோது, தன்னை வேறு பெண்ணாகக் காட்டுவாள் என்றார்.
Али Господ рече Ахији: Ето иде жена Јеровоамова да те пита за сина свог, јер је болестан; ти јој кажи то и то; а кад она дође учиниће се да је друга.
6 ௬ எனவே, வாசற்படிக்குள் நுழையும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை வேறு பெண்ணாக ஏன் காட்டுகிறாய்? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.
И Ахија чувши шуштање ногу њених кад уђе на врата, рече: Ходи, жено Јеровоамова; што се чиниш да си друга? Ја сам послан к теби да ти зло кажем.
7 ௭ நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்; மக்களிடத்திலிருந்து உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின்மேல் அதிபதியாக வைத்தேன்.
Иди, реци Јеровоаму: Овако вели Господ Бог Израиљев: Што сам те подигао између народа и поставио те вођом народу свом Израиљу,
8 ௮ நான் ராஜ்ஜியபாரத்தை தாவீது வீட்டாரினுடைய கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, என்னுடைய பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன்னுடைய முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என்னுடைய ஊழியனாகிய தாவீதைப்போல நீ இல்லாமல்,
И отрвши царство од дома Давидовог дадох теби, а ти не би као слуга мој Давид, који је држао заповести моје и ходио за мном свим срцем својим чинећи само што је право преда мном;
9 ௯ உனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தெய்வங்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் ஏற்படுத்தி, என்னை உனக்குப் பின்னே தள்ளிவிட்டாய்.
Него си радио горе од свих који бише пре тебе, и отишао си и начинио себи друге богове и ликове ливене да би ме дражио, па си ме бацио на леђа своја;
10 ௧0 ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் தீங்கை வரச்செய்து, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் கூட இல்லாதபடி, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து, குப்பை கழித்துப்போடப்படுவதுபோல யெரொபெயாமுக்கு பின்வருபவர்களை அவர்கள் முழுவதும் அழியும்வரை கழித்துப்போடுவேன் என்றார்.
Зато, ево, ја ћу пустити зло на дом Јеровоамов, и истребићу Јеровоаму и оно што мокри уза зид, и ухваћеног и остављеног у Израиљу, и дом ћу Јеровоамов омести као што се мете да га не остане ништа.
11 ௧௧ யெரொபெயாமின் குடும்பத்தார்களில் பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் சாப்பிடும்; யெகோவா இதை உரைத்தார்.
Ко Јеровоамов погине у граду, изјешће га пси, а ко погине у пољу, изјешће га птице небеске; јер Господ рече.
12 ௧௨ ஆகையால் நீ எழுந்து, உன்னுடைய வீட்டுக்குப்போ, உன்னுடைய கால்கள் பட்டணத்திற்குள் நுழையும்போது பிள்ளை செத்துப்போவான்.
А ти устани, иди кући својој; и кад ступиш ногама својим у град, одмах ће умрети дете.
13 ௧௩ அவனுக்காக இஸ்ரவேலர்கள் எல்லோரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் செய்வார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக அவனிடம் நல்ல காரியம் காணப்பட்டதால், யெரொபெயாமின் வீட்டாரில் அவன் ஒருவனே கல்லறைக்குப்போவான்.
И сав ће Израиљ плакати за њим, и погрепшће га; јер ће он сам од дома Јеровоамовог доћи у гроб, јер се на њему самом у дому Јеровоамовом нађе нешто добра пред Господом Богом Израиљевим.
14 ௧௪ ஆனாலும் யெகோவா தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பச்செய்வார்; அவன் அந்த நாளிலே யெரொபெயாமின் வீட்டாரை அழிப்பான்; இப்போதே இது நடக்கும்.
А Господ ће подигнути себи цара над Израиљем, који ће истребити дом Јеровоамов у онај дан; да, шта? Сад већ.
15 ௧௫ தண்ணீரில் நாணல் அசைகிறதுபோல, யெகோவா இஸ்ரவேலை முறித்து அசையச்செய்து, அவர்களுடைய முன்னோர்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடு பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கியதால், அவர்களை ஐபிராத்து நதிக்கு மறுபுறம் சிதறடித்து,
И удариће Господ Израиља да ће се заљуљати као што се љуља трска у води, и ишчупаће Израиља из ове добре земље, који је дао оцима њиховим, и разасуће их далеко преко реке зато што начинише себи лугове гневећи Господа.
16 ௧௬ யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவத்தினால் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.
И напустиће Израиља за грехе Јеровоамове, којима је грешио и на грех навео Израиља.
17 ௧௭ அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வரும்போது பிள்ளை செத்துப்போனான்.
Тада уста жена Јеровоамова и отиде и дође у Терсу; и кад ступи на праг кућни умре дете.
18 ௧௮ யெகோவா தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்செய்து, இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்காகத் துக்கம் அனுசரித்தார்கள்.
И погребоше га и сав Израиљ плака за њим по речи Господњој, коју рече преко слуге свог Ахије пророка.
19 ௧௯ யெரொபெயாம் யுத்தம்செய்ததும் ஆட்சி செய்ததுமான அவனுடைய மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
А остала дела Јеровоамова, како је војевао и како је царовао, ено записана су у дневнику царева Израиљевих.
20 ௨0 யெரொபெயாம் 22 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அவன் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அவனுடைய மகனாகிய நாதாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
А царова Јеровоам двадесет и две године; и почину код отаца својих, а Надав, син његов зацари се на његово место.
21 ௨௧ சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது 41 வயதாக இருந்து, யெகோவா தம்முடைய நாமம் வெளிப்படும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே 17 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாயின் பெயர் நாகமாள்.
А Ровоам, син Соломунов, цароваше над Јудом; беше Ровоаму четрдесет и једна година кад поче царовати, и царова седамнаест у Јерусалиму граду, који изабра Господ између свих племена Израиљевих да онде намести име своје. Матери његовој беше име Нама Амонка.
22 ௨௨ யூதா மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்களுடைய பிதாக்கள் செய்த எல்லாவற்றையும்விட அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.
И Јуда чињаше што је зло пред Господом; и гресима својим којим грешаху дражише Га већма него оци њихови свим што чинише.
23 ௨௩ அவர்களும் உயர்ந்த எல்லா மேட்டின் மேலும், பச்சையான எல்லா மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
Јер и они начинише себи висине и ступове и лугове на сваком високом хуму и под сваким зеленим дрветом.
24 ௨௪ தேசத்திலே ஆண் விபசாரக்காரர்களும் இருந்தார்கள்; யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட தேசங்களுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்.
А беше и аџувана у земљи, и чињаху све гадове народа које беше истерао Господ испред синова Израиљевих.
25 ௨௫ ரெகொபெயாம் அரசாட்சிசெய்யும் ஐந்தாம் வருடத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு எதிராக வந்து,
А пете године царовања Ровоамовог дође Сисак, цар мисирски, на Јерусалим.
26 ௨௬ யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்த பொன் கேடகங்கள் ஆகிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
И узе благо из дома Господњег и благо из дома царевог, све то узе; и узе све штитове златне које је начинио Соломун.
27 ௨௭ அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கல கேடகங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற காவற்காரர்களுடைய தளபதிகளின் கைகளில் ஒப்புவித்தான்.
И на њихово место начини цар Ровоам штитове од бронзе, и предаде их старешинама над стражарима, који чуваху врата дома царевог.
28 ௨௮ ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும்போது, அரண்மனைக் காவலர்கள் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்களுடைய அறையிலே வைப்பார்கள்.
И кад цар иђаше у дом Господњи, ношаху их стражари, а после их опет остављаху у ризницу своју.
29 ௨௯ ரெகொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
А остала дела Ровоамова, и све што је чинио, није ли записано у дневнику царева Јудиних?
30 ௩0 ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
А беше рат између Ровоама и Јеровоама једнако.
31 ௩௧ ரெகொபெயாம் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு தாவீதின் நகரத்தில் தன்னுடைய பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாய்க்கு நாகமாள் என்று பெயர்; அவனுடைய மகனாகிய அபியாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
И почину Ровоам код отаца својих, и би погребен код отаца својих у граду Давидовом, А име матери његовој беше Нама Амонка. А на место његово зацари се Авијам, син његов.